எலிசபெத் பிரௌனிங்

எலிசபெத் பிரௌனிங் (Elizabeth Barrett Browning, 6 மார்ச் 1806 – 29 சூன் 1861) பிரித்தானிய மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வாழ்ந்த புகழ் பெற்ற பெண் கவிஞர்.[1] இவர் , ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி.

எலிசபெத் பிரௌனிங்
பிறப்புஎலிசபெத் பரெட் பிரவுனிங்
(1806-03-06)6 மார்ச்சு 1806
டுரம், இங்கிலாந்து
இறப்பு29 சூன் 1861(1861-06-29) (அகவை 55)
புளோரன்சு, இத்தாலி
தொழில்கவிஞர்
தேசியம்ஆங்கிலேயர்

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை தொகு

1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் என்னும் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்கு மகளாய்ப் பிறந்தார். சிறு வயதில் எலிசபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிசபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார்.[2]

இல்லற வாழ்க்கை தொகு

தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமணமாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிசபெத் வீட்டை விட்டே வெளியே வந்தார்.1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிசபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.இறுதிக் காலத்தில் திடீரென எலிசபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார்.1850 இல் “போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese) வெளியானது.ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கையுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை.[2]

இறப்பு தொகு

1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்ஃபின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். நோய் முற்றி பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு இறந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Elizabeth Barrett Browning (15 August 1986). Sonnets from the Portuguese: A Celebration 0f Love. St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-312-74501-1. https://archive.org/details/sonnetsfromportu00brow_1. 
  2. 2.0 2.1 2.2 "Elizabeth Barrett Browning". பார்க்கப்பட்ட நாள் 09 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_பிரௌனிங்&oldid=3583159" இலிருந்து மீள்விக்கப்பட்டது