எல். விஜயலட்சுமி

இந்திய நடிகை

எல். விஜயலட்சுமி தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். 1960களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். தற்போது புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்[1].

எல். விஜயலட்சுமி
பிறப்பு1943
செயற்பாட்டுக்
காலம்
1961–1969
வாழ்க்கைத்
துணை
சுராஜ் குமார் டி தத்தா

திரைப்படத் துறையில் தொகு

புனேயில் பிறந்த விஜயலட்சுமி பரத நாட்டியத்தில் இவரது ஆர்வம் காரணமாக சிறுவயதிலேயே குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். பரத நாட்டியக் கலைஞர் குமாரி கமலாவிடம் முறையாக நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்தார். இவரது நாட்டியத் திறமை இவரை திரைப்பட உலகிற்கு இழுத்தது. முதன் முதலில் இவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடித்தார். 'பவானி' இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். ஆளுக்கொரு வீடு திரைப்படத்தில் முதன் முதலாகக் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் எதிரிகள் ஜாக்கிரதை, இரு வல்லவர்கள், ஸ்ரீதரின் சுமைதாங்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

ஜெயகாந்தனின் பாதை தெரியுது பார் தமிழ்த் திரைப்படம் நிமாய் கோஷ் என்பவரால் இந்தியில் தயாரிக்கப்பட்ட போது அதில் மீனாகுமாரியுடன் இணைந்து நடித்தார். சப்னம் படத்தில் மெகுமூதுடன் இணைந்து நடித்தார். பிரேம் நசீருடன் இணைந்து லைலா மஜ்னு உட்பட மூன்று திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் ”சிப்பாய் கூத்தரு”, ”ராமுடு பீமுடு”, மலையாளத்தில் ஞானசுந்தரி, லைலா மஜ்னு போன்ற திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவர் ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் நடித்தார்.

திருமணம் தொகு

இதன் பின்னர் சுராஜ் குமார் டி தத்தா என்னும் வேளாண்மை அறிவியலாளரைத் திருமணம் புரிந்து திரையுலகை விட்டு விலகினார். 1969 ஆம் ஆண்டில் மணிலாவிற்கு புலம் பெயர்ந்தார். அங்கு உயர் கல்வியைத் தொடர்ந்தார். தற்போது கணவர், மகன் ஆகியோருடன் குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கிறார். வர்ஜீனியா பலதொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணக்காளராகப் பணியாற்றுகிறார்[1].

நடித்த திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._விஜயலட்சுமி&oldid=3406058" இலிருந்து மீள்விக்கப்பட்டது