எஸ்/2004 என் 1 (S/2004 N 1) என்பது நெப்டியூனின் ஒரு சிறிய நிலவு ஆகும். ஏறத்தாழ 11 mi (18 km) மட்டுமே விட்டம் கொண்ட இந்நிலவு தனது தாய்க்கோளை ஒரு பூமி நாளுக்கும் சற்றுக் குறைவான நேரத்தில் சுற்றி வருகிறது. 2013 சூலையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. நெப்டியூனின் கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளில் இது பதினான்காவது ஆகும்.[4] ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி 2004 முதல் 2009 வரை எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்ததில் மார்க் ஷோவால்ட்டர் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.[5] 1989 ஆம் ஆண்டில் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்ற வொயேஜர் 2 விண்கலம் இந்நிலவு மிகச் சிறியதாக இருந்ததால் இதனைக் கண்டுபிடிக்கவில்லை.

S/2004 N 1
2009 முதல் ஹபிள் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு, நெப்டியூன், எஸ்/2004 என் 1, நெப்டியூனின் வளையங்கள், மேலும் சில நிலவுகள் காட்டப்பட்டுள்ளன.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) மார்க் ஷோவால்ட்டர், ஐ டி பேட்டர், ஜே. ஜே. லிசாவர், ஆர். எசு. பிரெஞ்சு[1]
கண்டுபிடிப்பு நாள் சூலை 1, 2013
அரைப்பேரச்சு ~ 105,283 கிமீ
மையத்தொலைத்தகவு ~ 0.000[3]
சுற்றுப்பாதை வேகம் 0.9362 நா[2]
சாய்வு
[3]
இது எதன் துணைக்கோள் நெப்டியூன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 8-10 கிமீ[2]
எதிரொளி திறன்மிகக் குறைவு எனக் கருதப்படுகிறது
தோற்ற ஒளிர்மை 26.5[2]

இயல்புகள் தொகு

நெப்டியூனின் ஏனைய உள்ளக நிலவுகளைப் போன்று எஸ்/2004 என் 1 இன் மேற்பரப்பும் மிகவும் இருண்டு காணப்படுகின்றது.[6] இவற்றின் வடிவவியல் வெண் எகிர்சிதறல்கள் 0.07 முதல் 0.10 வரை ஆகும். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 26.5 ஆக இருப்பதால் இதன் விட்டம் 16 முதல் 20 கிலோமீட்டர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது நெப்டியூனின் மிகச் சிறிய இயற்கைத் துணைக்கோள் ஆகும்.

 
நெப்டியூனின் நிலவுகள்: எஸ்/2004 என் 1 இன் ஒழுக்கு காட்டப்பட்டுள்ளது, டிரைட்டன் வெளிப்பக்கத்தில் சுற்றுகிறது.

இத்துணைக்கோள் நெப்டியூனை ஒரு முறை சுற்றி வர 22 மணி 28.1 நிமி (0.9362 நாட்கள்) எடுக்கிறது.[2] இதன் அரைப்பேரச்சு 105,283 கிமீ, இது பூமியின் நிலவுடன் ஒப்பிடும் போது கால்வாசிக்குச் சற்றுக் கூடுதலும், நெப்டியூனின் வளையங்களின் சராசரி ஆரையின் சுமார் இரு மடங்கும் ஆகும். இத்துணைக்கோளின் சாய்வும் வட்டவிலகலும் சுழியத்திற்குக் கிட்டவாக உள்ளது.[2] இது லரிசா, புரோடியசு ஆகிய நெப்டியூனின் நிலவுகளுக்கு இடையில் சுற்றி வருகிறது.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எஸ்/2004 என் 1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Yeomans, D. K. (2013-07-15). "Planetary Satellite Discovery Circumstances". JPL Solar System Dynamics web site. Jet Propulsion Lab. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17. {{cite web}}: External link in |work= (help); Unknown parameter |coauthors= ignored (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Kelly Beatty (15 சூலை 2013). "Neptune's Newest Moon". Sky & Telescope இம் மூலத்தில் இருந்து 2013-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130716121048/http://www.skyandtelescope.com/news/Neptunes-Newest-Moon-215535121.html. பார்த்த நாள்: 15 சூலை 2013. 
  3. 3.0 3.1 Editors of Sky & Telescope. "A Guide to Planetary Satellites". Sky & Telescope web site. Sky & Telescope. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17. {{cite web}}: |last= has generic name (help)
  4. "Hubble Finds New Neptune Moon". Space Telescope Science Institute. 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  5. "Nasa's Hubble telescope discovers new Neptune moon". பிபிசி. 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
  6. Showalter, M. R. (2013-07-15). "How to Photograph a Racehorse ...and how this relates to a tiny moon of Neptune". Mark Showalter's blog. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16. {{cite web}}: External link in |work= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்/2004_என்_1&oldid=3546429" இலிருந்து மீள்விக்கப்பட்டது