ஏடிசு

கிரேக்க கடவுள் (எமன்)

ஹேட்ஸ் (Hades, /ˈhdz/; பண்டைக் கிரேக்கம்ᾍδης அல்லது Άͅδης, ஆய்டேஸ்) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பாதாள கடவுள் ஆவார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் புளூட்டோ ஆவார். இவருக்கு இணையானா இந்து கடவுள் யமன். இவர் மரணித்தவர்கள், பணக்காரர்கள் போன்றோரின் கடவுள் ஆவார். இவரது பாதாள உலகின் வாயிலில் செர்பெரசு எனும் நாய் காணப்படுகின்றது. இது பாதாள உலகத்தினுள் எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாக்கின்றது. குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மூத்த மகன் ஹேட்ஸ். டைட்டன்களை வீழ்த்திய பிறகு சியுஸ் தன் சகோதரர்களான பொசைடன் மற்றும் ஹேட்ஸ் ஆகியோருடன் உலகைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி வானம் சியுஸ்கும் கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஹேட்ஸ்க்கும் கிடைத்தது.

ஹேட்ஸ்
ஈராக்லியோன் தொல்லியல் சார்ந்த அருங்காட்சியகம்
இடம்பாதாள உலகம்
துணைபெர்சிஃபோன்
பெற்றோர்கள்குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரிபொசைடன், டிமிடர், எசுடியா, எரா மற்றும் சியுசு
குழந்தைகள்மகாரியா, மெலினோவே மற்றும் சாக்ரியூசு

ஹேட்ஸ் மற்றும் பெர்சிஃபோன் தொகு

 
பெர்சிஃபோன் மற்றும் ஹேட்ஸ்

டிமிடரின் மகளான பெர்சிஃபோன் ஹேட்ஸ்ன் மனைவி ஆவார். ஒருநாள் பெர்சிஃபோன் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது அவள் அழகில் மயங்கிய ஹேட்ஸ் அவளை பாதாள உலகிற்கு கடத்திச் சென்றான். இதனால் விவசாயக் கடவுளான டிமிடர் வருந்தினார். அதன் காரணமாக பூமியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண எண்ணிய சியுஸ், தூது கடவுளான ஹெர்மிஸ் பாதாள உலகிற்குச் சென்று சமாதானம் பேசுமாறு கூறினார். ஹேட்ஸ் பெர்சிஃபோனை விடுவிக்க சம்மதித்தான். ஆனால் அவள் பாதாள மாதுளைப்பழத்தை உண்டுவிட்டதால் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் மட்டும் அவள் ஹேட்ஸ் உடன் பாதாள உலகில் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பயிர்கள் வாடும் கோடைக்காலம் அல்லது குளிரினால் வீணாகும் குளிர்காலம் போன்ற காலங்களில் பெர்சிஃபோன் பாதாள உலகில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் தொகு

ஸ்டைஸ் நதியை கடந்தே பாதாள உலகம் செல்லவேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. This chart is based upon Hesiod's Theogony, unless otherwise noted.
  2. According to Homer, Iliad 1.570–579, 14.338, Odyssey 8.312, Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.
  3. According to Hesiod, Theogony 927–929, Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.
  4. According to Hesiod, Theogony 886–890, of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51–52, 83–84.
  5. According to Hesiod, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99–100.
  6. According to Homer, Aphrodite was the daughter of Zeus (Iliad 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (Iliad 5.370–71), see Gantz, pp. 99–100.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடிசு&oldid=2618664" இலிருந்து மீள்விக்கப்பட்டது