ஏவுகணை எதிர்த்தாக்குதல்

ஏவுகணைகளிடமிருந்து பாதுகாக்க (Missile countermeasure) பல வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக இது இரண்டு வழிகளில் பிரிக்கப்படுகிறது. செயலற்றமுறை மூலம் எதிர்த்தல், செயலின் மூலம் எதிர்த்தல் ஆகும்.

எறிகணைகளை AH-64 அபாச்சி விமானம் மூலம் ஏவுதல்.

செயலற்றமுறை மூலம் எதிர்த்தல் தொகு

இவ்வகை ஏவுகணைகள் பெரும்பாலும் விமானத்தால் வெளியிடப்படும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு தனது இலக்குகளை அடைவதன் காரணத்தால், அகச்சிவப்புக் கதிர் வெளியற்றதை குறைத்தல் மூலம் இந்த ஏவுகணை தாக்குதலை தவிர்க்கலாம். ஆனால் இந்த முறையால் பலன் அதிகம் இல்லை.

செயலின் மூலம் எதிர்த்தல் தொகு

இவ்வகை எதிர்த் தாக்குதல் சில வினைகளை ஊக்குவிப்பதன் மூலம் நடைபெறுகிறது. இதன் வகைகளை பின்வருமாறு அறியலாம். 1. பதர்கள் ( Chaff ), 2. பட்டொளி ( Flare ), 3. ஏவுகணைகள் முன்கூட்டியே அறியும் கருவி ( Missile Approach Warning System-MAWS), 4. அகச்சிவப்புக் கதிர்களை நேரடியாக வெளிபடுத்துதல் போன்ற முறைகளாகும்.

பதர்கள் தொகு

 
பதர்கள் கொள்கலன்.

பதர்கள் (chaff) ஒரு மேகம் போன்று வானில் தென்படும். இது ரேடர் கருவிகளை ஏமாற்ற விமானத்திலிருந்து வீசப்படுகிறது. இவை பிளாஸ்டிக்கினால் ஆன மின் மற்றும் மின்காந்த அலைகளைக் கடத்தக் கூடிய பொருள்களால் முலாம் போன்று பூசப்பட்டிருக்கும். இந்த மின்காந்த அலை மாற்றம் கதிரலைக் கும்பா ( ரேடர் ) கருவிகளின் உணர்வில் மாற்றங்களை உண்டுபடுத்துகிறது. இதனால் ரேடர் தவறாக செயல்படும். இதனால் ரேடரால் செலுத்தப்படும் ஏவுகணைகளின் தனது இலக்கை அடைவதிலிருந்து தவறுகிறது.

பட்டொளி தொகு

 
வெப்பத்தை கவர்ந்து இலக்கை அடையும் எவுகணை, எரிகனைகளால் கவரப்படுகிறது

எறிகணைகள் (பட்டொளி, flare) விமானகளிலிருந்து வீசப்படுகிறது. இது வெப்பத்தை கவர்ந்து இலக்கை அடையும் எவுகணைகளிடம் இருந்து போர் விமானகள் தங்களை பாதுகாத்துகொள்ளும் பொருட்டு வீசப்படுகிறது. இவ்வகை எரிகணைகள் எரிந்து வெப்பத்தை வெளிபடுத்தும் (Pyrophoric) பொருள்களால் தயாரிக்கபடுகிறது. இவற்றின் வெப்பத்தால் கவரப்பட்ட ஏவுகணைகள் இலக்கை தவறவிடுகிறது.

ஏவுகணைகள் முன்கூட்டியே அறியும் கருவி தொகு

ஏவுகணைகளை முன்கூட்டியே அறியும் கருவிகள் (Missile Approach Warning System-MAWS) மற்ற செயலின் மூலம் எதிர்க்கும் கருவிகளுக்கு உதவி செய்கிறது. இது ஏவுகணைகளை முன்னரே கண்டுபிடித்து விமானிக்கு எச்சரிக்கை கொடுத்து அதன் திசையையும் அறிவிக்கும்.

அகச்சிவப்புக் கதிர்களை நேரடியாக வெளிபடுத்தும் கருவி தொகு

ஏவுகணையின் திசையை அறிந்தவுடன் அகச்சிவப்புக் கதிர்களை நேரடியாக வெளிபடுத்தும் கருவி (Directed Infrared Countermeasures-DIRCM), அகச்சிவப்புக் கதிர்களை ஏவுகணைகளின் திசை உணரிகளின் மேல் செலுத்தும். இந்த அகச்சிவப்புக் கதிர்கள் ஏவுகணைகளின் திசை உணரிகளை செயலிழக்க செய்து இலக்கை தவறவிடும்படி செய்கிறது.

 
அகச்சிவப்புக் கதிர்களை நேரடியாக வெளிபடுத்தும் கருவி (IRCM)

மேற்கோள்கள் தொகு

  • Dr. Michael Ashkenazi, Princess Mawuena Amuzu, Jan Grebe, Christof Kögler and Marc Kösling. MANPADS A Terrorist Threat to Civilian Aviation? Chapter 6 MANPADS countermeasures, Page No: 104-105. 
  • David H. Pollock. The Infrared & Electro-Optical Systems Handbook. Countermeasure Systems, Volume 7.