ஏ. முகம்மது ஜான்

இந்திய அரசியல்வாதி

ஏ.முகம்மது ஜான் (A. Mohammed John)(1948-23 மார்ச் 2021) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.[2] .[3]

முகம்மது ஜான் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக 2019ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்

தொழில் தொகு

முகம்மது ஜான் ஒரு தோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தொழிலதிபராக இருந்தார்.

இறப்பு தொகு

முகமது ஜான் 23 மார்ச் 2021 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  4. அதிமுக எம்.பி. முகமது ஜான் திடீர் மரணம்{https://www.hindutamil.in/news/tamilnadu/649577-aiadmk-mp-mohammed-john-died-suddenly-of-a-heart-attack.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._முகம்மது_ஜான்&oldid=3917538" இலிருந்து மீள்விக்கப்பட்டது