ஐங்கரிச்சர்க்கரை

ஐங்கரிச்சர்க்கரை (pentose) என்பது 5 கார்பன் (கரி) அணுக்களை உடைய ஒற்றைச்சர்க்கரை ஆகும்.[1] ஐங்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப்பிரிக்கலாம்.

ஆல்டோ ஐங்கரிச்சர்க்கரை தொகு

இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் ஆல்டிஹைடு தொகுதியைக் கொண்டுள்ளன. ஆல்டிஹைடு தொகுதி எப்போதும் கரியணுச்சங்கிலியின் முதல் இடத்தில் இருக்கும் என்பது பொது விதி.

 

D-அரபினோஸ்
 

D-எல்சையோஸ்
 

D-ரைபோஸ்
 

D-சைலோஸ்
 

L-அரபினோஸ்
 

L-எல்சையோஸ்
 

L-ரைபோஸ்
 

L-சைலோஸ்

கீட்டோ ஐங்கரிச்சர்க்கரை தொகு

இவை தங்கள் செயல் தொகுதியின் இடத்தில் கீட்டோன் தொகுதியைக் கொண்டுள்ளன. கீட்டோன் தொகுதி முதல் கரியணுவில் இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லையாதலால் கீட்டோன் தொகுதி இரண்டு அல்லது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும்.

 

D-ரிபு‌லோஸ்
 

D-சைலுலோஸ்
 

L-ரிபுலோஸ்
 

L-சைலுலோஸ்

முக்கியத்துவம் தொகு

ஐங்கரிச்சர்க்கரையான ரைபோசு மரபுப் பொருளான ‌டி.என்.ஏ வின் அடிப்படைக் கூறு ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Pentose, Merriam-Webster


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்கரிச்சர்க்கரை&oldid=2744618" இலிருந்து மீள்விக்கப்பட்டது