இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு (Isotones) அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக அணுக்கள் போரான்-12 இனையும் கார்பன்-13 இனையும் எடுத்துக் கொண்டால், போரானில் 5 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன, கார்பனில் 6 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன. எனவே போரான்-12 உம் கார்பன்-13 உம் ஐசோடோன்களாகும். மேலும் குளோரின்-37, ஆர்கான்-38, பொட்டாசியம்-39, கால்சியம்-40 முதலிய அணுக்களும் ஐசோடோன்களாகும் இவைகளில் முறையே 20 நியூட்ரான்களுள்ளன.

Nuclide halflives colorcoded.

செருமானிய இயற்பியலாளர் கே. கூகன்கெய்மர் சமதானியில் உள்ள புரோத்தனை அகற்றிவிட்டு நியூத்திரனைச் சேர்த்து ஐசோடோன் என முதலில் குறித்தார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோடோன்&oldid=1470150" இலிருந்து மீள்விக்கப்பட்டது