ஐபிஎம் சைமன்

ஐபிஎம் சைமன் தனிநபர் தகவல்தொடர்புக் கருவி (IBM Simon Personal Communicator) ஐபிஎம்மால் வடிவமைக்கப்பட்டு மிட்சுபிசு எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கபட்ட கையடக்க தொடுதிரை செல்லிடத் தொலைபேசி மற்றும் தனிநபர் எண்மத்துணை ஆகும்[1][2][3][4]. இத்தகைய 50,000 கருவிகளை பெல்சவுத் செல்லுலர் நிறுவனம் ஆகத்து 1994க்கும் பெப்ரவரி 1995க்கும் இடையே ஐக்கிய அமெரிக்காவில் விற்றுள்ளது. தொலைபேசி மற்றும் தனிநபர் எண்மத்துணை செயற்பாடுகளை ஒருங்கிணைத்த முதல் நுண்ணறிபேசி இதுவே ஆகும்.

ஐபிஎம் சைமன்
தனிநபர் தகவல்தொடர்புக் கருவி
சைமன் தனிநபர் தகவல்தொடர்புக் கருவி, தனது மின்னூட்டத் தளத்தில்
தயாரிப்பாளர்மிட்சுபிசி எலெக்ட்ரிக் கார்ப்.
சேவையாளர் பெல்சவுத் செல்லுலர்
ஐக்கிய அமெரிக்கா ஆகத்து 16, 1994 (1994-08-16) (பெல்சவுத் செல்லுலர்)
இயங்கு தளம்டேட்டாலைட் ரோம்-டாசு
உள்ளீடு
CPUவாதெம் 16 மெகா எர்ட்சு, 16-பிட், x86-ஒத்தியங்கக்கூடிய
நினைவகம்1 மெகாபைட்
பதிவகம்1 மெகாபைட்
பிணையங்கள்மேம்பட்ட நகர்பேசி முறைமை
தொடர்பாற்றல்
  • 2400-bps Hayes-compatible modem
  • 33-pin connector
  • 9600-bps Group 3 send-and-receive fax
  • I/O connection port
  • PCMCIA type 2
மின்கலன்7.5 வோல்ட் நிக்-காட் மின்கலன்
அளவு
  • 8 அங் (200 mm) உயரம்
  • 2.5 அங் (64 mm) அகலம்
  • 1.5 அங் (38 mm) ஆழம்
எடை18 oz (510 g)
வடிவம்செங்கல்
முந்தையதுஆங்க்ளர் (குறிப் பெயர்)
பிந்தையதுநியான் (குறிப் பெயர்)
அறிமுக விலை
  • US$899 (2-ஆண்டு ஒப்பந்தம்)
  • US$1099 (ஒப்பந்தமின்றி)
நிறுத்தப்பட்ட நாள்பெப்ரவரி 1995 (1995-02)

வரலாறு தொகு

நவம்பர் 23, 1992இல் நெவாடாவின் லாசு வேகாசு நகரில் நடந்த கொம்டெக்சு கணினி, தொழினுட்பக் கண்காட்சியில் ஐபிஎம் ஆங்க்ளர் எனக் குறிப்பெயரிடப்பட்ட முன்வடிவக் கருவியை அறிமுகப்படுத்தியது. இது நகர்பேசியையும் தனிநபர் எண்மத்துணையையும் ஒருங்கிணைத்திருந்தது; இதனால் பயனர் தொலைபேசி அழைப்புக்களை ஏற்கவும் விடுக்கவும் முடிந்ததோடு தொலைநகல், மின்னஞ்சல் மற்றும் நகர்பேசிப் பக்கங்களையும் பயன்படுத்த முடிந்தது. கண்காட்சிக்கு வந்தவர்களும் பத்திரிகையாளர்களும் இந்தக் கருவியில் கூடிய ஆர்வம் காட்டினர். இக்கருவி அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாளே, யுஎஸ்ஏ டுடே என்ற இதழ் தனது பொருளியல் பகுதியின் முதல் பக்கத்தில் இதன் ஒளிப்படத்தை வெளியிட்டது.[1][5][6]

இக்கருவியில் ஆர்வம் காட்டிய பெல்சவுத் நிறுவனம் இதற்கு "சைமன் தனிநபர் தகவல்தொடர்பாளர்" என்றப் பெயரைச் சூட்டியது; நவம்பர் 1993இல் கம்பியில்லா உலக மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்குக் கொணர்ந்தது.[1] பெல்சவுத் மே 1994 முதலே விற்பனைக்கு விடத் தயாராகவிருந்தும் இக்கருவியின் மென்பொருளில் ஏற்பட்ட தொழினுட்பச் சிக்கல்களால் ஆகத்து 16, 1994 அன்றுதான் வெளியிட முடிந்தது. தான் சேவை வழங்கிய 15 மாநிலங்களிலும் US$899க்கு இரண்டாண்டு ஒபந்தத்துடனும் ஒப்பந்தமின்றி US$1099க்கும் விற்கலாயிற்று. பின்னதாக இந்த விலையை இரண்டாண்டு ஒப்பந்தத்துடன் US$599 ஆகக் குறைத்தது.[2][7]

சந்தையில் ஆறு மாதங்கள் விற்கப்பட்ட காலத்தில் பெல் சவுத் ஏறத்தாழ 50,000 அலகுகளை விற்றது.[1]

1997 வரை நுண்ணறிபேசி ("smartphone") என்ற சொல் புழக்கத்தில் வராதபோதும், சைமனின் சிறப்புக்கூறுகளையும் திறன்களையும் நோக்குங்கால் இதுவே முதல் நுண்ணறிபேசி எனக் குறிப்பிடலாம்.[1][8][9]

 
ஐபிஎம் சைமன் தனிநபர் தகவல் தொடர்பாளர் விற்கையில் அதற்கேயான பாதுகாப்பு தோலுறை வழங்கப்பட்டது.

சிறப்புக்கூறுகள் தொகு

சைமனில் தொலைபேசி அழைப்புக்களை விடுக்கவும் ஏற்கவும் இருந்த வசதிகளைத் தவிர தொலைப்பிரதிகளையும், மின்னஞ்சல்களையும் நகர்பேசி அகவி அழைப்புக்களை அனுப்பவும் பெறவும் வசதி இருந்தது; முகவரிப் புத்தகம், நாட்காட்டி, சந்திப்பு ஒருங்கிணைப்பு, கணக்குக் கருவி, உலக நேரங்காட்டி, மின்னினியல் குறிப்புப் புத்தகம், கையால் எழுதும் உரை விளக்கங்கள், சீர்தரப்படுத்தப்பட்ட எழுதுகோல் மற்றும் தொடுதிரை தட்டச்சுக் காட்சிகள் போன்ற கூறுகளைக் கொண்டிருந்தது.[10]

துணைப்பொருட்கள் தொகு

ஒவ்வொரு சைமனும் மின்னூட்டு தளம், இரண்டு நிக்கல்-காட்மியம் மின்கலங்கள், பாதுகாப்பு தோலுறையுடன் விற்கப்பட்டன. விருப்பத்தேர்வாக மோட்டாரோலா வடிவமைத்த பிசிஎம்சிஐஏ அகவி அட்டையும் மணினியுடன் இணைக்க ஆரெசு232 பொருத்துகை தடக்கம்பியும் எளிய பழைய தொலைபேசிகள் மூலமாக அழைப்புக்களை விடுக்க RJ11 பொருத்துகை தடக்கம்பியும் விற்கப்பட்டன. ஆர்ஜே தடக்கம்பியின் வழியாக பயனாளர்கள் கட்டணமிக்க நகர்பேசிப் பிணையத்தைப் பயன்படுத்தாது நிலைபேசிப் பிணையங்களைப் பயன்படுத்த முடிந்தது. 1994இல் நகர்பேசிச் சேவை வழங்கப்படாத இடங்களிலும் இது பயன்பட்டது.

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sager, Ira (June 29, 2012). "Before IPhone and Android Came Simon, the First Smartphone". Bloomberg Businessweek. பன்னாட்டுத் தர தொடர் எண்:2162-657X. http://www.businessweek.com/articles/2012-06-29/before-iphone-and-android-came-simon-the-first-smartphone. பார்த்த நாள்: June 30, 2012. "Simon was the first smartphone. Twenty years ago, it envisioned our app-happy mobile lives, squeezing the features of a cell phone, pager, fax machine, and computer into an 18-ounce black brick.". 
  2. 2.0 2.1 O'Malley, Chris (December 1994). "Simonizing the PDA". Byte 19 (12): 145–148. பன்னாட்டுத் தர தொடர் எண்:0360-5280 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 21, 1999 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19990221174856/http://byte.com/art/9412/sec11/art3.htm. பார்த்த நாள்: June 30, 2012. "The CPU is a 16-bit x86-compatible processor running at 16 MHz, a single-chip design manufactured by Vadem. Simon runs a version of DOS called ROM-DOS, from Datalight...". 
  3. "Bellsouth, IBM Unveil Personal Communicator Phone". Mobile Phone News. November 8, 1993. பன்னாட்டுத் தர தொடர் எண்:0737-5077. http://findarticles.com/p/articles/mi_m3457/is_n43_v11/ai_14297997/. பார்த்த நாள்: June 30, 2012. "The phone currently is based on an AMPS standard...". 
  4. "BellSouth: IBM Simon PDA Cellphone". RetroCom. RetroCom. பார்க்கப்பட்ட நாள் June 30, 2012. Graphic display: 160 x 293
  5. Schneidawind, John (November 23, 1992). "Poindexter Putting Finger on PC Bugs; Big Blue Unveiling". USA Today: p. 2B. 
  6. Bradner, Erin (July 21, 2011). "Are You an Innovation Giant?". Designing the User Experience at Autodesk. ஆட்டோடெஸ்க். Archived from the original on நவம்பர் 24, 2012. பார்க்கப்பட்ட நாள் November 23, 2012.
  7. "IBM's Plans to Ship Simon Put On Hold for Time Being". Mobile Phone News. April 4, 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:0737-5077. http://findarticles.com/p/articles/mi_m3457/is_n14_v12/ai_14973288/. பார்த்த நாள்: June 30, 2012. "Technical issues, resulting from the integration of Simon's cellular faxing capability, were discovered early in the manufacturing and development cycle as IBM's quality assurance testing was being conducted. IBM will hold up shipments of the device until the bugs are worked out.". 
  8. "Ericsson GS88 Preview". Eri-no-moto. 2006. Archived from the original on ஜனவரி 11, 2012. பார்க்கப்பட்ட நாள் December 15, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Penelope Box". Stockholm Smartphone. 2010. Archived from the original on பிப்ரவரி 3, 2012. பார்க்கப்பட்ட நாள் December 15, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. (PDF) Simon Says "Here's How!" - Users Manual. IBM. 1994. Part Number 83G9872 இம் மூலத்தில் இருந்து ஜூலை 29, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6IU96jeje?url=http://research.microsoft.com/en-us/um/people/bibuxton/buxtoncollection/a/pdf/Simon%20User%20Manuals.pdf. பார்த்த நாள்: July 29, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபிஎம்_சைமன்&oldid=3546795" இலிருந்து மீள்விக்கப்பட்டது