ஒசூர் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

ஒசூர் தொடருந்து நிலையம் (Hosur railway station, நிலையக் குறியீடு:HSRA) இந்தியாவின், தமிழகத்தின், ஒசூர் மாநகரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. சேலம் - பெங்களூரு பாதை 1913-இல் போடப்பட்டது, 1941-இல் இப்பாதை மூடப்பட்டது. மீண்டும் 28 ஆண்டுகள் கழித்து பெங்களூர் - சேலம் தொடர்வண்டி பாதை மீட்டர் கேஜ் பாதையாக போடப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. 1996-இல் இப்பாதை அகலப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.[1] இதன் பிறகு 2017-18 ஆண்டில் ஒசூர் -பெங்களுர், தருமபுரி இடையே மின்சார தொடருந்து இயக்குவதற்காக மின்மயமாக்கும் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகளில் ஒசூர் -பெங்களுர் வரையிலான மின்மயமாக்கப்பணிகள் 2020 ஆண்டின் இறுதியில் முழுமையடைந்தது.[2] இதனையடுத்து 2020 திசம்பர் 6 அன்று ஒசூர் - பெங்களுர் பயணிகளுக்கான முதல் மின்சார தொடருந்து பயணம் தொடங்கியது.[3]

ஒசூர் தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ரயில் நிலைய சாலை, ஒசூர்,
 இந்தியா
ஆள்கூறுகள்12°43′06″N 77°49′22″E / 12.7184°N 77.8229°E / 12.7184; 77.8229
ஏற்றம்895 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்மேற்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்சேலம் - பெங்களூர் வழித்தடம், தருமபுரி வழியாக
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுHSRA
இந்திய இரயில்வே வலயம் தென்மேற்கு தொடருந்து மண்டலம்
இரயில்வே கோட்டம் பெங்களூர்
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
ஒசூர் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
ஒசூர் தொடருந்து நிலையம்
ஒசூர் தொடருந்து நிலையம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
ஒசூர் தொடருந்து நிலையம் is located in இந்தியா
ஒசூர் தொடருந்து நிலையம்
ஒசூர் தொடருந்து நிலையம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வசதிகள் தொகு

இந்த ரயில் நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன.

  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
  • புத்தக விற்பனை நிலையம்
  • ஐ. ஆர். சி. டி. சி தேனீரகம்
  • ஆவின் பாலகம்
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
  • ரயில் இருப்பிடங்காட்டி/ ஓடும் நிலை அறியும் சேவை
  • ஒலிபெருக்கி அறிவிப்பு சேவை

போக்குவரத்து தொகு

இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டிகள் [4]

விரைவுத் தொடருந்து

} பயணியர் தொடருந்து
எண். தொடர்வண்டியின் எண்: தொடக்கம் சேரும் இடம் வண்டியின் பெயர் பயண முறை
1. 17235/17236 பெங்களூர் நாகர்கோயில் விரைவுவண்டி தினமும்
2. 16235/16236 தூத்துக்குடி மைசூர் தூத்துக்குடி மைசூர் விரைவுவண்டி தினமும்
3. 16231/16232 மயிலாடுதுறை மைசூர் மயிலாடுதுறை மைசூர் விரைவுவண்டி தினமும்
4. 11013/1104 குர்லா, மும்பை கோயம்புத்தூர் விரைவுவண்டி தினமும்
5. 16527/16528 யஷ்வந்த்பூர், பெங்களூர் கண்ணூர் விரைவுவண்டி தினமும்
6. 12677/12678 பெங்களூர் எர்ணாகுளம் விரைவுவண்டி தினமும்
7. 12257/12258 யஷ்வந்த்பூர் கொச்சுவேலி, திருவனந்தபுரம் கரீப் ரத் விரைவுவண்டி வாரத்தில் மூன்று நாட்கள்
8. 11021/11022 தாதர் திருநெல்வேலி சாளுக்கியா விரைவுவண்டி வாரத்தில் மூன்று நாட்கள்
9. 16573/16574 யஷ்வந்த்பூர் புதுச்சேரி விரைவுவண்டி வாரமொரு முறை
10. 12647/12648 கோயம்புத்தூர் ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் கொங்கு விரைவுவண்டி வாரமொரு முறை
11. 20641/20642 கோயம்புத்தூர் பெங்களூர் கோவை வந்தே பாரத் அதிவிரைவு வண்டி வாரத்தில் ஆறு நாட்கள்
}

சான்றுகள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

எண். வண்டி எண்: தொடக்கம் சேரும் இடம் வண்டியின் பெயர் பயண வரத்து
1. 76553/76554 பெங்களூர் தருமபுரி பயணிகள் தொடருந்து தினமும்
2. 56421/56422 சேலம் யஷ்வந்த்பூர் பயணிகள் தொடருந்து தினமும்
3. 56513/56514 காரைக்கால் பெங்களூர் பயணிகள் தொடருந்து தினமும்
4. 06591/06592 யஷ்வந்த்பூர் ஓசூர் பயணிகள் தொடருந்து ஞாயிறு தவிர ஏனைய நாட்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசூர்_தொடருந்து_நிலையம்&oldid=3869148" இலிருந்து மீள்விக்கப்பட்டது