ஒற்றைக்கோளம்

ஒற்றைக்கோளம் (Unisphere) புவியின் சார்பீடாக எஃகினால் கட்டமைக்கப்பட்ட 140 அடி உயர, கோளமாகும். நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவில் பிளஷிங் மெடோசு–கோரோனா பூங்காவில் அமைந்துள்ள இந்தக் கட்டமைப்பு இந்த பரோவிற்கான அடையாளமாக விளங்குகிறது.

ஒற்றைக்கோளமும் பூங்காவும் - ஆகத்து 2010

விண்வெளி யுகத்தை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்ட ஒற்றைக்கோளம் 1964-65 நியூயார்க் உலகக் கண்காட்சியின் தோற்றவுருவாக திட்டமிடப்பட்டது. இந்தக் கண்காட்சியின் கருத்துரு "புரிதல் மூலம் அமைதி" என்பதற்கேற்ப ஒற்றைக்கோளம் உலக கூட்டுச்சார்பை வலியுறுத்துகிறது.[1] இதனை கில்மோர் டி. கிளார்க் என்பவர் வடிவமைத்துள்ளார்.

மேற்சான்றுகள் தொகு

பிற வலைத்தளங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைக்கோளம்&oldid=3237318" இலிருந்து மீள்விக்கப்பட்டது