ஒஸ்டின் பெர்னாண்டோ

கலுப்பகே ஒஸ்டின் பெர்னாண்டோ (Kalupage Austin Fernando) இலங்கை அரசு அதிகாரியும், கிழக்கு மாகாணத்தின் ஆளுநரும் ஆவார்.

ஒஸ்டின் பெர்னாண்டோ
Austin Fernando
கிழக்கு மாகாணத்தின் 2வது ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 சனவரி 2015
முன்னையவர்மொகான் விஜேவிக்கிரம
தனிப்பட்ட விவரங்கள்
முன்னாள் கல்லூரிபேராதனைப் பல்கலைக்கழகம்
தொழில்குடிமை அதிகாரி
இனம்சிங்களவர்

ஆரம்ப வாழ்க்கை தொகு

பெர்னாண்டோ தென்னிலங்கையில் காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்றார்.[1] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] பின்னர் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]

பணி தொகு

பெர்னாண்டோ 1963 ஆம் ஆண்டில் நாகொடை ரோயல் தேசியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1967 இல் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார்.[2][3] மட்டக்களப்பு, மாத்­தளை மாவட்­டங்­களில் உதவி தேர்தல் ஆணை­யா­ள­ரா­கவும், பொலன்னறுவை, நுவரெலியா மாவட்டங்களில் அரச அதிபராகவும் பணியாற்றினார்.[2] பின்னர் அவர் கூட்டுறவு ஆணையாளர், பதிவாளர் நாயகம், புனருத்தாரண அமைச்சின் செயலாளர், அஞ்சல்மா அதிபர், இரத்தினக்கல் கூட்டுத்தாபனத் தலைவர், உள்ளூராட்சி மாகாணசபை அலுவல்கள் அமைச்சு, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சுகளின் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தார்.[2] ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராகப் பணியாற்றிய பின்னர் 2001 டிசம்பரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

2015 ஆம் ஆண்டு சனவரியில் தெரிவான புதிய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பெர்னாண்டோவை சனாதிபதி ஆலோசகராக 2015 சனவரி 15 இல் நியமித்தார்.[4][5] 2015 சனவரி 27 அன்று கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[6][7]

ஒஸ்டின் பெர்னாண்டோ My Belly is White: Reminiscences of a Peacetime Secretary of Defence என்ற நூலை எழுதியுள்ளார்.[8][9]

மேற்கோள்கள் தொகு

  1. Abeywardena, Hemantha (16 சனவரி 2015). "Austin Fernando: a model civil servant as new presidential advisor". ஏசியன் டிரிபியூன். http://www.asiantribune.com/node/86236. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Austin Fernando’s reminiscences in controversial new book". டெய்லி நியூஸ். 23 சூலை 2008. http://archives.dailynews.lk/2008/07/23/art03.asp. 
  3. Miranda, Sujitha (17 பெப்ரவரி 2013). "Nagoda Royal’s triumphs adds beauty and value to the village". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/130217/education/nagoda-royals-triumphs-adds-beauty-and-value-to-the-village-33179.html. 
  4. "Austin Fernando appointed as Presidential advisor". டெய்லிமிரர். 15 சனவரி 2015. http://www.dailymirror.lk/61321/austin-ranavirajah-karunaratne-new-presidential-advisors. 
  5. Weerasinghe, Chamikara (18 சனவரி 2015). "Three Presidential advisers appointed". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2015-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150208155952/http://www.dailynews.lk/?q=local%2Fthree-presidential-advisers-appointed. 
  6. "Austin, Ellawala new Governors". டெய்லி மிரர். 27 சனவரி 2015. http://www.dailymirror.lk/62233/six-new-governors-sworn-in. 
  7. "Six Provincial Governors take oaths". த நேஷன். 27 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160307032653/http://www.nation.lk/edition/breaking-news/item/37782-six-provincial-governors-take-oaths.html. 
  8. de Mel, Tara (27 சூலை 2008). "When peace was given a chance". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/080727/Plus/sundaytimesplus_14.html. 
  9. David, Marianne (13 சூலை 2008). "A Man of Peace". த நேசன் இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303224734/http://www.nation.lk/2008/07/13/special1.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒஸ்டின்_பெர்னாண்டோ&oldid=3237376" இலிருந்து மீள்விக்கப்பட்டது