ஓம் (மின்னியல்)

ஓம் (ஆங்கிலம்: Ohm) என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும்.[1] இதனுடைய குறியீடு Ω ஆகும்.[2] இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]

ஓம்
A laboratory one-Ohm standard resistor.
பொது தகவல்
அலகு முறைமைSI derived unit
அலகு பயன்படும் இடம்மின்தடை
குறியீடுΩ
பெயரிடப்பட்டதுஜார்ஜ் ஓம்
In SI base units:kgm2s-3A-2
ஓமில் தடையை அளவிடுவதற்குப் பல்மானி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுபகரணத்தின் மூலம் அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பனவற்றையும் அளக்க முடியும்.

வரைவிலக்கணம் தொகு

கடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டு ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் அம்பியர் ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.[4]

 [5]

இலத்திரனியல் ஆவணங்களில் Ω குறியீடு தொகு

இலத்திரனியல் ஆவணங்களில் (மீப்பாடக் குறிமொழி உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, W என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω தடையி என்பதற்குப் பதிலாக 100 W தடையி என்று காட்டப்படும். [சான்று தேவை]

ஒருங்குறியில் Ω குறியீட்டிற்கு U+2126 என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.[6]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ["அனைத்துலக முறை அலகுகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-03-30. அனைத்துலக முறை அலகுகள் (ஆங்கில மொழியில்)]
  2. ஓம் (ஆங்கில மொழியில்)
  3. ["சார்ச்சு சைமன் ஓம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2012-03-30. சார்ச்சு சைமன் ஓம் (ஆங்கில மொழியில்)]
  4. ஓம் என்றால் என்ன (ஆங்கில மொழியில்)?
  5. ஓமின் விதி (ஆங்கில மொழியில்)
  6. ஒருங்குறி வரியுரு 'ஓம் குறி (U+2126)' (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_(மின்னியல்)&oldid=3547161" இலிருந்து மீள்விக்கப்பட்டது