கங்காதர் வி. சித்தல்

இந்திய எழுத்தாளர்

கங்காதர் வித்தோபா சித்தல் (Gangadhar Vithoba Chittal) (1923-1987) கன்னட கவிஞரும், கர்நாடக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவருமாவார். [1] இவர் கன்னட எழுத்தாளர் யசுவந்த் வித்தோபா சித்தலின் மூத்த சகோதரராவார். இவர் இந்திய அரசாங்கத்தில் பல நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். மேலும் பல இந்திய தூதரகங்கள் மற்றும் இணைத்தூதரகங்களை தணிக்கை செய்துள்ளார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942), அதில் பங்கேற்றதால் சித்தல் தனது கல்லூரியில் இருந்து விலக்கப்பட்டார்.

கங்காதர் வித்தோபா சித்தல்
பிறப்பு(1923-11-12)12 நவம்பர் 1923
பானிகொட்லா-கனேஅள்ளி, வடகன்னட மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு28 சனவரி 1987(1987-01-28) (அகவை 63)
மும்பை
தொழில்கவிஞர், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை
வகைகவிதைகள்
கருப்பொருள்கன்னடம்
துணைவர்மீரா கிருஷ்ணா கெய்தோண்ட் கார்வார்

ஆரம்பக்காலம் மற்றும் கல்வி தொகு

கனேஅள்ளியில் பிறந்த சித்தால் [2] [3] தனது சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியை முடித்தார். 1940 ஆம் ஆண்டில் கும்தா என்ற ஊரில் உள்ள கிப்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் படித்து மும்பை மாகாணத்தில் முதலிடம் பிடித்தார். அப்போதைய மும்பை மாகாணத்தில் மகாராட்டிரா, குஜராத், கர்நாடகாவின் ஒரு பகுதி மற்றும் மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய பகுதியிலிருந்து இவரது சாதனை மிகவும் பாராட்டத்தக்கது. இவரது சாதனைக்காக சித்தல் கர்நாடகவின் தார்வார் கல்லூரியால் கௌரவிக்கப்பட்டார். பின்னர், தார்வாரில் இவர் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். பின்னர் சாங்லியின் வில்லிங்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து அதிலும் முதலிடம் பெற்றார். வில்லிங்டனில் எஸ். ஆர். ஏகுண்டி சித்தலின் வகுப்புத் தோழராகவும், வி. கே. கோகாக் மற்றும் ஆர். எஸ். முகலி இவரது பேராசிரியர்களாகவும் இருந்தனர்.

அரசுப் பதவிகள் தொகு

சாங்லியில் பட்டம் பெற்ற பிறகு, சித்தல் 1948 இல் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் சேர்ந்தார். ஆரம்பத்தில் இவர் மும்பையில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் வாசிங்டன் டி.சிக்கு தணிக்கை துணை இயக்குநராக சென்றார். வாசிங்டன் டி. சி இல் இவரது பங்களிப்பு முடிந்த பிறகு, அங்கிருந்து மாற்றப்பட்டார். புது தில்லி, நீர்பாசனம் மற்றும் மின் அமைச்சகத்தின் துணை செயலாளராகவும், பின்னர், புதுதில்லியில் மாநிலக் கணக்காளர் தணிக்கை இயக்குநராக மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, தணிக்கை இயக்குநராக இலண்டன் சென்றார். இறுதியாக, இவர் மும்பை, மேற்கு இரயில்வேயில் தணிக்கை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

விருதுகள் தொகு

1983 ஆம் ஆண்டில், கன்னட இலக்கியத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக கர்நாடக சாகித்திய அகாதமி (கர்நாடக மாநில இலக்கிய சங்கம்) கௌரவித்தது.

இறப்பு தொகு

சிறு வயதிலேயே சித்தல் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். இது இவரது திறமையான மற்றும் விதிவிலக்கான இலக்கிய வாழ்க்கையை குறைத்தது. இவர் தனது 63 வயதில் இந்த நோயால் இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. Kannada writers
  2. Chittal's photo
  3. "- On Genealogy". Archived from the original on 29 November 2009. பார்க்கப்பட்ட நாள் 12 December 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காதர்_வி._சித்தல்&oldid=2894274" இலிருந்து மீள்விக்கப்பட்டது