கசன் (மன்னன்)

கசன் என்பவர் மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான ஈல்கானரசின் ஏழாவது ஆட்சியாளர் ஆவார். இவர் தற்போதைய ஈரானை 1295 முதல் 1304ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தார். இவர் அர்குனின் மகன், அபகா கானின் பேரன் மற்றும் குலாகு கானின் கொள்ளுப்பேரன் ஆவார். சிங்கிசு கானின் நேரடி வழித்தோன்றல்களான ஒரு தொடர்ச்சியான மன்னர்களின் பாரம்பரியத்தை இவர் தொடர்ந்தார். ஈல்கான்களிலேயே இவர் மிகுந்த புகழ் பெற்றவராகக் கருதப்படுகிறார். அதற்கு ஒரு காரணம் இவர் இசுலாமுக்கு மதம் மாறியதுமாகும். 1295ஆம் ஆண்டில் இமாம் இப்னு தைமியாவைச் சந்தித்த பிறகு இவர் இசுலாமுக்கு மதம் மாறினார். மேற்காசியாவில் மங்கோலியர்களின் முதன்மை மதமாக இசுலாம் மாறியதில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இவரது முதன்மை மனைவிகளில் ஒருவர் கோகோசின் என்ற ஒரு மங்கோலிய இளவரசியும் அடங்குவார். கோகோசின் உண்மையில் குப்லாய் கானால் கசனின் தந்தை அர்குனுக்கு நிச்சயிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தார்.

கசன்
கான்
ஈரான் மற்றும் இசுலாமின் பாட்ஷா[1]
ஒரு பௌத்தராகப் பிறந்த கசன் (நடுவில்), அரியணைக்கு ஏறிய பிறகு ஒரு இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியின்படி இசுலாமுக்கு மதம் மாறினார்.
ஈல்கானரசு
ஆட்சிக்காலம்4 அக்டோபர் 1295 – 11 மே 1304
முடிசூட்டுதல்19 அக்டோபர் 1295
முன்னையவர்பய்டு
பின்னையவர்ஒல்ஜெயிடு
நயிப்நவ்ரூஸ்
குராசானின் நிர்வாகி
ஆட்சிக்காலம்1284 - 1295
முன்னையவர்அர்குன்
பின்னையவர்நிருன் அகா
பிறப்பு5 நவம்பர் 1271
அபஸ்குன், ஈல்கானரசு
இறப்பு17 மே 1304(1304-05-17) (அகவை 32)
கஸ்வின், ஈல்கானரசு
இராணிஎதி குர்த்கா கதுன்
புலுகான் கதுன் குராசானி
கோகோசின்
புலுகான் கதுன் முவாசமா
எஷில் கதுன்
தோன்டி கதுன்
கரமுன் கதுன்
பெயர்கள்
மகமுது கசன்
தந்தைஅர்குன்
தாய்குல்தக் எகேச்சி
மதம்பௌத்தம்

கிறித்தவம்

1295க்குப் பிறகு சன்னி இசுலாம்

கசனின் ஆட்சியின்போது நடைபெற்ற இராணுவச் சண்டைகளாக சிரியாவை கட்டுப்படுத்துவதற்கு இவர் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் போரிட்டது மற்றும் துருக்கிய-மங்கோலியச் சகதாயி கானரசுக்கு எதிராக இவர் செய்த யுத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கசன் ஐரோப்பாவுடன் தூதரகத் தொடர்புகளையும் தொடர்ந்தார். இவரது தந்தையின் தோல்வியடைந்த முயற்சியான பிராங்கோ-மங்கோலியக் கூட்டணியை உருவாக்குவதன் முயற்சியின் தொடர்ச்சியாக இதை அவர் செய்தார். இவர் மிகுந்த கலாச்சாரம் உடைய மனிதராகக் கருதப்படுகிறார். பல மொழிகளைப் பேசினார். பல்வேறு பொழுது போக்குகளைக் கொண்டிருந்தார். ஈல்கானரசின் பல ஆக்கக் கூறுகளை மறுசீரமைப்புச் செய்தார். குறிப்பாக பணத்தை தரப்படுத்தியது மற்றும் நிதிக்கொள்கை ஆகிய விஷயங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

குழந்தை கசனை அவரது தந்தை அர்குன் கையில் தாங்கியபடி, குதிரையில் இருக்கு கசனின் தாத்தா அபகாவிற்கு அருகில் நிற்கிறார்.
ஒரு குதிரை மீது கசன்.
திருக்குர்ஆனைப் படிக்கும் கசன்.
அரசவையில் தன் மனைவிகளுடன் கசன்.

குறிப்புகள் தொகு

  1. Fragner, Bert G. (2013). "Ilkhanid rule and its contributions to Iranian political culture". in Komaroff, Linda. Beyond the legacy of Genghis Khan. Leiden: Martinus Nijhoff Brill. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-474-1857-3. https://books.google.com/books?id=mUgyAQAAQBAJ&pg=PA73. பார்த்த நாள்: 6 April 2017. "When Ghazan Khan embraced Islam and proclaimed himself "pādishāh-i Īrān wa Islām" at the end of the thirteenth century (...)" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசன்_(மன்னன்)&oldid=3478049" இலிருந்து மீள்விக்கப்பட்டது