கஞ்சிகுடிச்சாறு

இலங்கை கிழக்கு மாகாண ஊர்

கஞ்சிகுடிச்சாறு (Kanchikudicharu) அல்லது கஞ்சிகுடியாறு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும்.குறிஞ்சி,மருதம்,முல்லை ஆகிய மூநிலங்களையும் கொண்டமைந்துள்ள இவ்வூர் இலங்கையின் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஆகும். 2007 இராணுவ நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் இலங்கை அரச படையினரால் கைப்பற்றப்பட்டது.எனினும் 2009 முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்படும் வரை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதி தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இறுதியாக கைப்பற்றப்பட்ட பகுதி கஞ்சிகுடிச்சாறு ஆகும்.[1]

கஞ்சிகுடிச்சாறு
கிராமம்
கஞ்சிகுடிச்சாறு குளம்
கஞ்சிகுடிச்சாறு குளம்
கஞ்சிகுடிச்சாறு is located in இலங்கை
கஞ்சிகுடிச்சாறு
கஞ்சிகுடிச்சாறு
ஆள்கூறுகள்: 7°02′40″N 81°46′30″E / 7.04444°N 81.77500°E / 7.04444; 81.77500
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம், இலங்கை
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலகம்திருக்கோவில் பிரதேச செயலகம்

இங்கு 2015 இல் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 190 குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.இந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் நன்னீர் மீன்பிடி உள்ளது. மேலும் நிலக்கடலை செய்கை, கால்நடை வளர்ப்பு, சேனைப்பயிர்ச்செய்கை போன்றனவும் வாழ்வாதார தொழில்களாக உள்ளன.

நிலக்கடலை பயிர்ச்செய்கை

இங்குள்ள கஞ்சிகுடிச்சாறு குளமானது சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இக்குளத்தின் பாசனம் மூலம் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் வேளாண்மை செய்யப்படுவதுடன் நன்னீர் மீன்வளர்ப்பும் செய்யப்படுகிறது.இங்குள்ள மக்களின் பிரதான ஜீவனோபாய மூலமாக இக்குளமே உள்ளது.[2]

கஞ்சிகுடிச்சாறில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் காணப்படுகிறது.[3]

பாடசாலைகள் தொகு

  • கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலயம் (தற்பொழுது இப்பாடசாலை திருக்கோவில்,விநாயகபுரத்தில் இயங்குவதுடன் கஞ்சிகுடிச்சாறு கிராமத்திலுள்ள பாடசாலை மாடிக்கட்டிடம் பழுதடைந்து காணப்படுகின்றது.)

கோவில்கள் தொகு

இங்கு வாழ்கின்ற அனைவரும் சைவசமயத்தையே பின்பற்றுகின்றனர்.

  • முருகன் கோவில்
  • சித்திவிநாயகர் கோவில்
  • தான்தோன்றி நாகபரமேஸ்வரி கோவில்

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 'கஞ்சிகுடிச்சாறு மக்கள் இன்னும் குடியேறவில்லை', பிபிசி, 28 நவம்பர், 2010
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  3. "'கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்'". Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2019-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சிகுடிச்சாறு&oldid=3580207" இலிருந்து மீள்விக்கப்பட்டது