கடலடி மலைத்தொடர்

கடலடி மலைத்தொடர்கள் (Undersea mountain range) என்பவை பெரும்பாலும் அல்லது முழுவதுமாக நீருக்கடியில், குறிப்பாக கடலின் ஆழத்தில் இருக்கும் [[மலைத் தொடர்|மலைத்தொடர்களைக் குறிக்கும். தற்போதைய புவிமேலோட்டு சக்திகளிலிருந்து தோன்றியிருந்தால், அவை பெரும்பாலும் நடுக்கடல் முகடுகள் என குறிப்பிடப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, கடந்த காலத்தில் நீருக்கடியில் எரிமலையால் உருவாகியிருந்தால் அவை கடல்மலை சங்கிலி எனப்படுகின்றன. மிகப் பெரிய மற்றும் நன்கு அறியப்பட்ட கடலுக்கடியில் உள்ள மலைத்தொடர், மத்திய-அட்லாண்டிக் மலைத் தொடராகும்.[1] "நிலத்தில் உள்ளதைப் போலவே, கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடர்களும் அடிக்கடி எரிமலை மற்றும் நிலநடுக்க நடவடிக்கைகளுக்கு இடமாக உள்ளன என்றும் கவனிக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Anna Claybourne, Mountains (2004), p. 7.
  2. Martin F. Price, Alton C. Byers, Donald A. Friend, Mountain Geography: Physical and Human Dimensions (2013), p. 16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலடி_மலைத்தொடர்&oldid=3839850" இலிருந்து மீள்விக்கப்பட்டது