கடவுள் இருக்கான் குமாரு

மு. இராசேசு இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடவுள் இருக்கான் குமாரு ( Kadavul Irukaan Kumaru ) 2016இல் வெளிவந்த ஒரு இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் எம் ராஜேஷ் ஆவார். மற்றும் என். ராமசாமி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இதில், ஜி.வி.பிரகாஷ் குமார் , நிக்கி கல்ரானி ஆகியோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் 2016 இல் இந்த படம் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படம் நவம்பர் 18, 2008 இல் வெளியானது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2] இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் சென்னை சின்னோடு என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

கடவுள் இருக்கான் குமாரு
இயக்கம்மு. இராசேசு
தயாரிப்புடி. சிவா
கதைஎம். ராஜேஷ்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
போபொ சஷி (1 பாடல்)
கருணாஸ் (1 பாடல்)
நடிப்பு
ஒளிப்பதிவுசக்தி சரவணன்
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடுநவம்பர் 18, 2016 (2016-11-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

த்ரிஷா இல்லனா நயன்தாரா (2015) படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பங்களிப்பை பார்த்த இயக்குனர் எம். ராஜேஷ் தனது அடுத்த படத்திற்காக பிரகாஷ் குமாரை அணுகினார். அதனால், எம். ராஜேஷ் மற்றும் நடிகர்-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் புதிய நகைச்சுவைத் திரைப்படத்திற்காக நவம்பர் 2015இல், ஒத்துழைக்க இருப்பதாக அறிவித்தனர்.[3][4] இத் திரைப்படத்திற்கு, செல்வராகவன் 'இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை (திரைப்படம்) (2006) படத்தில் வரும் ஒரு உரையாடலான கடவுள் இருக்கான் குமாரு என்கிற சொற்றொடரை தலைப்பாக வைத்தனர்.[5] ராஜேஷ் நடிகைகள் நிக்கி கல்ரானி மற்றும் அவிகா கோர் போன்றோரை படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களுக்காக ஒப்பந்தம் செய்தார். பிறகு பிரியா ஆனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இத் திட்டத்தில் இணைந்தனர்.[6] டி. சிவா இத்திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார், அதே நேரத்தில் நடிகர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் 2016 ன் ஆரம்பத்தில் இணைந்தனர்.[2]

மார்ச் மாத தொடக்கத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது, மார்ச் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த படத்தின் தயாரிப்பின் போது கார் விபத்து ஏற்பட்டதால் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி காயமடைந்தனர்.[1][7] மே 2016 இல், ராஜேஷ் தமிழ் மொழியில் காட்சிகளை படப்பிடிப்பு செய்வது சிரமம் அளிப்பதாய் இருந்ததால்அவிகா கோருக்குப் பதிலாக நடிகை நிக்கி கல்ரானி தேர்வு செய்தார்.[8]

வெளியீடு மற்றும் வரவேற்பு தொகு

இந்தத் திரைப்படம் நவம்பர் 18, 2016 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைத் பெற்றது. தி ஹிந்துவின் விமர்சகர் "ராஜேஷின் இந்த ஏழாவது படம் மற்றும் அவரது திரைப்படப் பார்வை எப்படி வளர்ந்துள்ளது என்பதைப் பார்க்கும் போது, வியப்பாக உள்ளது என்று எதிர்மறையாக எழுதினார். "ரெடிப்.காம்." இன் விமர்சகர் கடவுள் இருக்கான் குமாரு நேரத்தை வீணாக்கும் படமாக உள்ளது என விமரிசித்துள்ளார்.[9][10]

ஒலிப்பதிவு தொகு

இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார், நா. முத்துகுமார். பாடல்களை எழுதியுள்ளார். "லொகாலிடி பாய்ஸ் ஆல்பத்தில் உள்ள ஒரு கூடுதல் பாடல், இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியிடும் முன்னரே தனிப்பாடலாக வெளியானது, மேலும், இந்த பாடல் போபொ சஷி மற்றும் கருணாஸ் ஆகியோரால் இசையமைக்கப்பட்டு, தரண் மற்றும் கருணாஸால் எழுதப்பட்டதாகும்.[11]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "G V Prakash's Next Film is Rajesh's Version of The Hangover".
  2. 2.0 2.1 "IndiaGlitz – GVPrakash Nikki Galrani Avika Gor Kadavul Irukkan Kumaru shooting to start march 1st week – Tamil Movie News".
  3. "Rajesh's next film with GV Prakash".
  4. "GV Prakash to play the lead in M Rajesh's next – Times of India".
  5. ""ரஜினிக்கு போலீஸ் கதை ரெடி!"- பெரும் மகிழ்ச்சியில் ராஜேஷ்.எம் #VikatanExclusive". https://cinema.vikatan.com/tamil-cinema/interview/68467-kadavul-irukan-kumaru-director-rajesh-interview.html. 
  6. "Keerthy Suresh and Priya Anand likely heroines for GV Prakash".
  7. "The Car Accident was Not a Stunt!".
  8. "Kadavul Irukaan Kumaru: Anandhi joins hands with GV Prakash for the third time".
  9. http://www.rediff.com/movies/report/review-kadavul-irukaan-kumaru-is-a-waste-of-time/20161118.htm
  10. http://www.thehindu.com/features/cinema/Kadavul-Irukaan-Kumaru-Runaway-groom/article16668349.ece
  11. http://www.behindwoods.com/tamil-movies/kadavul-irukaan-kumaru/kadavul-irukaan-kumaru-songs-review.html

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்_இருக்கான்_குமாரு&oldid=3673488" இலிருந்து மீள்விக்கப்பட்டது