கத்ரி (இனம்)

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

கத்ரி (Khatri) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதி மக்களின் ஓர் இனமாகும். இந்தியாவிலுள்ள கத்ரிக்கள் பெரும்பாலும் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கத்ரி
மதங்கள்இந்து சமயம், இசுலாம், சீக்கியம்
மொழிகள்பஞ்சாபி (போதோஹாரி (Pothohari),[1] இந்தி, உருது
நாடுதுவக்கத்தில் இந்தியா
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
இந்திய பஞ்சாப், அரியானா, இராசத்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி.
நிலைமுன்னேறிய சாதி

முகலாயப் பேரரசு காலத்தில் கத்ரிக்கள் இந்தியாவின் வாணிகத்தில் அதிகளவில் ஈடுபட்டிருந்தனர்.[2] பஞ்சாப் பகுதிக்கு அப்பாலும் இவர்கள் ஆட்சி மற்றும் இராணுவப் பொறுப்புகளிலும் சிறப்புப் பெற்றிருந்தனர்.[3] இசுகாட் கேமரூன் லெவி, கத்ரிக்களைத் துவக்ககால நவீன இந்தியாவின் முக்கிய வணிக இனமாகக் குறிப்பிடுகிறார்.[4]

அனைத்து சீக்கிய குருக்களும் கத்ரி இனத்தவராவர்.[4]

துவக்கமும் நிலைமையும் தொகு

கத்ரிகள் தங்களை உண்மையான வேத மரவுவழியினராகக் கருதினர். அதனால் இராஜ புத்திரர் போன்ற சத்திரிய மரபினரைவிடவும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்திருந்தனர். டபிள்யூ. ஹெச். மெக்லியோடின் (W. H. McLeod) கூற்றின்படி, இலக்கியம் மற்றும் சாதியளவில் மற்றவர்கள் அனைவரையும்விடச் சிறந்து விளங்குமளவிற்கு அவர்கள் திறமையுடையவர்களாய் இருந்தனர்.[5] கத்ரிகளை சிறந்த போர்த்திறமையுடைய இனத்தவர் எனும் நாத்தின் கருத்துக்கு ஏற்றார்போல கத்ரிகள் முகலாயப் பேரரசின் படைகளில் போர்வீரர்களாக இருந்தனர். எனினும் பிரித்தானியர்கள் இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தில் கத்ரிகள் பெரும்பாலும் வணிகத்திலும் எழுத்தர் பணியிலும்தான் ஈடுபட்டிருந்தனர். முகலாயப் பேரரசின் விதவைகள் மறுமண ஆணையை கத்ரி இனத்தலைவர்கள் எதிர்த்ததால் கத்ரிகள் முகலாயப் படைகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதனால் கத்ரிகள் படைத்தொழிலிருந்து வேறு தொழில்களுக்குச் செல்லவேண்டியிருந்தது எனவும் கத்ரி இனத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன[6]

இராஜபுத்திரர், சத்திரியர்களின் இனத்தகுதி, தங்களுக்கும் வேண்டுமென கத்ரிகள் நியாயமாகவும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தாலும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாதது, சாதிய அளவுகோளில் கத்ரிகளுக்கு ஒருதெளிவான நிலையைத் தரப்படவில்லை என்பதைக் காட்டுகிறது என கென்னத் டபிள்யூ ஜோன்சு கூறுகிறார்[7] போர்வீரர்களாக இருந்து வணிகர்களாக மாறியவர்களாகக் கத்ரிகள் தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.[8]

19 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மையான கத்ரிகள் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் அக்காலத்திய இந்தியர்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களும் கத்ரிகளின் சத்திரியத் தகுதிக் கோரிக்கையை ஏற்கத் தவறினர்.[9] இந்தியாவின் பிறமாநிலங்களில் வாழ்ந்துவந்த கத்ரிகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். குசராத்து, இராஜஸ்தான் மாநிலங்களில் வாழ்ந்த கத்ரிகள் தார்ஜி ("Darji") இனத்தவர் போல தையல் தொழிலில் திறைமையுடையவர்களாயிருந்தனர்.[10] கத்ரிகள் சத்திரிய-பிராமணக் கலப்பினமாக இருக்கலாமென தசரத் சர்மா கருதுகிறார்.[11]

சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் தன்வரலாறு எனக் கருதப்படு விசித்திர நாடகம் ([[Bichitra Natak) என்ற நூலின்படி (இந்நுலின் நம்பகத்தன்மை குறித்த சர்ச்சையுள்ளது[12][13].), கத்ரி இனத்தின் உட்குலமான பேடி குலத்தவர் இந்து புராணங்களின் இராமரின் மகன் குசன் வழியினராவர்[14] ; மற்றொரு உட்குலமான சோதி குலத்தவர் இராமரின் மற்றொரு மகனான இலவன் வழிவந்தவராவர்.[15]

வரலாறு தொகு

துவக்கத்தில் பட்டுத்துணிகள் நெய்வதில் ஈடுபட்டிருந்த கத்ரிகள் காலப்போக்கில் வணிகர்களாயினர்.[16] கத்ரிகள் வாழ்ந்த பகுதி கிபி 1013 வரை இந்து அரசர்களால் ஆளப்பட்டுவந்தது. அப்பகுதியின் இசுலாமியரின் வெற்றிக்குப் பிறகு கத்ரிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டாலும் அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை விடாது பின்பற்றினர். கத்ரிகளின் கல்வியறிவின் சிறப்பால் துன்பகாலங்களிலும் அவர்களால் வாழ முடிந்தது.[17]

தொடர்ந்து கத்ரிகள் முக்கியமான வணிகஇனமாக வளர்ந்து முகலாயப் பேரரசின்கீழ் இந்திய வணிகத்தில் முக்கிய பங்குவகித்தனர்.[2][4] இசுலாமியப் பிரபுக்களின் ஆதரவில் பஞ்சாப் பகுதிக்கு அப்பாலுள்ள இடங்களிலும் கத்ரிகள் படைப்பிரிவுகளிலும் ஆட்சிப் பொறுப்பிலும் பதவிகள் வகித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் கத்ரிஇனக் கதைகளின்படி முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் காலம்வரை கத்ரிகள் படைப்பிரிவுகளில் பொறுப்பேற்றிருந்தனர். ஔரங்கசீப்பின் தக்காணப் போரில் கத்ரிகள் கொல்லப்பட்டு அவர்களது மனைவிகள் மறுமணம் செய்ய ஔரங்கசீப்பால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை மறுத்த கத்ரிகளைப் படைகளிலிருந்து நீக்கிவிட்டு அவர்களைக் கடையாளர்களாகவும் தரகர்களாகவும் இருக்கும்படியாக ஔரங்கசீப் பணித்தார்.[3]

சமயம் தொகு

இந்து கத்ரி தொகு

சனாதன் கத்ரிகள் தொகு

2003 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி தில்லி மக்கட்தொகையில் 9% கத்ரி இனத்தவர்கள்.[18]

ஆரிய சமாஜ கத்ரிகள் தொகு

பஞ்சாபில் சமயப்பரப்புநர்களை எதிர்த்துச் செயற்பட, சிங் அவையைச் சேர்ந்த முக்கிய நபர்கள் தயானந்த சரசுவதியை அழைத்தனர். 1877 இல் சாதிகள், சடங்குகள், உருவவழிபாடு ஆகியவற்றை எதிர்க்கும் இயக்கமான ஆரிய சமாஜத்தைத் தயானந்த சரசுவதி இலாகூரில் நிறுவினார். ஓரிறைவாதமே வேதங்களில் காணப்படும் முக்கிய சாராம்சமென்ற கருத்தை ஆரிய சமாஜம் முன்னிறுத்தியது. பஞ்சாபி இந்துக்களிடம், குறிப்பாக இதேபோன்ற செய்தியைச் சீக்கிய குருமார்களின் செய்தியாகக் கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டிருந்த கத்ரிகளிடம் ஆரிய சமாஜம் பிரபலமானது[19] சுவாமி சிரதானந்தர் போன்ற தனிப்பட்ட மனிதர்களையும் லாகா ஹான்ராஜ் குப்தாவால் துவக்கப்பட்ட ”தயானந்த ஆங்கிலோ-வேதப் பள்ளிகள்” (Dayanand Anglo-Vedic Schools System) போன்ற நிறுவனங்களையும் ஆரிய சமாஜம் ஈர்த்தது.[20]

சீக்கிய கத்ரிகள் தொகு

 
குரு நானக்கை எதிர்கொள்ளும் குரு கோவிந்த் சிங் (பறவையுடன் இருப்பவர்). கற்பனையாக சித்திகரிக்கப்பட்ட 18 ஆம் நூற்றாண்டின் ஒரு ஓவியம்.

11 சீக்கியக் குருக்களும் கத்ரி இனத்தவராவர்.[21] குரு நானக் ஒரு பேடி, குரு அங்கட் ஒரு டிரெஹான், குரு அமர் தாஸ் ஒரு பல்லா, பிற குருக்களெல்லாம் சோதிகள்[22] ஒவ்வொரு குருவின் வாழ்நாளிலும் அவர்களை ஆதரித்தவர்களும் சீக்கியர்களும் கத்ரிகளாகவே இருந்தனர். பாய் குருதாஸ் தனது வாரன் பாய் குருதாசில் இதுகுறித்த ஒரு பட்டியலைத் தந்துள்ளார்.[23]

சீக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பிற கத்ரிகள்:

 
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைத்தலவர் ஜேம்ஸ் ஸ்கின்னர் (எ) சிக்கந்தரின் படைப்பிலுள்ள ஒரு கத்ரி இனப் பிரபுவின் படம் (1778–1841).
  • பாய் தயா சிங், கால்சாவின் துவக்ககாலத்தவர்களான ”பாஞ்ச் பியாரே” என்றழைக்கப்பட்ட ஐவரில் முதலாமவர்; கத்ரி இனத்தின் சோப்தி குலத்தைச் சேர்ந்தவர்.[24]
  • அரி சிங் நல்வா (1791–1837), சீக்கியப் பேரரசின் கால்சாப் படைத்தலைவர்

மேற்கோள்கள் தொகு

  1. "Khatri".
  2. 2.0 2.1 Gijsbert Oonk (2007). Global Indian diasporas. Amsterdam University Press. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-5356-035-8. https://archive.org/details/dli.doa.016. 
  3. 3.0 3.1 John R. McLane (2002). Land and Local Kingship in Eighteenth-Century Bengal. Cambridge South Asian Studies (Volume 53). கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52654-8. 
  4. 4.0 4.1 4.2 Levi, Scott Cameron (2002). The Indian Diaspora in Central Asia and Its Trade, 1550–1900. Leiden: BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-12320-5. https://books.google.com/books?id=9qVkNBge8mIC. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Syan, Hardip Singh (2013). Sikh Militancy in the Seventeenth Century: Religious Violence in Mughal and Early Modern India. I. B. Tauris. பக். 35, 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780762500. 
  6. Syan, Hardip Singh (2013). Sikh Militancy in the Seventeenth Century: Religious Violence in Mughal and Early Modern India. I. B. Tauris. 29-Jan-2013 - History - 315 Macmillan ISBN 9781780762500. |pages=31 |quote=...Nath goes on to say...
  7. Kenneth W. Jones (1976). Arya dharm: Hindu consciousness in 19th-century Punjab. University of California Press. பக். 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-02920-0. https://archive.org/details/aryadharmhinduco0000jone. "...among Vaishyas, the Khatri and his associates, the Saraswat Brahmans. The Khatris claimed, with some justice and increasing insistence, the status of Rajputs, or Kshatriyas, a claim not granted by those above but illustrative of their ambiguous position on the great varna scale of class divisions ..." 
  8. W. H. McLeod (2009). The A to Z of Sikhism. Scarecrow Press. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-6828-1. https://archive.org/details/atozofsikhism0000mcle. "...Khatris claiming that they were warriors who took to trade." 
  9. John R. McLane (2002). Land and Local Kingship in Eighteenth-Century Bengal. Cambridge South Asian Studies (Volume 53). கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-52654-8. "The Khatris were a Punjabi mercantile caste who claimed to be Kshatriyas. Nineteenth-century Indians and British administrators failed to agree whether that claim should be accepted. The fact that overwhelming majority were engaged in Vaishya (mercantile), not Kshatriya (military), pursuits was balanced against the Khatri origin myths..." 
  10. Indian settlers: the story of a New Zealand South Asian community, p48, Jacqueline Leckie, Otago University Press, 2000/ quote :"Tailoring was a caste occupation that continued in New Zealand by those from Darji and Khatri castes who had been trained in appropriate skills. Bhukandas Masters, a Khatri, emigrated to New Zealand in 1919. He practiced as tailor in central Auckland..."
  11. Early Chauhān dynasties: a study of Chauhān political history, Chauhān political institutions, and life in the Chauhān dominions, from 800 to 1316 A.D., Dasharatha Sharma, p 279, Motilal Banarsidass, 1975
  12. Different approaches to Bachitar Natak, Journal of Sikh studies, Surjit Singh Hans, Volume 10, 66-78, Guru Nanak University.
  13. Dasam Granth: A historical study, Sikh Review, 42(8), Aug 1994, 9-20
  14. Major Nahar Singh Jawandha. Glimpses of Sikhism. Sanbun. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-8021-325-5. 
  15. The Cosmic Drama: Bichitra Natak, Author Gobind Singh, Publisher Himalayan International Institute of Yoga Science and Philosophy of the U.S.A., 1989 ISBN 0-89389-116-9, ISBN 978-0-89389-116-9
  16. Singh, Kumar Suresh (1998). India's Communities, volume 2 H–M. People of India, Anthropological Survey of India. New Delhi, India: Oxford University Press. பக். 1722, 1729. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-563354-2. 
  17. The Khatris, a Socio-Historical Study. by Baij Nath Puri Published in 1988, M.N. Publishers and Distributors (New Delhi)
  18. "534 Sanjay Kumar, A tale of three cities".
  19. Political Elite and Society in the Punjab, by Nina Puri. Published 1985 Vikas
  20. Mahatma Hansraj: Maker of the Modern Punjab By Sri Ram Sharma, Published 1941, Arya Pradeshik, Pratinidhi Sabha
  21. H. S Singha (2000). The encyclopedia of Sikhism. Hemkunt Press. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7010-301-1. 
  22. W. H. McLeod (2009). The A to Z of Sikhism. Scarecrow Press. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-6828-1. https://archive.org/details/atozofsikhism0000mcle. 
  23. Bhai Gurdas Ji, Varan Bhai Gurdas Ji, Vaar 8 – Pauri 10.
  24. Sangat Singh (2001). The Sikhs in history: a millenium study, with new afterwords. Uncommon Books. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-900650-2-3. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கத்ரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மூல நூல் தொகு

மேலதிக வாசிப்புக்கு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரி_(இனம்)&oldid=3893987" இலிருந்து மீள்விக்கப்பட்டது