கந்தசங்கடவு படகுப் போட்டி

கேரளத்தில் நடக்கும் படகுப் போட்டி

கந்தசங்கடவு படகுப் போட்டி (மலையாளம்: കണ്ടശ്ശാംകടവ് ജലോത്സവം) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் கந்தசங்கடவில் உள்ள எனமக்கல் ஏரி மற்றும் கொனோலி கால்வாயில் நடைபெறும் வள்ளங்களி ஆகும். ஓணம் பண்டிகையின் திருவோணம் நாளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது, அதைத் தொடர்ந்து 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த கோப்பை முதலமைச்சரின் சுழற் கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இந்த போட்டியானது இருட்டுகுத்தி மற்றும் சுருலன் படகு பிரிவுகளுக்கு நடத்தப்படுகின்றன. [1] [2] [3] [4]

கந்தசங்கடவு படகுப் போட்டி
കണ്ടശ്ശാംകടവ് ജലോത്സവം
தோற்றம்1956
மண்டலம்கந்தசங்கடவு, திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா
தற்போதைய வாகையாளர்மகாதேவன் சுண்டன்

வரலாறு தொகு

1955 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது இந்தப் படகுப் போட்டி தொடங்கப்பட்டது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக படகுப் போட்டியானது போட்டி அமைப்பாளர்களால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டது. 2011 இல், கேரள அரசு, திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு மற்றும் மணலூர் கிராம பஞ்சாயத்து ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. [5] [6]

வெற்றியாளர்கள் தொகு

ஆண்டு சங்கம் வெற்றியாளர்கள்
2011 செங்கனூர் எடகுளம் ஜூனியர் சி.பி.எஸ் வடேகா அட்புரம் சுண்டன்
2012 அல் ரியாமி குழு சம்பாகுளம் சுண்டன்
2013 மணப்புரம் குழு மகாதேவன் சுண்டன்
2014 தயங்கரி படகு கிளப் புலிங்குன்னு சுண்டன்

கேரளத்தில் பிற படகுப் போட்டிகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Kandassankadavu Jalolsavam". CityJournal. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
  2. "Chambakkulam Chundan wins boat race". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
  3. "Jalolsavam to begin today". Asianet India. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
  4. "Jalolsavam to begin today". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Chambakkulam Chundan wins Kandassankadavu boat race". Times of India. Archived from the original on 2013-09-15. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Snake Boat Races". Alappuzhaonline. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.