கனக்கலே மாகாணம்

கனக்கலே மாகாணம் (Çanakkale Province, துருக்கியம்: Çanakkale ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இது நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெயரானது கனக்கலே நகரத்திலிருந்து வந்தது .

கனக்கலே மாகாணம்
Çanakkale ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் கனக்கலே மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் கனக்கலே மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 40°02′27″N 26°33′37″E / 40.04083°N 26.56028°E / 40.04083; 26.56028
நாடுதுருக்கி
பகுதிமேற்கு மர்மாரா
அரசு
 • தேர்தல் மாவட்டம்கனக்கலே
 • ஆளுநர்இஹ்மி அக்டஸ்
பரப்பளவு
 • மொத்தம்9,737 km2 (3,759 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்5,40,662
 • அடர்த்தி56/km2 (140/sq mi)
தொலைபேசி குறியீடு0286
வாகனப் பதிவு17

இசுதான்புல்லைப் போலவே, கனக்கலே மாகாணத்திலும் ஒரு ஐரோப்பிய ( திரேசு ) மற்றும் ஒரு ஆசிய ( அனத்தோலியா ) பகுதி உள்ளது. ஐரோப்பிய பகுதி கல்லிப்போலி (கெலிபோலு) தீபகற்பத்தால் உருவனது, அதே நேரத்தில் ஆசிய பகுதி அனத்தோலியாவில் உள்ள வரலாற்றுப் பகுதியான டிராட் பகுதியுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது. மர்மரா கடல் மற்றும் ஏஜியன் கடலை இணைக்கும் தார்தனெல்சு நீரிணையால் அவை பிரிக்கப்படுகின்றன.

திராய் தொல்லியல் தளம் அனக்கலே மாகாணத்தில் காணப்படுகிறது.

வரலாறு தொகு

துவக்கக்கால துருக்கிய குடியரசில், பிகா மற்றும் கெலிபோலுவின் ஒட்டோமான் கால சஞ்சா நிர்வாகப் பிரிவுகளை ஒழிப்பதன் மூலம் அனக்கலே மாகாணம் உருவாக்கபட்டது. 1927 ஆம் ஆண்டய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அனக்கலே நகரானது அதன் அண்டை கிராமங்களைத் தவிர்த்து 8,500 மக்களைக் கொண்டிருந்தது. பண்டைய காலங்களில் "ஹெலெஸ்பொன்டோஸ்" மற்றும் "டார்டனெல்லஸ்" என்றும் அழைக்கப்பட்ட கனக்கலே, சுமார் 3,000 ஆண்டுகளாக பல நாகரிகங்களுக்கு இடமளித்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கிமு 2500 இல் லிடியர்களால் ஆளப்பட்டு பூகம்பப் பேரழிவால் அழிவுற்ற பழங்கால டிராய் (ட்ரோயா) நகரத்தின் இடிபாடுகளை இன்னும் கொண்டுள்ளது. கிமு 336 இல், பாரசீக சாம்ராஜ்யம் அனத்தோலியாவில் முக்கியமான சக்தியாக மாறியது. இது பண்டைய கிரேக்கத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பேரரசர் அலெக்சாந்தரால் நிகழ்த்தப்பட்டது. உதுமானியர் காலத்தில் அனக்காலின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டது.

19, பெப்ரவரி, 1934 அன்று இந்த மாகாணம் இரண்டாவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் பிரிவில் சேர்க்கப்பட்டது, இந்தப் பிரிவில் எடிர்னே, அனக்கலே, கோர்க்லாரெலி, டெக்கிர்டாஸ் மாகாணங்கள் அடங்கி இருந்தது . [2] இது ஒரு படைத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலால் ஆளப்பட்டது, அவர் குடிமை சமூகம், இராணுவம், கல்வி போன்ற விஷயங்களில் பரந்த அளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தார். [3] இன்ஸ்பெக்டரேட் ஜெனரலின் அலுவலகம் 1948 இல் கைவிடப்பட்டது [4] ஆனால் இன்ஸ்பெக்டரேட் ஜெனரல்களின் சட்ட கட்டமைப்பானது ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் 1952 இல் ரத்து செய்யப்பட்டது. [5]

வேளாண்மை தொகு

துருக்கியில் திராட்சை பயிரிடுதல் மற்றும் ஒயின் தயாரித்தலில் குறிப்பிடத்தக்க பகுதியாக அனாக்கலே மாகாணம் உள்ளது. கல்லிபோலி தீபகற்பத்தில் சரோஸ் வளைகுடாவிற்கும் கெலிபோலுக்கும் இடையிலான பகுதியில் திராட்சைத் தோட்டங்கள் வளர்க்கபடுகின்றன.

சுற்றுச்சூழல் தொகு

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்கள் பல இங்கே உள்ளன. இவற்றில் சில புகை வடிப்பான்களுக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.[6]

மாவட்டங்கள் தொகு

அனக்கலே மாகாணம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அய்வாசக்
  • பயராமிக்
  • பிகா
  • போஸ்கடா
  • அன்
  • கனக்கலே
  • ஈசியாபட்
  • எசைன்,
  • கெலிபோலு
  • Gökeada
  • லாப்செக்கி
  • யெனிஸ்,

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Cagaptay, Soner (2006). Islam, Secularism, and Nationalism in Modern Turkey; Who is a Turk. Routledge. பக். 47. 
  3. Pekesen, Berna. The Heritage of Edirne in Ottoman and Turkish Times: Continuities, Disruptions and Reconnections. Walter de Gruyter GmbH & Co KG. பக். 423–424. 
  4. Bayir, Derya. Minorities and Nationalism in Turkish Law. Routledge. 
  5. Bozarslan, Hamit. The Cambridge History of Turkey. Cambridge University Press. பக். 343. 
  6. Başkanı, M. M. O.; ki, Termik Santraller İle İlgili Bir Basın Açıklaması Yaptı-Kararara Haber – Güncel Hukuk Haberleri dedi (2020-01-24). "MMO Başkanı, Termik Santraller İle İlgili Bir Basın Açıklaması Yaptı". Enerji Portalı (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக்கலே_மாகாணம்&oldid=3404732" இலிருந்து மீள்விக்கப்பட்டது