கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு மொழி: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1][2][3] இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

கனடா நாள்
Canada Day
மொண்ட்ரியாலில் கனடா நாள் அணிவகுப்பைப் பார்வையிடும் சிறுவர்கள்
பிற பெயர்(கள்)Fête du Canada;
முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது
கடைபிடிப்போர்கனடா
வகைவரலாற்று, கலாசார, தேசிய அளவில்
கொண்டாட்டங்கள்வாணவேடிக்கை, அணிவகுப்புகள், இசைநிகழ்ச்சிகள், கேளிக்கைகள், சுற்றுலாக்கள்
நாள்சூலை 1
நியூஃபவுண்ட்லேண்டின் செயின்ட் ஜான்ஸ், க்விடி விடியில் கனடா தின பட்டாசு

நினைவு விழா தொகு

பொதுவாக ஊடகங்களில் "கனடாவின் பிறந்த நாள்"[4] என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது[5].

நடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி,[6] கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன[7]. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Canada in the Making > Constitutional History > 1867–1931: Becoming a Nation". கனடியானா. Archived from the original on 2010-02-09. பார்க்கப்பட்ட நாள் சூன் 16, 2011.
  2. Department of Natural Resources. "Natural Resources Canada > Atlas Home > Explore Our Maps > History > Territorial Evolution > Territorial Evolution, 1867". Queen's Printer for Canada. Archived from the original on டிசம்பர் 15, 2010. பார்க்கப்பட்ட நாள் June 16, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Moore, Christopher (1998). 1867: How the Fathers Made a Deal. Toronto: McClelland & Stewart. பக். 1, 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7710-6096-0. http://books.google.com/?id=Xumx9T6CrcIC&printsec=frontcover&q. 
  4. Panetta, Alexander; Pedwell, Terry (July 2, 2007). "An unforgettable Canada Day, eh?". Toronto Star. http://www.thestar.com/article/231568. பார்த்த நாள்: May 12, 2007. 
  5. Colquhoun, A. H. U. (2009). "The Fathers of Confederation: A Chronicle of the Birth of the Dominion". in Wrong, George M.; Langton, H. H.. The Chronicles of Canada. III. Tucson: Fireship Press. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-934757-51-2. http://books.google.com/?id=Qs6IKxQxUjsC&printsec=frontcover&q. பார்த்த நாள்: July 1, 2010. 
  6. Canada Department of Justice (1985). "Holiday Act". Canada Department of Justice. பார்க்கப்பட்ட நாள் June 18, 2012.
  7. Government of Saskatchewan (June 18, 2007). "Canada Day to be observed Monday, July 2". Queen's Printer for Saskatchewan. Archived from the original on ஜூலை 6, 2011. பார்க்கப்பட்ட நாள் January 23, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கனடா நாள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_நாள்&oldid=3791894" இலிருந்து மீள்விக்கப்பட்டது