கனிஷ்கர் பேழை



கனிஷ்கர் பேழை (Kanishka casket) குசானப் பேரரசர் கனிஷ்கர், தற்கால பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் நிறுவிய கனிஷ்கரின் தூபி இருந்த இடத்தில், [1][1] 1908 - 1909களில் அகழ்வாராய்ச்சி செய்த போது பௌத்தச் சின்னங்கள் கொண்ட அழகிய செப்புப் பேழை கிடைத்தது. அதற்கு கனிஷ்கர் பேழை எனப்பெயரிடப்பட்டது. பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட இப்பேழை பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில் கிபி 127ல் உருவாக்கப்பட்டது.

கிபி 127 காலத்திய கனிஷ்கரின் பேழையின் மூடிப் பகுதியில், கௌதம புத்தரின் இருபுரங்களில் இந்திரன் மற்றும் பிரம்மா மற்றும் அடிப்பகுதியின் நடுவே நின்ற நிலையில் கனிஷ்கர், பெசாவர் அருங்காட்சியகம்
கனிஷ்கர் பேழையின் அடிப்புறத்தில் கௌதம புத்தரைச் சுற்றிலும் தேவதைகளும், போதிசத்துவரும்

வரலாறு & விளக்கம் தொகு

1908 - 1909ல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் டேவிட் பிரய்னார்டு ஸ்பூனர் என்பவர் தலைமையில், கனிஷ்கரின் தூபி அமைந்த இடத்தில் அகழாய்வு செய்த போது, கனிஷ்கரின் செப்புப் பேழையும், அதனுள் இருந்த கௌதம புத்தரின் மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தார்.[2]

கனிஷ்கரின் பேழையின் மேற்புறத்தில் இந்திரன், கௌதம புத்தர் (நடுவில்) மற்றும் பிரம்மா உருவங்களும், அடிப்புறத்தில் பாரசீக சமய சந்திரன் மற்றும் சூரிய தேவர்களுக்கு நடுவில் கனிஷ்கரின் உருவம், பறக்கும் அன்னம், போதிசத்துவர்கள் மற்றும் தேவதைகளின் உருவங்களுடன் இப்பேழை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேழையில் இருந்த கௌதம புத்தரின் மூன்று புனித எலும்புத் துண்டுகள் மட்டும்[3][4], மியான்மர் நாட்டின், மண்டலை நகரத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் பௌத்தர்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.[5][6]கனிஷ்கரின் பேழையில் காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது.

கனிஷ்கர் பேழை தற்போது பெசாவர் அருங்காட்சியக்தில் உள்ளது. இதன் பிரதி ஒன்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[7]

பேழையின் மூடிப் பகுதியில் கௌதம புத்தரை வணங்கும் நிலையில் பிரம்மாவும், இந்திரனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. பேழையின் மூடியின் ஓரத்தில் பறக்கும் அன்னப் பறவைகளுடன் உள்ளது. மேலும் பேழையின் மறு பக்கத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தருக்கு அருகில் போதிசத்துவர்கள் மற்றும் தேவதைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பேழையின் தேவதைகள் மற்றும் மலர்மாலை கிரேக்க ஹெலனியக் கலை வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சிகள் தொகு

கனிஷ்கரின் பேழை தொடர்பான உலோகச் சிற்பங்கள்

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Le, Huu Phuoc (2010). Buddhist Architecture. Grafikol. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780984404308. https://books.google.com/?id=9jb364g4BvoC&pg=PA51&dq=hephthalite+peshawar#v=onepage&q=hephthalite%20peshawar&f=false. பார்த்த நாள்: 24 March 2017. 
  2. Spooner, D. B. (1908–9): "Excavations at Shāh-ji-Dherī." Archaeological Survey of India, p. 49.
  3. Spooner, D. B. (1908-9): "Excavations at Shāh-ji-Dherī." Archaeological Survey of India, p. 49.
  4. Marshall, John H. (1909): "Archaeological Exploration in India, 1908-9." (Section on: "The stūpa of Kanishka and relics of the Buddha"). Journal of the Royal Asiatic Society, 1909, pp. 1056-1061.
  5. Marshall, John H. (1909): "Archaeological Exploration in India, 1908–9." (Section on: "The stūpa of Kanishka and relics of the Buddha"). Journal of the Royal Asiatic Society, 1909, pp. 1056–1061.
  6. Rai Govind Chandra (1 January 1979). Indo-Greek Jewellery. Abhinav Publications. பக். 82–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-088-4. https://books.google.com/books?id=97od3sgsAjcC&pg=PA82. பார்த்த நாள்: 13 December 2012. 
  7. Collection online

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிஷ்கர்_பேழை&oldid=3447937" இலிருந்து மீள்விக்கப்பட்டது