கம்லா சவுத்ரி

கம்லா சவுத்ரி (Kamla Chaudhry 1908-1970) இந்திய சிறுகதை எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கம்லா சவுத்ரி 1908 பிப்ரவரி 22 அன்று லக்னோவில் பிறந்தார். இவரது தந்தை ராய் மன்மோகன் தயால், துணை ஆட்சியராக இருந்தார்.[1] இவரது தாய்வழி தாத்தா 1857 முதல் சுதந்திரப் போரில் லக்னோவில் சுதந்திர இவத் படைகளின் தளபதியாக இருந்தார்.

தொழில் வாழ்க்கை தொகு

1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் போது, சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அதன் பின்னர் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் குழுவின் 54 வது அமர்வின் போது மூத்த துணைத் தலைவராக இவர் செயல்பட்டார். இவர் இந்திய அரசியலமைப்பு சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார், அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இவர் 1952 வரை இந்திய மாகாண அரசாங்கத்தின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் உத்தரப்பிரதேச மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

1962-ல் சவுத்ரி 1962 இந்திய பொதுத் தேர்தலில் வென்ற பிறகு 3 வது மக்களவை உறுப்பினரானார்.[2] இவர் தனது எதிர் வேட்பாளரை 28,633 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] உன்மாத் (1934), பிக்னிக் (1936), யாத்திரை (1947) மற்றும் பெல் பத்ரா ஆகியவை இவரது கதைத் தொகுப்புகள் ஆகும். பாலின பாகுபாடு, விவசாயிகள் சுரண்டப்படுவது மற்றும் விதவைகளின் மோசமான நிலை ஆகியவை இவரது படைப்புகளின் முக்கிய கருப்பொருள்கள் ஆகும்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் பிப்ரவரி 1922 இல் ஜே.எம். சவுத்ரியை மணந்தார். இவரது மாமியார் ஸ்வராஜ்ய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு எழுத்தாளர் டாக்டர் ஈரா சக்சேனா மற்றும் மறைந்த மாதவேந்திர மோகன் மற்றும் டாக்டர் ஹேமேந்திர மோகன் சவுத்ரி உட்பட சில குழந்தைகள் இருந்தனர்.

சான்றுகள் தொகு

  1. "Members Bioprofile: Chaudhri, Shrimati Kamala". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. Saṃsadīya Patrikā. https://books.google.com/books?id=CfhflI69xYsC. 
  3. "Statistical Report on General Elections, 1962 to the Third Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 440. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  4. Women Writing in India: 600 B.C. to the early twentieth century. https://books.google.com/books?id=u297RJP9gvwC&pg=PA472. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்லா_சவுத்ரி&oldid=3743716" இலிருந்து மீள்விக்கப்பட்டது