கருணாநிதி குடும்பம்

கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாட்டில், இந்தியாவில் அரசியல், வணிக, ஊடகத்துறைகளில் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாகும். கருணாநிதி, அவரது மகன்கள், மகள்கள், மருமக்கள் என விரிந்த அவரின் குடும்பத்தவர்கள் தமிழ்நாட்டின் பல துறைகளில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.[1]

குடும்பம் தொகு

மனைவிகள்

மகள்கள்

சகோதரியின் மகன்கள்

சகோதரியின் பேரன்கள்

பேத்திகள்

  • அஞ்சுக செல்வி
  • செந்தாமரை
  • பூங்குழலி

அரசியல் தொகு

கருணாநிதி தொகு

முதன்மைக் கட்டுரை

சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கம், 1949- ல் திமுக அரசியல் கட்சியாக உருவெடுத்து, 1967-ல் முதல்முறையாக அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியை வென்றது. அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தெரிவானார். அன்று முதல் கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ளார். கருணாநிதி தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக உள்ளார். 2008–2009 இல் இவரது ஆட்சியின்போது பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் 2018 ஆண்டு இயற்கை எய்தினார்.[2][3] இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.[4]

மு. க. ஸ்டாலின் தொகு

முதன்மைக் கட்டுரை

கருணாநிதியின் மூன்றாம் மகன். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் 2009–2011 காலப் பகுதியில் இருந்தவர். அதற்கு முன்னர் சட்டமன்ற அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் இசுடாலின் பொறுப்பு வகித்துள்ளார். இவரே கருணாநிதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வாரிசாக ஊடகத்தில் அறியப்படுகிறார்.2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

மு. க. அழகிரி தொகு

முதன்மைக் கட்டுரை

கருணாநிதியின் இரண்டாம் மகன். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை வகித்தார். இவர் கருணாநிதிக்குப் பின்பு திமுக தலைமை பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இவரும் இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கபட்டது குறிப்பிடதக்கது. திமுக முன்னாள் அமைச்சர் த. கிருட்டிணன் கொலை வழக்கு, திருமங்கலம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக தாக்குதல் மற்றும் தயா சைபர் டெக் பார்க் நில அபகரிப்பு வழக்கு என ஏராளமான சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்.

Read more at: https://tamil.oneindia.com/politicians/alagiri-m-k-39507.html

கனிமொழி தொகு

முதன்மைக் கட்டுரை

கருணாநிதியின் மகள். நடுவண் அரசு சட்டமன்ற அவை உறுப்பினராக உள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படுகிறார்.

முரசொலி மாறன் தொகு

கருணாநிதியின் இரண்டாவது சகோதரி சண்முகசுந்தரியின் மகன். திமுக பரப்புரை பத்திரிகையான முரசொலியின் ஆசிரியராக இருந்தவர். மூன்று முறை நடுவண் அரசில் அமைச்சராக இருந்தவர்

முரசொலி செல்வம் தொகு

கருணாநிதியின், இரண்டாவது சகோதரி சண்முகசுந்தரி மற்றொரு மகன். கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார். பெங்களூரில் ஒளிபரப்பாகும் சன் குழுமத்தை சேர்ந்த கன்னட மொழியிலான உதயா தொலைக்காட்சியை நிர்வகித்து வருகிறார்.

கலாநிதி மாறன் தொகு

முரசொலி மாறனின் முதல் மகன். சன் குழுமத்தின் தலைவர்.

தயாநிதி மாறன் தொகு

முரசொலி மாறனின் இரண்டாம் மகன், கருணாநிதியின், சகோதரியின் பேரன். முன்னர் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக இருந்தவர். நெசவுத்துறை அமைச்சராக இருந்து ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார். இவர் இந்தி மொழியில் பேசுவதிலும், படிப்பதிலும் புலமைமிக்கவர்.[மேற்கோள் தேவை]

குடும்பத்தைச் சார்ந்த நிறுவனங்கள் தொகு

நிறுவனம் குடும்ப நபர் பொறுப்பு ஆண்டுகள் குறிப்பு
சன் குழுமம் கலாநிதி மாறன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் 1993–தற்போதுவரை கல் மீடியா சர்வீஸ் பிரைவேட் லிட் குழுமம்

இந்திய மொழிகளில் 32 தொலைக்காட்சி அலைவரிசைகள்
இந்திய மொழிகளில் 45 வானொளி நிலையங்கள்
தமிழ் மொழியில் தினகரன் மற்றும் தமிழ்முரசு தினசரி நாளிதழ்கள்
தமிழ் மொழியில் 4 வார இதழ்கள்
சன் பிக்சர்ஸ் - திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம்
சன் டைரக்ட் - செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவை வழங்குநர்
சுமங்கலி கேபிள் விசன் - கம்பிவழி தொலைக்காட்சி சேவை வழங்குநர்
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மாநில அளவிலான கிரிக்கெட் அணி

கலைஞர் தொலைக்காட்சி தயாளு அம்மாள் உரிமையாளர் 2008–தற்போதுவரை 60% பங்குதாரர்[5]
கனிமொழி உரிமையாளர் 2008–தற்போதுவரை 20% பங்குதாரர்[5]
வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் ராசாத்தி அம்மாள் பங்குதாரர் 2004-தற்போதுவரை போக்குவரத்து மற்றும் இடப்பெயர்வு மேலாண்மை நிறுவனம்[6][7]
கிளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரி உரிமையாளார் 2008–தற்போதுவரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம்[8]
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் உரிமையாளர் 2008–தற்போதுவரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம்[9]
மோகனா மூவீஸ் மு. க. தமிழரசு உரிமையாளர் 2008–தற்போதுவரை திரைப்படத் தயாரிப்பு
தயா சைபர் பார்க் பிரைவேட் லிட், மதுரை அழகிரி குடும்பம் உரிமையாளர் 2006–தற்போது தகவல்தொழிற்நுட்ப பூங்கா[10]
இன்பாக்ஸ் 1305 கிருத்திகா உதயாநிதி உரிமையாளர், தலைமையாசிரியர் 2008–தெரியவில்லை வார இதழ்[11]
தமிழ் மையம் கனிமொழி இயக்குநர் அரசு சாரா அமைப்பு[12]

வணிகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. கருணாநிதியின் குடும்ப மரம்
  2. ஈழத்தமிழர்கள் வெறுப்பது தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான்-விஜயகாந்த்
  3. கருணாநிதி மீண்டும் துரோகம் இழைத்துள்ளார்: தமிழருவி மணியன்
  4. ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகங்கள்: வைகோ[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "Kanimozhi 'active brain' behind Kalaignar TV operations: CBI". Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2011-04-26/news/29475332_1_kalaignar-tv-second-chargesheet-cineyug. 
  6. "Net worth of TN's top leaders runs into more than Rs 130 cr Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/7783634.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/7783634.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst. பார்த்த நாள்: 28 December 2018. 
  7. "WEST GATE LOGISTICS PRIVATE LIMITED". zaubacorp.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
  8. "Ajith's 50th movie by Goutham Menon!". IndiaGlitz. 2009. Archived from the original on 16 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 25 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Udhayanidhi Stalin - Filmography, Movies, Photos, Biography, Wallpapers, Videos, Fan Club". Popcorn.oneindia.in. Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2011-05-02.
  10. "தயா "சைபர் பார்க்' பூங்காவில் மழைநீர் வடிகால் திட்டம்: மேடையை உடைக்க உத்தரவு". தினமலர். http://www.dinamalar.com/news_detail.asp?id=794621. பார்த்த நாள்: 28 December 2018. 
  11. "Don't have to make women-centric film: Kiruthiga Udhayanidhi (Interview)". indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.
  12. Singh, Onkar (15 December 2010). "CBI raids Radia, Raja's friends; claims breakthough [sic]". ரெடிப்.காம். http://www.rediff.com/news/slide-show/slide-show-1-cbi-raids-radia-rajas-friends-claims-breakthough/20101215.htm. பார்த்த நாள்: 12 June 2011. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணாநிதி_குடும்பம்&oldid=3928597" இலிருந்து மீள்விக்கப்பட்டது