கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1110)

கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் கலிங்க அரசு மீது கி.பி. 1110 இல் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவதும் மிகவும் புகழ்பெற்ற படையெடுப்பும் ஆகும்.

முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியும் பல்லவ அரச குலத்தவனுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சென்ற சோழப்படைகள் எளிதாகக் கலிங்கப் படையைத் தோற்கடித்து, அதன் அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் ஓடிப்போகும்படி செய்தது. இப்போரும் அதன் விளைவும் கலிங்கத்துப்பரணி எனும் நாட்டுப்பாடலை உருவாக்கியது.

விளைவு தொகு

கிபி 1097 இல் நடந்த கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பினால் கலிங்க அரசு சோழருக்குக் கீழ்ப்பட்டு, கலிங்க அரசன் சோழப் பேரரசருக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கன் இரண்டு ஆண்டுகள் கப்பம் செலுத்தாது விட்டதும், முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்தின் மீதான போரை அறிவித்து, தன் அமைச்சரும் படைத்தளபதியுமான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் போர் நடக்கச் செய்தான்[1]

போர்நிகழ்ச்சிகள் தொகு

கருணாகரத் தொண்டைமான் 1110 இல் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு, பாலாறு, பெண்ணாறு, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆகியவற்றைக் கடந்து கலிங்கத்தை அடைந்தார்.[1] படை முன்னேற்றத்தைத் தடுக்க ஆனந்தவர்மன் அனுப்பிய யானைப் படையை அழித்து, கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைச் சூறையாடிப் பாழாக்கினான்.[2] ஆனந்தவர்மன் சோழர் படையைப் போர்க்களத்தில் எதிர் கொண்டான். ஆனாலும் அவன் தோற்கடிக்கப்பட்டுப், போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான்.[1]

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 Sastri, p 322
  2. Sastri, p 321

உசாத்துணை நூல் தொகு