கல்லடிப் பாலம்

கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம், உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னான காலங்களில் 'பாடுமீனின்' இசையை கேட்க உதவியது.

கல்லடிப் பாலம்
பழைய கல்லடிப் பாலம் (மேலே)

புதிய கல்லடிப் பாலம் (கீழே) 000000

பிற பெயர்கள் லேடி மனிங் பாலம்
போக்குவரத்து 3 வீதி (2 நெடுங்சாலை வீதிகள் மற்றும் 1 வீதியுடன் பாதசாரிகளுக்காக பகுதி
தாண்டுவது மட்டக்களப்பு வாவி
இடம் மட்டக்களப்பு, இலங்கை
பராமரிப்பு வீதி அதிகார சபை
வடிவமைப்பாளர் பிரித்தானிய இலங்கை (பழையது)
வடிவமைப்பு சட்டகப்பாலம்
கட்டுமானப் பொருள் இரும்பு, சீமெந்து
மொத்த நீளம் 288.35 மீ (புதியது)
அகலம் 14மீ (புதியது)
இடைத்தூண் எண்ணிக்கை 5 (பழையது)
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து ஒரு நாளைக்கு சராசரி 10,000
கட்டுமானம் முடிந்த தேதி 1924 (பழையது)
திறப்பு நாள் 22 மார்ச்சு 2013 (புதிய பாலம்)[1]
அமைவு 7°42′42″N 81°42′32″E / 7.71167°N 81.70889°E / 7.71167; 81.70889
கல்லடிப் பாலம் is located in இலங்கை
கல்லடிப் பாலம்

சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது.

புதிய கல்லடிப் பாலம் தொகு

தற்கால போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய முடியாமல் கல்லடிப் பாலம் காணப்படுவதால், இதற்கு அருகாமையில் புதிதாக ஓர் பாலம் 2.6 பில்லியன் (இலங்கை) ரூபா (அ.டொ. 20 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டு 22 மார்ச்சு 2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. சப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகவரினால் கடனுதவி அளிக்கப்பட்டு கட்டப்பட்ட இதன் நீளம் 288.35 மீ (946 அடி), அகலம் 14 மீ (46 அடி) ஆகும்.[2][3][4]

உசாத்துணை தொகு

  1. கல்லடி புதிய பாலம்
  2. "Japan Aided Project Management Unit". Road Development Authority. Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  3. Mudugamuwa, Maheesha (20 March 2013). "Connecting north and south Batticaloa New Kalladi Bridge opens Friday". The Island (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181111043633/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=75190. 
  4. "Sri Lankan President opens new Japan-funded Kalladi Bridge in East". Colombo Page. 22 March 2013 இம் மூலத்தில் இருந்து 25 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130325085412/http://www.colombopage.com/archive_13A/Mar22_1363969184CH.php. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kallady Bridge
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • [1] (ஆங்கிலம்) புதுக்கட்டுமானம்
  • [2] (PDF பதிப்பு) நூறு வருட மட்டுநகர் நினைவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லடிப்_பாலம்&oldid=3548307" இலிருந்து மீள்விக்கப்பட்டது