கல்லீரல் அழற்சி வகை ஏ

கல்லீரல் அழற்சி வகை ஏ (Hepatitis A) என்பது ஹெபடைடிஸ் ஏ வைரசால் (HAV) கல்லீரலில் ஏற்படும் கடுமையாகத் தொற்றக்கூடிய நோயாகும்.[1] இது முன்னர் தொற்றக்கூடிய கல்லீரல் அழற்சி (infectious hepatitis) என்று அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் குறைவாக அல்லது அறிகுறிகளே இல்லாமல் இருக்கும்.[2] இந்த நோய் தொற்றியதிலிருந்து இரண்டு முதல் ஆறு வாரங்களில் அறிகுறிகளைக் காணலாம்.[3] அறிகுறிகள் கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் வரை நீடித்திருக்கும், அதில் அடங்குவன: குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி.[2] தொடக்க தொற்றுக்குப் பிறகான ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட 10–15% பேருக்கு அறிகுறிகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம்.[2] பொதுவாக முதியோருக்கு கடுமையான கல்லீரல் செயலிழப்பும் அரிதாக ஏற்படலாம்.[2]

கல்லீரல் அழற்சி வகை ஏ
கல்லீரல் அழற்சி வகை ஏ காரணமாக உருவாகும் ஒருவகை மஞ்சள் காமாலை வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்றுநோய், இரைப்பை குடலியல்
ஐ.சி.டி.-10B15.
ஐ.சி.டி.-9070.0, 070.1
நோய்களின் தரவுத்தளம்5757
மெரிசின்பிளசு000278
ஈமெடிசின்med/991 ped/977
பேசியண்ட் ஐ.இகல்லீரல் அழற்சி வகை ஏ
ம.பா.தD006506

நோய் ஏற்படக் காரணம் தொகு

இந்த நோயானது, பாதிக்கப்பட்ட நோயாளிகள் அசுத்தப்படுத்திய உணவு அல்லது தண்ணீரை உண்ணுவதால் அல்லது அருந்துவதால் பொதுவாகப் பரவுகிறது.[2] இந்த நோய்க்கு நன்கு சமைக்கப்படாத ஒட்டுமீன் ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம்.[4] இது, இந்நோயுள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் கூட ஏற்படலாம்.[2] குழந்தைகள் நோயுற்று இருக்கும்போது அறிகுறிகள் எதுவும் இருக்காது என்பதால், எளிதில் மற்றவர்களுக்கும் தொற்றக்கூடும்.[2] ஒருமுறை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.[5] இந்நோய்க்கான அறிகுறிகள் மற்ற நோய்களின் அறிகுறிகள் போன்றே இருப்பதால் குருதிப் பரிசோதனையும் செய்ய வேண்டும்.[2] இது அறியப்பட்ட ஐந்து கல்லீரல் அழற்சி வைரசுகளில் ஒன்று: ஏ, பி, சி, டி, மற்றும் .

தடுப்பும் சிகிச்சையும் தொகு

ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி, நோயைத் தடுப்பதற்கு பயனுள்ளது.[2][6] இது சில நாடுகளில் குழந்தைகளுக்கும், ஏற்கனவே தடுப்பூசி போடாத நோய் தாக்க அதிக அபாயமுள்ள நபர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.[2][7] இது வாழ்நாள் முழுவதுக்கும் மிகவும் பயனுள்ளது.[2] கை கழுவுதல் மற்றும் நன்கு உணவைச் சமைத்தல் உள்ளிட்டவை மற்ற தடுப்பு முயற்சிகளாகும்.[2] இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை, இருப்பினும் தேவைப்பட்டால் குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவைக்கு ஓய்வும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.[2] எல்லா கல்லீரல் நோய்த் தொற்றுகளும் பொதுவாக முழுமையாகக் குணமடையும்.[2] கடுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால், கல்லீரல் மாற்று சிகிச்சையை மேற்கொள்ளலாம்.[2]

பரவல் தொகு

ஆண்டு ஒன்றுக்கு பன்னாட்டு அளவில் 1.5 மில்லியன் அறிகுறிகள் ஏற்படுகின்றன,[2] மொத்தத்தில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.[8] இது உலகின் பெரும்பாலும் மோசமாக சுத்திகரிப்பட்ட மற்றும் போதுமான சுத்தமான தண்ணீர் கிடைக்காத பகுதிகளில் பொதுவாக ஏற்படுகிறது.[7] வளரும் நாடுகளில் 90% குழந்தைகள் 10 வயதுக்குள் இதனால் பாதிக்கப்பட்டு, வயதுவந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்திமிக்கவர்களாக இருக்கிறார்கள்.[7] மிதமாக வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் வெளியே அதிகம் அனுமதிக்கப்படாததாலும், பரவலான தடுப்பூசி வழங்கப்படாததாலும் இந்நோய் திடீரென ஏற்படலாம்.[7] கடுமையான ஹெபடைடிஸ் ஏ காரணமாக 2010 இல், 102,000 பேர் இறந்தனர்.[9] ஒவ்வொரு ஆண்டும் சூலை 28 ஆம் தேதி வைரல் ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலகக் கல்லீரல் அழற்சி நாள் கொண்டாடப்படுகிறது.[7]

மேற்குறிப்புகள் தொகு

  1. Ryan KJ, Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ). McGraw Hill. பக். 541–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8385-8529-9. https://archive.org/details/sherrismedicalmi0000unse_q1i3. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 Matheny, SC; Kingery, JE (1 December 2012). "Hepatitis A.". Am Fam Physician 86 (11): 1027–34; quiz 1010–2. பப்மெட்:23198670. http://www.aafp.org/afp/2012/1201/p1027.html. 
  3. Connor BA (2005). "Hepatitis A vaccine in the last-minute traveler". Am. J. Med. 118 (Suppl 10A): 58S–62S. doi:10.1016/j.amjmed.2005.07.018. பப்மெட்:16271543. 
  4. Bellou, M.; Kokkinos, P.; Vantarakis, A. (March 2013). "Shellfish-borne viral outbreaks: a systematic review.". Food Environ Virol 5 (1): 13–23. doi:10.1007/s12560-012-9097-6. பப்மெட்:23412719. 
  5. The Encyclopedia of Hepatitis and Other Liver Diseases. Infobase. 2006. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-6990-3. http://books.google.ca/books?id=HfPU99jIfboC&pg=PA105. 
  6. Irving, GJ.; Holden, J.; Yang, R.; Pope, D. (2012). "Hepatitis A immunisation in persons not previously exposed to hepatitis A.". Cochrane Database Syst Rev 7: CD009051. doi:10.1002/14651858.CD009051.pub2. பப்மெட்:22786522. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Hepatitis A Fact sheet N°328". World Health Organization. July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
  8. Wasley, A; Fiore, A; Bell, BP (2006). "Hepatitis A in the era of vaccination.". Epidemiol Rev 28: 101–11. doi:10.1093/epirev/mxj012. பப்மெட்:16775039. http://epirev.oxfordjournals.org/content/28/1/101.long. 
  9. Lozano, R (Dec 15, 2012). "Global and regional mortality from 235 causes of death for 20 age groups in 1990 and 2010: a systematic analysis for the Global Burden of Disease Study 2010". Lancet 380 (9859): 2095–128. doi:10.1016/S0140-6736(12)61728-0. பப்மெட்:23245604. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லீரல்_அழற்சி_வகை_ஏ&oldid=3849472" இலிருந்து மீள்விக்கப்பட்டது