கள்ளிக்குயில்

கள்ளிக்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முண்ணாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: குயிலினம்
குடும்பம்: குயிற் குடும்பம்
பேரினம்: பூங்குயில்
இனம்: P. leschenaultii
இருசொற் பெயரீடு
Phaenicophaeus leschenaultii
(லெசன், 1830)
வேறு பெயர்கள்

Taccocua leschenaultii

கள்ளிக் குயில் (Phaenicophaeus leschenaultii), என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு பறவையினமாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தது.

பரவல் தொகு

கள்ளிக்குயில்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் இமயம் சார்ந்த பகுதிகளிலும், ராஜஸ்தான், பாக்கித்தானின் சில பகுதிகளிலும் வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் நிற வேறுபாடுகள் காரணமாக மூன்று வெவ்வேறு இனங்களாகச் சிலவேளைகளில் வரையறுக்கப்படுவதுண்டு.

தோற்றம் தொகு

 
இந்தியா, ராஜஸ்தான், பரத்பூர் நகரில்.
 
இந்தியா, ராஜஸ்தான், பரத்பூர் நகரில்.

இவை 42 செமீ வரை வளரக்கூடிய பெரிய பறவையினமாகும். இப்பறவையினம் பொதுவாக மண்ணிறம் அல்லது செம்மண்ணிறம் கொண்டதாகக் காணப்படும். நிறை கூடியதாயும் நீண்டும் காணப்படும் இப்பறவையினத்தின் வால் நுனியில் வெண்ணிறமான பக்கக் கோட்டமைப்பில் அமைந்த இறகுகளைக் கொண்டிருக்கும். இது செம்பகங்களை ஒத்துக் காணப்படும்.[2] இதன் சொண்டு கீழ் நோக்கி வளைந்தும் பிரகாசமான சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் கொண்டு காணப்படும். இவற்றின் ஆண், பெண் பறவைகள் நிறத்தினடிப்படையில் ஒரே மாதிரியாகக் காணப்பட்டாலும் குஞ்சுகள் நிறம் மங்கியனவாக இருக்கும். இதன் ஒலி "பிசுக்...பிசுக்" என்பது போலிருக்கும். சில வேளைகளில் "ப்..தங்" என்பது போன்ற ஒலியையும் ஏற்படுத்தும்.

வாழிடமும் உணவுப் பழக்கமும் தொகு

சிறுகீற்றுப் பூங்குயில்கள் பொதுவாக பெரு நிலப் பகுதியில், திறந்தவெளிப் புதர்கள், முட்காடுகள், சிறு காடுகள் போன்றவற்றிலேயே காணப்படும். இவை தனித்தோ, இணையாகவோ காணப்படலாம். இவை பூச்சிகள், பல்லிகள், சிறு பழங்கள் போன்றவற்றை உணவுக்காகப் பெறத் தக்க வகையில் இவற்றில் உடலமைப்பு வளைந்து காணப்படும். இப்பறவைகள் புதர்களுக்கிடையே கீரிப்பிள்ளை போன்று மிக வேகமாக ஓடக்கூடியனவாகும். மிகக் குறைவாகவே பறக்கக்கூடிய இப்பறவைகள் கிளைக்குக் கிளை தாவி மரங்களில் மிக வேகமாக ஏறக்கூடியனவாகும்.[3] (Glaucidium radiatum)

இவை பூச்சிகளையும், மயிர்க்கொட்டிகளையும், சிறு முன்னானிகளையுமே உணவாகக் கொண்டபோதிலும் சிறு பழங்களையும் சில வேளைகளில் உண்பதுண்டு.[4]

இனப்பெருக்கம் தொகு

சிறுகீற்றுப் பூங்குயில் ஏனைய பூங்குயில்களைப் போன்றே ஒட்டுண்ணியல்லாததாகும். இதன் பொதுவான இனப்பெருக்க காலம் மார்ச்சு முதல் ஓகத்து வரையிலுமாயினும், இது வாழும் இடத்துக்கேற்ப சற்று வேறுபடும். முட்தாவரங்களில் 2 முதல் 7 மீற்றர் வரையான உயரத்தில் இது பசிய இலைகளைக் கொண்டு கூடுகளை அமைத்துக்கொள்ளும். ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டைகள் வெண்கட்டி போன்ற நிறத்திற் காணப்படும்.

படவெளி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Taccocua leschenaultii". IUCN Red List of Threatened Species 2016: e.T22684104A93014547. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684104A93014547.en. https://www.iucnredlist.org/species/22684104/93014547. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. சாலிம் அலீ (பறவையியலாளர்); சிட்னி டில்லன் ரிப்ளே (1986/2001). Handbook of the Birds of India and Pakistan, 2nd ed.,10 vols (2nd ). ஒக்சுஃபர்ட் பல்கலைக்கழக அச்சகம். Bird Number 598
  3. சாலிம் அலீ (பறவையியலாளர்); ஜே. சி. தானியேல் (இயற்கையியலாளர்) (1983). The book of Indian Birds, Twelfth Centenary edition. பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம்/ஒக்சுஃபர்ட் பல்கலைக்கழக அச்சகம். 
  4. Grimmett, Richard; Carol Inskipp, and Tim Inskipp (1998). Guide to the Birds of Indian subcontinent. Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-04910-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளிக்குயில்&oldid=3769806" இலிருந்து மீள்விக்கப்பட்டது