கவனம் (Attention) என்பது ஒரு தகவல் அல்லது கூறின் தனித்த பகுதியின் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட  நடத்தை மற்றும் அறிதிறன் சார்ந்த செறிவு நிறைந்த ஒரு செயல்முறை ஆகும். இது அகவயத் தன்மை அல்லது புறவயத் தன்மை உடையதாகவும் கவனம் செலுத்தப்படக் கூடிய பொருளைத் தவிர சுற்றியுள்ள தெரிந்து கொள்ளக்கூடிய பொருட்கள் அல்லது கூறுகளைப் புறக்கணித்து கவனம் செலுத்தக் கூடிய பொருளின் மீது மட்டும் அதிகமான சிந்தனையைக் கொண்டிருக்கலாம். இது ஒரே சமயத்தில் தோன்றும் பல விதமான பொருட்கள் அல்லது தொடர் எண்ணங்களில் ஒன்றை மட்டும் தெளிவான மற்றும் விளக்கமான வடிவத்தை மனம் எடுத்துக் கொள்வதாகும். தொலை நோக்குதல், நனவின் செறிவு அதன் சாராம்சம். கவனம் என்பது வரையறுக்கப்பட்ட செயலாக்க வளங்களின் ஒதுக்கீடு எனவும் குறிக்கப்படுகிறது.[1]

குவிக்கப்பட்ட கவனம்

கவனம் என்பது கல்வி, உளவியல், நரம்பணுவியல், அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானம், மற்றும் நரம்புசார் உளவியல் ஆகிய புலங்களில் மிகவும் ஆய்வுக்குரிய களமாக உள்ளது. செயல்மிகு ஆய்வுகளின் களங்கள், கவனத்தை உருவாக்கும் புலனுணர்வு சார் குறிப்புகள் மற்றும் குறியீடுளின் மூலங்கள் மற்றும் பண்புகளை சரி செய்து அமைப்பதில் புலனுணர்வு நரம்பணுக்களில் தோன்றும் குறியீடுகள் மற்றும் செயல்படு நினைவாற்றல், விழிப்பு நிலை போன்ற இதர நடத்தை சார் அறிதிறன் செயல்முறைகள் மற்றும் கவனம் இவற்றுக்கிடையேயான தொடர்பு ஆகியவற்றின் மீதான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் தற்காலத்திய ஆராய்ச்சிக் குழுக்கள், நரம்புசார் உளவியலுக்கு முந்தைய ஆராய்ச்சியை விரிவுபடுத்துகிறது, அதாவது, புறவழி மூளைக் காயம் மற்றும் கவனத்தின் மீதான அதன் விளைவுகள் தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளைக் குறித்து ஆய்வுகளில் ஈடுபடுகின்றன. கலாச்சார மாற்றங்களுடனும் கவனமானது வேறுபடுகிறது.[2]

கவனம் மற்றும் நனவு நிலை இவற்றுக்கிடையேயான தொடர்பானது மிகவும் சிக்கலானதாகும். உறவுகளானது, அவை நீண்டகால தத்துவார்த்த ஆய்வுக்கு உத்தரவாதம் அளித்துள்ளன. மனநலம் மற்றும் நனவு நிலையின் ஒழுங்கின்மை முதல் செயற்கை நுண்ணறிவு வரை கவனத்தின் தாக்கத்தைக் கொண்டிருப்பதால் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான களங்கள் இருப்பதால் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நவீன வரையறை மற்றும் ஆய்வுகள் தொகு

உளவியல் என்பது அறிவியல் புலத்தின் ஒரு பிரிவாக அறியப்படும் வரை கவனம் என்பது தத்துவவியல் களத்திலேயே படிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, கவனம் தொடர்பான பல கண்டு பிடிப்புகள் தத்துவவியலாளர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. உளவியலறிஞர் சான் வாட்சன் என்பார் சுவான் லூயிசு விவேசுவை நவீன உளவியலின் தந்தை எனக் குறிப்பிடுகிறார். சுவான் லூயிசு விவேசு ஆன்மா மற்றும் வாழ்க்கை என்ற பொருள்படும் ”டி அனிமா எட் விடா” என்ற நுாலை எழுதியுள்ள காரணத்தால் அவரை சான் வாட்சன் இவ்வாறு சிறப்பு செய்கிறார். இந்த நுாலில் விவேசு அனுபவ ஆய்வின் முக்கியத்துவத்தை முதன் முதலில் அங்கீகரித்தவராகிறார்.[3] விவேசு “நினைவு“ தொடர்பான தனது ஆய்வில் துாண்டல்களுக்கு மிக நெருக்கமாக உள்ள அல்லது துாண்டல்களுக்கு மிக அதிகமாக துலங்கலை வெளிப்படுத்தக் கூடிய நபர்கள் பொருட்கள் அல்லது தகவல்களை மிக அதிக காலத்திற்கு நினைவில் வைத்துக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. John Robert Anderson (psychologist) (2004). Cognitive psychology and its implications (6th ed.). Worth Publishers. பக். 519. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7167-0110-1. https://books.google.com/?id=9P4p6eAULMoC. 
  2. Chavajay, P; Rogoff, B (1999). "Cultural variation in management of attention by children and their caregivers". Developmental Psychology 35 (4): 1079–1090. doi:10.1037/0012-1649.35.4.1079. பப்மெட்:10442876. https://archive.org/details/sim_developmental-psychology_1999-07_35_4/page/1079. 
  3. Johnson, Addie (2004). Attention: Theory and Practice. United States of America: SAGE Publications. பக். 1–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-2760-0. https://archive.org/details/attentiontheoryp0000john. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவனம்&oldid=3894098" இலிருந்து மீள்விக்கப்பட்டது