காசெகெம்வி

எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் இறுதி மன்னர்

காசெகெம்வி (Khasekhemwy) பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபின் இரண்டாம் வம்சத்தின் மன்னர்களில் 12-வதும் மற்றும் இறுதியானவர் ஆவார். இவர் எகிப்தை கிமு 2690 முதல் கிமு 2670 முடிய 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் மேல் எகிப்தில் சூனெத் எல் செபிப் எனுமிடத்தில் பெரிய அளவில் களிமண் செங்கல் கோட்டையை நிறுவினார். மேலும் நெக்கென், சக்காரா மற்றும் அபிதோஸ் நகரங்களில் கோட்டைகளை நிறுவினார். மேலும் இவர் தனக்கான சிலையை தானே நிறுவிக்கொண்டவர். இவரது கல்லறை அபிதோஸ் நகரத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.

Khasekhemwy
காசெகெம்வி
மன்னர் காசெகெம்வி சிலை
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்18 ஆண்டுகள் (கிமு 2690 முதல் கிமு 2670), எகிப்தின் இரண்டாம் வம்சம்
முன்னவர்சேத்-பெரிப்சென் அல்லது சேக்கெமிப்-பெரென்மாத்
பின்னவர்ஜோசெர்
  • Horus name: Khasekhem
    Ḫꜥj-sḫm
    "Horus, he whose power appears"
    G5
    N28S42
    Second Horus name: Khasekhemwy
    Ḫꜥj-sḫm.wj
    Horus, he whose two powers appear
    G5
    N28sxmsxm
    Horus-Seth-name
    Hor-Seth Khasekhemwy Netjerwy Hetepimef
    (Ḥr -Stẖ) ḫꜥj sḫm.wj ḫtp nṯrwj jm=f
    "The two powers are at peace within him"
  • நெப்டி பெயர்
    Khasekhemwy Nebwkhetsen
    Nb.tj-ḫꜥj-sḫm.wj-nbw-ḫt-sn
    The two powers appear, their bodies are of gold
    G16N28
    S42 S42
    S12
    F32
    S29
    N35


    Abydos King List
    Djadjay
    Ḏꜣḏꜣj
    <
    U28 U28 D1i i
    >


    Saqqara Tablet
    Beb(e)ty
    Bbtj
    <
    bbN21ii
    >


    Turin King List
    Beb(e)ty
    Bbtj
    V10Abbt
    Z4
    HASHHASH
    [1]

துணைவி(யர்)நிமெத்தப்
பிள்ளைகள்ஜோசெர்
ஹெதெபெர்நெப்தி
சேக்கெம்கெத் ?
சனக்த் ?
இறப்புகிமு 2686
அடக்கம்கல்லறை எண் V, உம் இல் காப்
நினைவுச் சின்னங்கள்நெக்கன் கோட்டை, சூனெத் இஸ் செபிப்[2]

மன்னர் காசெகெம்வி ஓரசு மற்றும் சேத் கடவுள் சின்னங்களை கொண்டிருந்தார்.[3] இம்மன்னர் தனக்கான பெரிய கல்லறையை 58 அறைகளுடன், 70 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் அபிதோஸ் நகரத்தில் சுண்ணாம்புக் கற்களால் நிறுவிக்கொண்டவர். இவர் வடக்கு எகிப்தின் எதிரிகளை வேட்டையாடி, நெக்கென் நகரத்தை தனது இராச்சியத்தின் தலைநகராகக் கொண்டவர் எனக்கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது. [4]

இவரது மகன் ஜோசெர் மூன்றாம் வம்சத்தை நிறுவி பழைய எகிப்திய இராச்சியத்தை ஆட்சி செய்தவர் ஆவார்.

மன்னர் காசெகெம்வி கட்டிய கோட்டை
அபிதோஸ் நகரத்தில் மன்னர் காசெகெம்வி கட்டிய கோட்டை, ஆண்டு கிமு 2700

இதனையும் காண்க தொகு

ஆதார நூற்பட்டியல் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khasekhemwy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

ஊசாத்துணை தொகு

  1. Alan H. Gardiner: The royal canon of Turin.
  2. Khasekhemwy's fortபரணிடப்பட்டது 2012-09-03 at the வந்தவழி இயந்திரம்
  3. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson Ltd, 2006 paperback, p. 26
  4. "Khasekhemwy | Ancient Egypt Online" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காசெகெம்வி&oldid=3449281" இலிருந்து மீள்விக்கப்பட்டது