கூட்டில் காடை முட்டைகள்

காடை (ஆங்கிலம்: quail) என்பது ஃபசியானிடே (தொகையுடைப் பறவைகள்) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பெரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். புது உலகக் காடைகள் (ஓடோண்டோஃபோரிடே குடும்பம்) மற்றும் பட்டன் காடைகள் (டுர்னிசிடே குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன, எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.

இனங்கள் தொகு

கீழ்க்காணும் ஃபசியானிடே குடும்பத்திலுள்ள பறவைகள் காடைகள் என வழங்கப்படுகின்றன.

நடத்தை தொகு

காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழ் பறவைகளாகும். இவை விதைகளை உண்கின்றன, எனினும் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் போன்ற சிறிய விலங்குகளையும் உண்கின்றன. இவை நிலத்தில் கூடுகள் அமைக்கின்றன; இவை வேகமாகக் குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியான.[1][2] சில வகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் (Coturnix quail) பெருமளவில் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன.

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Coturnix japonica (Japanese quail)". Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 2007-09-21.
  2. "Coturnix coturnix (common quail)". Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 2007-09-21.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடை&oldid=3834869" இலிருந்து மீள்விக்கப்பட்டது