காத்தவராயன் (2008 திரைப்படம்)

காத்தவராயன் இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் 2008 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் கரண், விதிசா, வடிவேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

காத்தவராயன்
இயக்கம்சலங்கை துரை
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புகரண்
விதிசா
இராதா
வடிவேலு
வெளியீடுமே 30, 2008 (2008-05-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

ஒகேனக்கல் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் கரன், அத்தொழிலை விட்டுவிட்டு பல போதை மருந்து கும்பலை காவல்துறையிடம் எப்படி பிடித்து கொடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

2008 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. வட்டிக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்ப வாங்கமுடியாமல் அனைவரிடமும் ஏமாறுகிறார். இத்திரைப்படத்தின் இசையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என சிபி விமர்சனம் செய்தது."[1][2]

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

எண் பாடல் பாடியவர்கள்
1 'ஆசையே அலை போலே' ஸ்ரீகாந்த் தேவா, மாலதி லெட்சுமணன்[3]
2 'ஏ போங்குப்பா போங்குப்பா' நவீன், சய்ந்தவி[4]
3 'ஒரு காலை ஒரு மாலை' கல்யாணி மேனன்[5]
4 'ஒரு ஐக்கூ பார்வை' திப்பு, சுசித்ரா[6]
5 'காத்தவராயன் சாமி' கரண், ராஜாமணியம்மாள்[7]
6 'காத்தவராயா என்ன கடத்திட்டு' அனுராதா ஸ்ரீராம்[8]

விருதுகள் தொகு

இத்திரைப்படத்தில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் வடிவேலு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை வென்றார். இது இவர் வென்றுள்ள ஐந்தாவது தமிழக அரசின் விருதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-12. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
  3. Tamil mp3songs lyrics.com
  4. Tamil Mp3 Song Lyrics
  5. Tamil Song Lyrics
  6. "Tamil Mp3 Lyrics". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2014-09-06.
  7. Tamil Mp3 Song Lyrics.Com
  8. Tamil Mp3 Songs