காத்திருக்க நேரமில்லை

காத்திருக்க நேரமில்லை 1993 ஆம் ஆண்டு கார்த்திக், சிவரஞ்சனி மற்றும் குஷ்பூ ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், குலோத்துங்கன் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். கார்த்திக் இரு வேடங்களில் நடித்த திரைப்படம்.[1][2][3]

காத்திருக்க நேரமில்லை
இயக்கம்குலோத்துங்கன்
தயாரிப்புஎஸ். கண்ணன்
ஹிதேஷ் ஜபக்
லலிதா சிவலிங்கம்
கதைபி. கலைமணி (வசனம்)
திரைக்கதைகுலோத்துங்கன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஅப்துல் ரகுமான்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்மாஸ் மீடியா இன்டர்நெஷனல்
விநியோகம்மாஸ் மீடியா இன்டர்நேஷனல்
வெளியீடுதிசம்பர் 3, 1993 (1993-12-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

ராஜு (கார்த்திக்) மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் (சின்னி ஜெயந்த், வடிவேலு, தியாகு) அனாதைக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக பணக்காரர்களிடமுள்ள சட்டத்திற்குப் புறம்பான கருப்புப் பணத்தைத் திருடுபவர்கள். இந்த நால்வரும் குற்றவாளிகள் என்று டி. ஐ. ஜி. மோகன்ராஜிற்கு (ராஜேஷ்) தெரிந்தாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களைக் கைது செய்ய இயலாத கையறு நிலையில் இருக்கிறார். மோகன் ராஜின் மகள் ராதிகா (சிவரஞ்சனி) ராஜூவை காதலிக்கிறாள். அவர்களின் காதலை ஏற்க மறுக்கும் மோகன்ராஜ், ராதிகாவை காவல்துறை அதிகாரியான அஜித்திற்கு (உதய் பிரகாஷ்) மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். ஒருநாள் ராஜு அஜித்தைக் கொன்றுவிடுகிறான். அங்கேவரும் மோகன்ராஜ் கொலை நடந்த இடத்தில் ராஜூவைப் பார்க்கிறார்.

கடந்தகாலம் : கொலை செய்தவன் ராஜு இல்லை. ராஜூவைப் போல முகத்தோற்றம் கொண்ட சோமசேகர். அவனும் பவானியும் (குஷ்பூ) காதலித்துத் திருமணம் செய்கின்றனர். சட்டர்ஜி (நாசர்) சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை செய்பவன். சட்டர்ஜி சோமசேகருக்குச் சொந்தமான சொத்துக்களை வாங்க முயற்சிக்கிறான். அவனுடைய தவறான தொழில்களைப் பற்றி அறியும் சோமசேகர் அவனுக்குத் தன் சொத்துக்களை விற்க மறுக்கிறான். இதனால் ஆத்திரம் கொள்ளும் சட்டர்ஜி அவனது ஆட்கள் மூலம் பவானியைக் கொல்கிறான். அந்தத் தாக்குதலில் பலத்தக் காயமடையும் சோமசேகர் தன் பெண் குழந்தையுடன் தப்பிக்கிறான். சில வருடங்கள் கழித்து அவனது பெண் குழந்தையை அஜித் கடத்துகிறான்.

தன் கதையை சொல்லிமுடிக்கும் சோமசேகர் தான் இன்னும் 2 பேரைக் கொல்லப்போவதாகக் கூறுகிறான். சோமசேகருக்கு உதவ முடிவு செய்கிறான் ராஜு. கடத்தப்பட்ட சோமசேகரின் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்கள். தன்னுடைய பெண் குழந்தையை வளர்க்கும் பொறுப்பையும், தன் சொத்துக்களையும் ராஜூ வசம் ஒப்படைக்கிறான் சோமசேகர். சட்டர்ஜியைக் கொன்று அவனும் இறக்கிறான்.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி மற்றும் புலமைப்பித்தன்.[4][5]

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலநீளம்
1 வா காத்திருக்க நேரமில்லை எஸ். பி. பாலசுப்ரமணியன், எஸ். ஜானகி வாலி 5:03
2 காட்டிலொரு காடைக்கு மனோ 4:44
3 துளியோ துளி சித்ரா 4:52
4 நிலவா நிலவா மனோ, மின்மினி புலமைப்பித்தன் 4:59
5 கஸ்தூரி மானே மானே இளையராஜா 2:42
6 மச்சி மச்சி மனோ 4:58

மேற்கோள்கள் தொகு

  1. "காத்திருக்க நேரமில்லை". Archived from the original on 2012-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
  2. "காத்திருக்க நேரமில்லை".
  3. "காத்திருக்க நேரமில்லை". Archived from the original on 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.
  4. "பாடல்கள்".
  5. "பாடல்கள்". Archived from the original on 2011-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்திருக்க_நேரமில்லை&oldid=3791981" இலிருந்து மீள்விக்கப்பட்டது