காந்தீரவ நரசிம்மராச உடையார்

இளவரசன் சிறீ சர் காந்தீரவா நரசிம்மராச உடையார் (Kanteerava Narasimharaja Wadiyar) (1888 சூன் 5 - 1940 மார்ச் 11), 1895 முதல் 1940இல் தான் இறக்கும் வரை மைசூர் சுதேச அரசின் வாரிசாக இருந்தார்.

காந்தீரவ நரசிம்மராச உடையார்
மைசூரின் இளவரசன்
காந்தீரவ நரசிம்மராச உடையார்
பிறப்பு(1888-06-05)5 சூன் 1888
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு11 மார்ச்சு 1940(1940-03-11) (அகவை 51)
மும்பை, மும்பை மாகாணம், பிரிட்டிசு இந்தியா
துணைவர்கெம்பு செலுவாஜ அம்மணி
பெயர்கள்
காந்தீரவ நரசிம்மராச உடையார்
மரபுஉடையார்
தந்தைபத்தாம் சாமராச உடையார்
தாய்கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானம்

சுயசரிதை தொகு

நரசிம்மராச உடையார் மைசூர் அரண்மனையின், 23 வது மகாராசாவான பத்தாம் சாமராச உடையார், மற்றும் அவரது மனைவி கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானத்திற்கு இரண்டாவது மகனாக பிறந்தார். 1894 ஆம் ஆண்டில், இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவரது தந்தை இறந்தார். இவரது மூத்த சகோதரர் நான்காம் கிருட்டிணராச உடையார் சிறுவனாக இருந்த போது இவரது தாய் 1894 மற்றும் 1902க்கும் இடையில் மைசூர் இராணியாக ஆட்சியாளாராகப் பணியாற்றினார். இவரது ஒரே மகன் ஜெயச்சாமராஜா உடையார் 25 ஆவது மற்றும் மைசூரின் கடைசி மகாராஜாவாக இருந்தார். (1940-1950).

ஒரு அறிவார்ந்த மாணவரான, நரசிம்மராச உடையார் தனது ஆரம்பக் கல்வியை அரண்மனையிலேயே தனியேப் பயின்றார் (மைசூரில் உள்ள "கோடைகால அரண்மனை" என்ற லோகரஞ்சன் மகாலில் இருந்து செயல்பட்டது). இவரது கல்வி மற்றும் பயிற்சி சர் இசுடூவர்ட் பிரேசர், திரு. பி. ராகவேந்திர ராவ் மற்றும் பிறரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இவர் அஜ்மீர் மாயோ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். மாயோ கல்லூரியில் தங்கியிருந்தபோது நோய்வாய்ப்பட்டதினால், இவர் மைசூர் திரும்பி தளபதி ஹீலின் கீழ் தனது படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்தார். 1918 சனவரி 1, அன்று இந்தியாவின் ஆளுநரால் இவருக்கு "மாண்புமிகு" என்ற கௌவரவம் வழங்கப்பட்டது.

நரசிம்மராச உடையார் பயணித்தின் மீது ஆர்வமுள்ளவராகவும் மற்றும் மிகவும் திறமையான பொதுப் பேச்சாளராகவும் இருந்தார். மேலும், இவர் ஒரு சிறந்த குதிரை வீரராகவும் இருந்தார். இவர் மைசூர் அணிக்கு பரிசுகளை வழங்குவதற்காக தனது சகோதரருடன் போலோ விளையாடியுள்ளார். இவர் புத்தகங்களின் சிறந்த காதலராகவும், இசையின் ஆர்வமுள்ள புரவலராகவும் இருந்தார்.

குடும்பம் தொகு

1710 ஆம் ஆண்டு சூன் 17 ஆம் தேதி நரசிம்மராச உடையார் மைசூர் அரசவையின் பிரபுவான தளவாய் தேவராஜா அர்சின் மகள் கெம்பு செலுவாஜ அம்மணி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருந்தனர் .

இறப்பு தொகு

நரசிம்மராச உடையார் 1940 மார்ச் 11 ஆம் தேதி மும்பையில் இறந்தார். இவரது உடல் அதே நாளில் மாகிமில் உள்ள இந்துக் கல்லறையில் தகனம் செய்யப்பட்டது. [1]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Late Yuvaraja of Mysore". The Indian Express. 12 March 1940. https://news.google.com/newspapers?id=1rE-AAAAIBAJ&sjid=QkwMAAAAIBAJ&pg=4967%2C5527931. பார்த்த நாள்: 9 May 2017. 

வெளி இணைப்புகள் தொகு