காலிஸ்தான் அதிரடிப்படை

காலிஸ்தான் தனி நாடு கேட்டு போராடிய ஒரு ஆயுதக் குழு

காலிஸ்தான் அதிரடிப்படை ( Khalistan Commando Force அல்லது KCF ) என்பது ஆயுதம் ஏந்திய சீக்கிய தேசிய அமைப்பு ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப்பில் செயல்பட்டுவந்தது. அமெரிக்க அரசு துறையின் அறிக்கையின்படியும்,[1] பஞ்சாப் காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூற்றின்படியும்,[2] காலிஸ்தான் அதிரடிப்படை இந்தியாவின் நடந்த பல படுகொலைகளுக்கு பொறுப்பாக கூறப்படுகிறது. 1995 இல் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் படுகொலை உட்பட.[1]

புலனுணர்வு தொகு

காலிஸ்தான் அதிரடிப்படை ஒரு சர்ச்சைக்குரிய அமைப்பாக இருந்துவருகிறது. இதன் கருத்தோட்டம் 1984 இல் இந்தியப் படைகளின் நேரடி நடவடிக்கைகள் மற்றும் உச்சகட்டமாக பொற்கோயில்மீது புளூஸ்டார் நடவடிக்கை என்னும் தாக்குதல் நடத்தியதன் விளைவாக ஏற்பட்டது. இந்தியா காலிஸ்தான் அதிரடிப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது, இவர்கள் வன்முறை, கொலைகள் போன்றவை புரிந்தாலும் பன்னாட்டளவில் பயங்கவாத அமைப்பாக அறிவிக்கப்படவில்லை. கவனத்தைக் கவர்ந்த இந்த காலிஸ்தான் அதிரடிப்படை பயங்கரவாத அமைப்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாநிலத் துறையால் அறிவிக்கப்படவில்லை.[1][3][4]

காலிஸ்தான் அதிரடிப்படை வீரர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாக[5] அறிவித்து சீக்கியரில் குறிப்பிட்ட பிரிவினரின் மத்தியில் ஆதரவு நிலவுகிறது.[6]

உருவாக்கமும், தலைமையும். தொகு

காலிஸ்தான் அதிரடிப்படையை 1986 இல்நிறுவியவர் மான்பீர் சிங் சாயிரு என்பவராவார்.[7][8][9]

1986, ஆகத்து 8 அன்று பஞ்சாப் காவல்துறையால் மான்பீர் சிங் கைதுசெய்யப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டார்.[10][11] அல்லது காணாமல்போக செய்யப்பட்டார்.[12]

மான்பீர் சிங்கின் மரணத்திற்குப்பின் காலிஸ்தான் அதிரடிப்படையின் தலைவராக கன்வர்ஜித் சிங் என்பவர் செயல்பட்டார்.d[13][14] 1989 இல் கன்வர் சிங்கும்,[15] மேலும் இரு உறுப்பினர்களும் காவல் துறையினரால் ஜலந்தருக்கு அருகில் கைதுசெய்யப்பட்டனர். அப்போது ஒருவர் தப்பிச் சென்றார். கைதானபோது கன்வர் சிங்குக்கு 23 வயதுதான். இயக்கத்தைப் பற்றிய தகவல்களை பாதுகாக்க சயனைடு குப்பியை கடித்து உண்டு மரணமடைந்தார்.[15]

சரிவு தொகு

1988 சூலை 12 அன்று காவல் துறையால் லாபஹ் சிங் கொல்லப்பட்டார்.[16] இவரது இழப்பிற்குப்பின் இயக்கம் வலுவிழந்த்தது, காலிஸ்தான் அதிரடிப்படை பல துண்டுகளாக வஸ்சான் சிங் சாபர்வால், பரமசித் சிங் பஞ்ச்வால், குர்சத் சிங் ராஜஸ்தானி ஆகியோர் தலைமையில் சிதறியது.[17]

இதுமட்டுமல்லாது லபஹ் சிங் இறந்தத பின்னர் காலிஸ்தான் அதிரடிப்படை தோல்விகளை சந்திக்கத் துவங்கியது. - பப்பர் கல்சா லபஹ் சிங்குடன் அமைக்கபட்ட கூட்டணி சுக்தேவ் சிங் பப்பரின் இழப்புடன் முடிவுக்குவந்தது.[18]

காவல் துறையாலும் மற்றும் பிற இந்திய பாதுகாப்பு படைகளாலும் காலிஸ்ன் அதிரடிப்படையின் லெப்டினட் ஜெனரல்கள் மற்றும் பகுதி தளபதிகள் ஆகியோர் பிடிபட்டனர், அல்லது கொல்லப்பட்டனர், இறுதியில் பல பிரிவுகளும் நொறுக்கப்பட்டன.[19]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "U.S. Court Convicts Khalid Awan for Supporting Khalistan Commando Force". Embassy of the United States in New Delhi, India. 20 December 2006. Archived from the original on 11 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 30 May 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Law Enforcement Cases: International Narcotics Control Strategy Report: Bureau of International Narcotics and Law Enforcement Affairs". US Department of State. March 2008. பார்க்கப்பட்ட நாள் 8 June 2009.
  3. [1] Archived 5 December 2011 at the Wayback Machine.
  4. "Law Enforcement Cases: International Narcotics Control Strategy Report: Bureau of International Narcotics and Law Enforcement Affairs". US Department of State. March 2008. பார்க்கப்பட்ட நாள் 8 June 2009.
  5. Mahmood, Cynthia Keppley (1997). Fighting for Faith and Nation: Dialogues with Sikh Militants (illustrated ). Many interviews, example on page 102: University of Pennsylvania Press. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-1592-2. http://books.google.com/books?id=8QufTc6fAocC&source=gbs_navlinks_s. 
  6. "U.S. Sikhs back militants' fight for homeland". THE WASHINGTON TIMES. 18 November 1991. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=WT&p_theme=wt&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0EB0EF69E1C2137D&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM. பார்த்த நாள்: 20 June 2009. 
  7. Encyclopedia of modern worldwide ... - Google Books. Books.google.com. http://books.google.com/books?id=b8k4rEPvq_8C&pg=PA242&dq=hari+singh+khalistan&ei=xb8oSqa1A5P-lQT4krzfCg. பார்த்த நாள்: 9 August 2009. 
  8. Fighting for faith and nation ... - Google Books. Books.google.com. http://books.google.com/books?id=wA3yjdgyY9kC&pg=RA2-PA153&dq=hari+singh+khalistan&ei=w74oSvGELJ-OkAT6oL3_Cg. பார்த்த நாள்: 9 August 2009. 
  9. Violence as political discourse - Google Books. Books.google.com. 13 October 2008. http://books.google.com/books?id=saGFAAAAMAAJ&q=hari+singh+khalistan&dq=hari+singh+khalistan&lr=&ei=scIoSrGpA5DakASJ7b3_Cg&pgis=1. பார்த்த நாள்: 9 August 2009. 
  10. The Journal of Commonwealth & comparative politics by Taylor & Francis. Books.google.com. 12 June 2008. http://books.google.com/books?id=ZiZnAAAAMAAJ&q=manbir+singh+khalistan&dq=manbir+singh+khalistan&lr=&ei=SsMoSu2EAYXWlQSJirj3Cg&pgis=1. பார்த்த நாள்: 9 August 2009. 
  11. "The Killings In Sangrur Jail". Ihro. June 2009. Archived from the original on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
  12. Mahmood, Cynthia Keppley (1997). Fighting for Faith and Nation: Dialogues with Sikh Militants (illustrated ). University of Pennsylvania Press. பக். 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-1592-2. http://books.google.com/books?id=8QufTc6fAocC&source=gbs_navlinks_s. 
  13. "800 years of Sultanwind". Punjab Heritage. 28 July 2006. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
  14. Terror in the mind of God: the ... - Google Books. Books.google.com. http://books.google.com/books?id=lpb1mbaHjGQC&pg=PA94&lpg=PA94&dq=kanwarjit+singh+sultanwind&source=bl&ots=p8dcNfdhNl&sig=5BRRU3cy_4uloaGbtWIbZxM3Le0&hl=en&ei=x2E7SvLUKIryMtnl7awO&sa=X&oi=book_result&ct=result&resnum=7. பார்த்த நாள்: 9 August 2009. 
  15. 15.0 15.1 Juergensmeyer, Mark (2003). "The Sword of Sikhism". Terror in the mind of God (3 ). University of California Press. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24011-7. http://books.google.com/books?id=lpb1mbaHjGQC&pg=PA95&lpg=PA95&dq=Kanwarjit+Singh+Sultanwind+death&source=bl&ots=p8dcMnajLc&sig=gGr5tZgCUhaotE1sD7RuOobnw7s&hl=en&ei=mgg7So-2D9WEtweUmrUG&sa=X&oi=book_result&ct=result&resnum=8. பார்த்த நாள்: 18 June 2009. 
  16. Terrorism in context - Page 399. Books.google.com. http://books.google.com/books?id=z9GG4__JJNwC&pg=PA399&dq=general+labh+singh&ei=NUs3StXSGYSukASb1pCoAQ. பார்த்த நாள்: 9 August 2009. 
  17. Terrorism & It's Effects - various - Google Books. Books.google.com. http://books.google.com/books?id=AK6QA_WotRYC&pg=PT161&lpg=PT161&dq=labh+singh+split+factions&source=bl&ots=VRr7drLyWP&sig=zg4CU4Fz8KA_Q3xtvIQ-84t-ENk&hl=en&ei=kRv2S9beHo3sswOpwtWIBQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CCkQ6AEwBA#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2012-04-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  18. Genesis of terrorism: an analytical study of Punjab terrorists. Patriot. 1988. http://books.google.com/books?id=0nhuAAAAMAAJ&q=general+labh+singh+jarnail+singh&dq=general+labh+singh+jarnail+singh&ei=hFE3Spe1NYuwkASBrbDDBA&pgis=1. பார்த்த நாள்: 9 August 2009. "...(KCF) which is headed by General Labh Singh alias Sukhdev Singh alias Sukha Sipahi. Perhaps he continued to maintain his links with the Babbar Khalsa also." 
  19. Terrorism in context - Martha Crenshaw - Google Books. Books.google.com. http://books.google.com/books?id=9nFyZaZGthgC&pg=PA394&lpg=PA394&dq=khalistan+commando+force+killed+generals&source=bl&ots=nS5mP6fgf0&sig=-WIQEmUKr0XnFBreEx7irrF8Lhg&hl=en&ei=sx_2S-3gEZCesgPEtOCIBQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CCEQ6AEwAzgU#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2012-04-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிஸ்தான்_அதிரடிப்படை&oldid=3928837" இலிருந்து மீள்விக்கப்பட்டது