காஷ்மீர நாடு

காஷ்மீர நாடு (Kasmira kingdom) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு தற்போதைய ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்த காஷ்மீர் சமவெளிப் பகுதியாகும். இதிகாச காலத்தின் போது நாகர் இன மக்கள் (Naga people) இந்நாட்டில் அதிகம் வாழ்ந்தனர். புராணங்களில் குறிப்பிட்ட காசியப முனிவருக்குப் பிறந்த தட்சகன், வாசுகி முதலான நாக இன மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பாகும். காஷ்மீரர்கள், குரு நாட்டின் கௌரவர்களின் கூட்டாளிகள் ஆவார்.

மகாபாரத இதிகாச கால நாடுகள்

மகாபாரதக் குறிப்புகள் தொகு

காஷ்மீர நாட்டை குறித்த அனைத்துக் குறிப்புகளும், மகாபாரத்தின் 6-வது பருவமான பீஷ்ம பருவத்தின், அத்தியாயம் 9-இல் உள்ளது. (மகாபாரதம் 6: 9).

அமைவிடம் தொகு

பண்டைய பரத கண்டத்தில் காஷ்மீர நாடு, காந்தாரத்திற்கு தென்கிழக்கிலும்; கேகய நாட்டிற்கு கிழக்கிலும், சிந்து நாடு, சௌவீர நாடு, சிவி நாடு மற்றும் ஆபீர நாடு ஆகியவற்றிக்கு வடக்கிலும் அமைந்திருந்தது (6, 9).

இராசசூய வேள்வியில் தொகு

பரத கண்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் உள்ள காஷ்மீரர்கள், பகலவர்கள், தராதர்கள், கிராதர்கள், யவனர்கள், மகாபாரத கால சிதியர்கள், சிந்தியர்கள், சிவிக்கள், சௌவீரர்கள், கேகயர்கள், பாக்லீகர்கள் மற்றும் திரிகர்த்தகர்கள், பாண்டவர்களின் மூத்தவன் தருமராசன், இந்திரப்பிரஸ்தத்தில் நடத்திய இராசசூய வேள்வியில் பரிசுப் பொருட்களுடன் கலந்து கொண்டனர். [1] [2]

காஷ்மீரர்களையும், தராதர இனத்தவர்களை பரசுராமன் அழித்ததாக மகாபாரதம் 7, 68 -இல் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர நாட்டு ஆறுகள் தொகு

ஜீலம் ஆறு, விடத்தல ஆறு, சந்திரபாகா ஆறுகள், காஷ்மீர நாட்டிலும், தட்சகனின் நாக நாட்டிலும் பாய்ந்ததாக மகாபாரதம் கூறுகிறது.(3, 82). காஷ்மீரச் சமவெளியில் பாயும் பல ஆறுகள் இறுதியில் சிந்து ஆற்றுடன் கலந்து விடுகிறது. (மகாபாரதம் 13, 25)

பிற குறிப்புகள் தொகு

  • புகழ் பெற்ற மன்னர்களான தட்சகன், அலர்கன், ஐலன், கரந்தாமன் ஆகியவர்களுடன் காஷ்மீர நாட்டின் மன்னர் ஒப்பிடப்படுகிறார்.
  • காஷ்மீரத்தின் பெண் குதிரைகளைச் சிறப்பாக குறித்துள்ளது. (மகாபாரதம் 4: 9)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. வேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33
  2. சபாபர்வம் பகுதி 51




"https://ta.wikipedia.org/w/index.php?title=காஷ்மீர_நாடு&oldid=2282208" இலிருந்து மீள்விக்கப்பட்டது