கிடுகு வெங்கட ராமமூர்த்தி

கிடுகு வெங்கட ராமமூர்த்தி (1863-1940) என்பவர் தெலுங்கு மொழி எழுத்தாளர் ஆவர். முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வழக்கைக் காட்டிலும், தற்கால பேச்சு வழக்கே மக்களிடம் அதிக நெருக்கத்தைக் கொண்டது என்ற கருத்துடையவர். அதை தன் எழுத்துகளிலும் பதித்தார். இவர் மொழியியலாளரும் வரலாற்று ஆய்வாளரும் ஆவார். [1][2][3][4] பல மொழிகளையும் எழுத்து வடிவங்களையும் ஆராய்ந்தவர். சவரா என்ற பழங்குடியின மொழிக்காகவும் பாடுபட்டார். அதற்கு எழுத்து வடிவம் கொடுத்து, அகராதிகளையும் தயாரித்தார். [5]

கிடுகு வெங்கட ராமமூர்த்தி
గిడుగు వెంకట రామమూర్తి.
பிறப்புகிடுகு வெங்கட ராமமூர்த்தி
(1863-08-29)29 ஆகத்து 1863
பார்வதலாபேட்டை, ஸ்ரீமுகலிங்கம், ஸ்ரீகாகுளம் மாவட்டம்
இறப்பு22 சனவரி 1940(1940-01-22) (அகவை 76)
ஸ்ரீகாகுளம்
மற்ற பெயர்கள்கலாபிரபூர்ணா
ராமமூர்த்தி சிலை

பேச்சு மொழிக்கான ஆதரவு தொகு

கல்வெட்டில் இருந்த மொழி வழக்கும், சமசுகிருதம் மிகுந்த செய்யுள் வழக்கும் பேச்சு வழக்கும் வேறுபட்டிருந்ததை அறிந்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்ட எழுத்து வழக்கை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை அவர்களால் தங்கள் இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்த முடியாதது கண்டு வருந்தினார். சமூகத்துடன் மக்களை பிணைக்க பேச்சு வழக்கே உதவும் எனவும் நம்பினார். பாடங்களை பேச்சுத் தெலுங்கிலேயே கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எழுதியவை தொகு

  • ‘கலிங்க சரித்திரம்’
  • சவர மொழிக்கான எழுத்துருவும் அகராதியும் [6]
  • Sora-English Dictionary[7][8]
  • Savara Patalu[9]

சிறப்பு தொகு

  • பிரித்தானியர்களால் ராவு சாகிப் பட்டம் வழங்கப்பட்டது
  • இவரது பிறந்த நாளில் தெலுங்கு மொழி நாள் கொண்டாடப்படுகிறது.[10]

இணைப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1 January 1996). Handbook of Twentieth-century Literatures of India. Greenwood Publishing Group. பக். 307–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-28778-7. http://books.google.com/books?id=1lTnv6o-d_oC&pg=PA307. பார்த்த நாள்: 25 August 2013. 
  2. M. Chalapathi Rau (1976). Gurazada Commemorative Volume. South Delhi Andhra Association. பக். 47. http://books.google.com/books?id=wQsKAQAAIAAJ. பார்த்த நாள்: 25 August 2013. 
  3. Amaresh Datta; Sahitya Akademi (1994). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Sahitya Akademi. பக். 4113. http://books.google.com/books?id=Hc5jAAAAMAAJ. பார்த்த நாள்: 25 August 2013. 
  4. Srihari, Gudipoodi (7 September 2012). "Scripting a change". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/scripting-a-change/article3867910.ece. 
  5. "Tributes paid to Gidugu Rammurthy". The Hindu (Chennai, India). 30 August 2009 இம் மூலத்தில் இருந்து 2 செப்டம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090902160304/http://www.hindu.com/2009/08/30/stories/2009083059990900.htm. 
  6. Giḍugu Veṅkaṭarāmamūrti (1931). A Manual of the So:ra: (or Savara) Language .... Superintendent, Government Press. http://books.google.com/books?id=JI4QAQAAIAAJ. பார்த்த நாள்: 25 August 2013. 
  7. Giḍugu Veṅkaṭarāmamūrti (1986). Sora-English Dictionary. Mittal Publications. பக். 1–. GGKEY:GGSNPA3C56U. http://books.google.com/books?id=ma5YB0cIJ_kC&pg=PP1. பார்த்த நாள்: 25 August 2013. 
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-01. பார்க்கப்பட்ட நாள் 2014-05-20.
  9. "Telugu comes to aid of tribal language". The Hindu (Chennai, India). 9 July 2009 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090712073011/http://www.hindu.com/2009/07/09/stories/2009070960490600.htm. 
  10. "Telugu Language Day on August 29". Chennai, India: The Hindu. 26 August 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article594958.ece. பார்த்த நாள்: 27 June 2013.