கிபுனாடா

குசான ஆட்சியாளர்

கிபுனாடா ( Kipunada) பிராமி எழுத்தில்  ; கி-பு-னா-டா ) மேலும் கிபனாதா எனவும் அறியப்படும் இவர் சுமார் பொ.ச. 335-350-இல் ஆட்சி செய்த குசான பேரரசின் கடைசி ஆட்சியாளராக இருக்கலாம். இவர் தங்க நாணயத்திற்கு பெயர் பெற்றவர். [3] இவர் முதலாம் சாகாவிற்குப் பிறகு அரியணை ஏறினார். மேற்கு பஞ்சாபில் உள்ள தக்சசீலப் பகுதியில் கிபுனாடா ஒரு உள்ளூர் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். மேலும் இவர் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தரின் ஆட்சியாளராகவும் இருந்திருக்கலாம்.[4]

கிபுனாடா
குசான ஆட்சியாளர்
கிபுனாடாவின் நாணயம், சுமார் 335-350 பொ.ச.
கிபுனாடா இடதுபுறத்தில் நின்று, பலிபீடத்தின் மேல் பலி செலுத்துகிறார். வலதுபுறம், அச்சு வடிவத்தில் பிராமி எழுத்தில் செங்குத்தாக கி-பு-னா என்ற பெயர் .
மன்னனின் கைக்குக் கீழே பச்சர்னாதா என உள்ளது. .
மற்றொரு புறம்: அர்தோக்சோ தேவி கையில் பழங்கள், மாலையுடனான கொம்பினை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் தோற்றம்.[1]
ஆட்சிக்காலம்335-350 பொ.ச[2]
முன்னையவர்முதலாம் சாகா
பின்னையவர்கிடாரைட்டுகள்

குப்தர் மற்றும் கிடாரைட்டு வாரிசுகள் தொகு

மத்திய மற்றும் மேற்கு பஞ்சாபில் கண்டெடுக்கப்பட்ட கிபுனாடாவின் அச்சிடப்பட்ட விசித்திரமான நாணயங்களில் "சமுத்திரம்" ( குப்தர் எழுத்து:   ), என்ற பெயர் இடம் பெற்றிருப்பது மறைமுகமாக குப்தப் பேரரசின் ஆட்சியாளர் சமுத்திரகுப்தருடன் இணைக்கப்பட்டிருக்கலாம். [5] இதற்குப் பிறகு, பஞ்சாபில் கிரடா, பெரோஸ், குசானர்கள் முன்பு வைத்திருந்த பிரதேசத்தை ஆக்கிரமித்த பிரபலமான முதலாம் கிடாரன் போன்ற கிடாரைட்டு ஆட்சியாளர்களால் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பின்னர் [5]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிபுனாடா&oldid=3398874" இலிருந்து மீள்விக்கப்பட்டது