கிராம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosid
வரிசை:
Myrtales
குடும்பம்:
Myrtaceae
பேரினம்:
Syzygium
இனம்:
S. aromaticum
இருசொற் பெயரீடு
Syzygium aromaticum
(லி.) மெர்ரில் உம் பெர்ரி உம்
வேறு பெயர்கள் [1]
  • Caryophyllus aromaticus L.
  • Eugenia aromatica (L.) Baill.
  • Eugenia caryophyllata Thunb.
  • Eugenia caryophyllus (Spreng.) Bullock & S. G. Harrison
உலர்ந்த கிராம்பு

கிராம்பு (இலவங்கம், Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.[1][2][3]

மருத்துவ குணங்கள் தொகு

  • பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
  • வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
  • உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.
  • antioxident,
  • இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.
  • வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.
  • உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.
  • கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
  • நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
  • சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
  • கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
  • முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
  • கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
  • 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
  • தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
  • கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
  • கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
  • சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.
  • வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

மேலும் படிக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1
  2. "Syzygium aromaticum (L.) Merr. and L.M. Perry". Kew Science, Plants of the World Online. 2021. பார்க்கப்பட்ட நாள் 28 February 2021.
  3. Yun, Wonjung (13 August 2018). "Tight Stocks of Quality Cloves Lead to a Price Surge". Tridge இம் மூலத்தில் இருந்து 14 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814103405/https://www.tridge.com/stories/tridge-market-update-tight-stocks-of-quality-cloves-lead-to-a-price-surge. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம்பு&oldid=3890071" இலிருந்து மீள்விக்கப்பட்டது