கிருஷ்ண ஜென்மபூமி

கிருஷ்ண ஜென்மபூமி (Shri Krishna Janmbhoomi), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா நகரத்தில், யமுனை ஆற்றாங்கரையில் அமைந்துள்ள கிருட்டிணன் பிறந்த தலமாகும். இது வைணவ சமயத் திருத்தலமாகும்.[1][2] முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

மசூதியின் பின்னனியில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில்
கிருஷ்ன ஜென்ம பூமியில் உள்ள கிருஷ்ணர் கோயில்
மதுரா கிருஷ்ணர் கோயில் நுழைவாயில்

மதுராவை ஆண்ட கம்சனின் அரண்மனையின் சிறைச்சாலையில், வசுதேவர்தேவகி தம்பதியர்க்கு, ஆவணி மாதம், தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்தில் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்ததாக பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

யது குல கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி எனும் பெயரில் இந்து சமய மக்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த சிறையின் அறை, கிருஷ்ணர் கோயிலின் கர்ப்பகிரகமாக அமைந்துள்ளது. [3][4]

கம்சனிடமிருந்து கிருஷ்ணரை காப்பதற்காக, கிருஷ்ணர் பிறந்த இரவில், வசுதேவர் யமுனைக்கு அப்பால் உள்ள பிருந்தாவனத்தில் வாழ்ந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணரை ஒப்படைத்தார்.

கேசவ தேவ் கோயில் தொகு

பிற்காலத்தில் கிருஷ்ண ஜென்ம பூமியில் கிருஷ்ணருக்கு கோயில் கட்டப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டில், முகலாயர் ஆட்சியின் போது, பேரரசர் அவுரங்கசீப்பின் ஆணையின் பேரில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலைப் பகுதியை தவிர்த்து, இக்கோயில் முழுவதும் இடிக்கப்பட்டு, 1662-ஆம் ஆண்டில்- மதுரா சாகி ஈத்கா மசூதி கட்டப்பட்டது. பின்னர் இந்த மசூதியின் சுவர் பக்கத்தில் இருந்த கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலையின் ஒரு பக்கத்தில் புதிய கேசவ தேவ் கோயில் கட்டப்பட்டு, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.happywink.org/janmashtami/krishna-janma-bhoomi-mandir-mathura.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  3. http://www.happywink.org/janmashtami/krishna-janma-bhoomi-mandir-mathura.html
  4. http://shrikrishnajanmasthan.net/history.html


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_ஜென்மபூமி&oldid=3609627" இலிருந்து மீள்விக்கப்பட்டது