கிறிஸ்டோபர் ரீவ்

கிறிஸ்டோபர் ரீவ்(Christopher D'Olier Reeve [1] செப்டம்பர் 25, 1952 – அக்டோபர் 10, 2004) ஓர் அமெரிக்க திரைப்பட மற்றும் நாடக நடிகர்; தயாரிப்பாளர்; திரைக்கதையாசிரியர்; எழுத்தாளர் மற்றும் சூப்பர் மேன் என்ற தனது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர்.

கிறிஸ்டோபர் ரீவ்
பிறப்புChristopher D'Olier Reeve
(1952-09-25)செப்டம்பர் 25, 1952
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், U.S.
இறப்புஅக்டோபர் 10, 2004(2004-10-10) (அகவை 52)
Mount Kisco, New York, U.S.
இறப்பிற்கான
காரணம்
Complications from Sepsis
கல்லறைCremated; ashes scattered
இருப்பிடம்Pound Ridge, New York
தேசியம்American
கல்விகோர்னெல் பல்கலைக்கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள்The Juilliard School
பணிActor, director, producer, screenwriter, author
செயற்பாட்டுக்
காலம்
1974–2004
அறியப்படுவதுசூப்பர்மேன்
Christopher Reeve Foundation
சொந்த ஊர்Princeton, New Jersey
உயரம்6 அடி 4 அங் (193 cm)
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
Christopher Reeve Foundation
பெற்றோர்F.D. Reeve
Barbara Pitney Reeve (née Lamb)
துணைவர்Gae Exton
வாழ்க்கைத்
துணை
Dana Morosini (1992–2004)
பிள்ளைகள்3 (2 with Exton; 1 with Dana Reeve)
விருதுகள்Screen Actor Guild Award (1998), Emmy Award (1997), Lasker Award (2003)
வலைத்தளம்
www.christopherreeve.org

1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி. வர்ஜீனியாவில் ஒரு குதிரையேற்றத்தில் தன் குதிரை மீது அமர்ந்து அவர் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத நேர்வினால் திரையில் அட்டகாசமாக விண்ணில் பறந்த அவர் தன் விரல்களைக்கூட அசைக்க முடியாமல் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். இந்த நேர்வு நிகழ்ந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போய் பின்னர் வாழ்க்கையில் போராட முடிவெடுத்து அதன் மூலம் தனது உண்மையான வலிமையையும் உள்ளத்திடத்தையும் உலகுக்குக் காட்டியவர். தண்டுவட பாதிப்புகளால் ஏற்படும் நோய்கள்(Spinal-cord injury), செல் ஆய்வு (stem cell research), ஆகியவற்றை ஆராய்ச்சிக்காக கிறிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளை மற்றும் ரீவ் இர்வின் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை நிறுவியுள்ளார்.[2][3][4]

இளமை தொகு

1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். இவருடைய தாயார் பார்பரா பிட்னீ ஒரு பத்திரிகையாளர். இவர் வில்லியம் பிராட்போர்டு (1590–1657) வழியில் வந்தவர். ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய மக்லன் பிட்னீ என்பவரின் பேத்தி ஆவார். தந்தை பிராங்க்ளின் ரீவ், ஒரு ஆசிரியர், நாவலாசிரியர், கவிஞர் மற்றும் அறிஞர் ஆவார். அவரது தந்தை வழி தாத்தா,கர்னல் ரிச்சர்ட் ஹென்றி ரீவ் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக புரூடென்ஷியல் நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர். அவரது பெரிய-தாத்தா, பிராங்க்ளின் டி ஆலிவர், ஒரு பெரிய தொழிலதிபராவார். இவர் முதல் உலக போர், நடைபெற்ற போது அமெரிக்காவின் முதல் தேசிய தளபதியாகவும் இருந்தார். ரீவ் தந்தை வழியில் உறவினர்கள்; மாசசூசெட்ஸ் ஆளுநராக இருந்த தாமஸ் டட்லி மற்றும் ஜான் விந்த்ரோப், பென்சில்வேனியா துணை ஆளுநரான தாமஸ் லாய்ட் மற்றும் ஒரு ஐக்கிய அமெரிக்க உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருந்த ஹென்றி பால்ட்வின் ஆகியோராவார்.[5] கிறிஸ்டோபர் ரீவின் சகோதரன் பெஞ்சமின் ரீவ் ஆவார்.[6]

இவருடைய அவருக்கு நான்கு வயதானபோது அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். தன் சகோதரர் பெஞ்சமினுடனும், தாயாருடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் கிரிஸ்டோபர். சிறுவயதிலிருந்தே இரு சகோதரர்களுக்கும், நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அட்டைப்பெட்டிகளை கப்பல்கள் போல் பாவித்து அவர்கள் கடற்கொள்ளையர்களாக நடித்து மகிழ்வர். எட்டு வயதானபோதே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இசைமீது ஆர்வம் ஏற்பட்டதால் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பள்ளிப்பாடகர் குழுவிலும், ஐசாக்கி குழுவிலும் சேர்ந்து பள்ளியில் மிக துடிப்பான மாணவராக விளங்கினார்.[7]

கல்வி மற்றும் கலைப் பயிற்சி தொகு

உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பிறகு அவர் கார்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக இறுதியாண்டில் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது. நியூயார்க்கின் உலகபுகழ் பெற்ற ஜூலியட் மேடை கலைப் பள்ளியில் நடிப்புப் பயிற்சிபெற அவரும், இன்னொரு கார்னெல் பல்கலைக்கழக மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இன்னொரு மாணவரின் பெயர் ராபின் வில்லியம்ஸ். இவர் ரீவின் நெருங்கிய நண்பராக இருந்தார்.[8] இருவருமே பின்னாளில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களானவர்கள்.[9] ஜூலியட் மேடைக் கலைப்பள்ளியில் பயின்றபோதே கிரிஸ்டோபருக்கு பல்வேறு நடிப்பு வாய்ப்புகள் வந்தன. 1976-ல் புகழ்பெற்ற நடிகை கேத்ரின் ஹெப்பர்னுடன் முதன் முதலாக A Matter of Gravity என்ற Broadway என்ற இசை நாடகத்தில் நடித்தார். அதனால் அவரால் நடிப்புப் பள்ளியில் தொடர முடியவில்லை.[10][11][12][13][14]

நடிகர் தொகு

1978 ஆம் ஆண்டில்தான் உலகம் அவரை உற்றுப் பார்த்து அதிசயிக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது. 'சூப்பர்மேன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க உகந்தவரை தேடியது ஹாலிவுட். அதற்காக விண்ணப்பித்த சுமார் 200 பேர் பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மாத படப்பிடிப்புக்குப் பிறகு உலகத் திரைகளில் 'சூப்பர்மேனாக' அவதரித்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். "[15][16]

சூப்பர் மேனாக அவருடைய கட்டான தோற்றமும், வசீகரமான முகமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன."[17][18] இப்படம் உலக அளவில் 300,218,018 அமெரிக்க டாலருக்கு வசூலை அள்ளிக் குவித்தது.[19] முதல் படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் மேலும் பதினாறு திரைப்படங்களிலும், பணிரெண்டு தொலைக்காட்சிப் படங்களிலும் சுமார் 150 மேடை நாடகங்களிலும் நடித்தார்.[20] மற்ற பெரிய நடிகர்களைப்போல் கதாநாயகன் பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் எந்தப் பாத்திரத்திலும் நடித்தார் ரீவ்ஸ். மிகச் சிரமமான சாகசக் காட்சிகளில்கூட துணை நடிகர்களைப் பயன்படுத்தாமல் சொந்தமாகவே நடித்தார். தான் ஈடுபட்ட எந்தக் காரியத்திலும் அவ்வுளவு ஈடுபாடு இருந்தது அவருக்கு. நடிப்புதான் அவருக்கு உயிர் என்றாலும் வெளிப்புற நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார் ரீவ்ஸ்.

திறமைகள் தொகு

 
Christopher Reeve, Frank Gifford, ரானல்ட் ரேகன் at a reception and picnic in honor of the fifteenth anniversary of the Special Olympics program in the Diplomatic Reception room May 1983.

கிறிஸ்டோபர் ரீவ் விமானி உரிமம் பெற்று இரண்டு முறை சிறிய விமானத்தில் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்திருக்கிறார், படகோட்டம், முக்குளித்தல், பனிச்சறுக்கு,குதிரையேற்றம் ஆகியவற்றையும் ரீவ் அறிந்திருந்தார்.. 1990 களில் அவருக்கு குதிரையேற்றம் மிகப்பிடித்த விளையாட்டாக இருந்தது.

நேர்வு(விபத்து) தொகு

இப்படி மிகத் துடிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ரீவ்ஸின் வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி தலை கீழாக மாறியது. தன் குதிரை மீது அமர்ந்து அவர் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தபோது சற்று மிரண்டுபோன குதிரை எதிர்பாராத விதமாக முன்பக்கமாக அவரை தூக்கி அடித்தது. குதிரையின் கடிவாளத்தில் ரீவின் கைகள் மாட்டிக்கொள்ள அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். முதுகெலும்பின் முதல் இரண்டு எலும்புகள் நொறுங்கின. அந்தக்கணமே கழுத்துக்கு கீழ் அவரது உடல் செயலிழந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் தவித்த அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது.[21][22]

நேர்வுக்குப் பின்னான வாழ்க்கை தொகு

மிக நுண்ணிய அறுவை சிகிச்சை செய்து அவரது தலையை முதுகெலும்போடு மருத்துவர்கள் இணைத்தனர்.[23] ஆறு மாதங்கள் நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இருந்தார் ரீவ்ஸ். தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் மிகத் துடிப்பாக செலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாத நிலையை அடைந்து வேதனைப்பட்டார். எனவே தான் தற்கொலையைப் பற்றியும் சிந்தித்தார் ரீவ்.[24][25] ஆனால் தன் மனைவி பிள்ளைகளுக்காககவும், இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருள் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும், உயிருள்ளவரை போராடத் தீர்மானித்தார். தான் புகழ்பெற்ற நடிகன் என்பதால் தன் மீது அனைத்துலக கவனம் பதிந்திருந்ததை நன்கு அறிந்த ரீவ்ஸ் முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சியில் அதிகம் செலவிடுமாறு அமெரிக்க அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.

தன்னம்பிக்கை மனிதர் தொகு

 
மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் உயிரணு மூலக்கூறு ஆய்வு பற்றிய ஒரு கருத்தரங்கில் ரீவ். மார்ச் 2, 2003

உடற்குறையோருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதோடு நின்று விடாமல் 1996 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளையை நிறுவி உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளை தொடங்கி வைத்தார்.[3][4][26] stem cell research எனப்படும் மூல உயிரனு ஆய்வுக்காக குரல் கொடுத்தார். அதற்கான நிதி உதவியும் செய்தார்.[27][28][29] 1998-ல் Still Me என்ற தலைப்பில் தனது தன்வரலாற்றை எழுதினார். அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம்பிடித்தது.[30] 1996 ஆம் ஆண்டு அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அவர் அழைக்கப்பட்டார். அட்லாண்டாவில் நடைபெற்ற உடற்குறையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அறிவிப்பாளராக கலந்துகொண்டார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் அவரை பேச அழைத்தன.[31] தாதியரின் துணையுடன் எல்லா அழைப்பையும் ஏற்றுக்கொண்டு உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார் ரீவ்.

பல நிகழ்ச்சிகளில் உயிரை உருக்கும் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் உதிர்த்த புன்னகையை உலகம் கலங்கிய கண்களோடு பார்த்தது. கழுத்துக்கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் கிட்டதட்ட காய்கறிபோல் ஆகிவிட்டது அவரது உடல். ஆனால் உள்ளம் மட்டும் வலிமை குன்றாமல் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் "தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப்போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன் இதுபோன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் " என்றும் கூறினார்.[32]

ரீவ்ஸ் 1996 ஆம் ஆண்டில் 'A Step Toward Tomorrow' என்ற தொலைக்காட்சிப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.[33] அதே ஆண்டு 'In the Gloaming' என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். அந்தப்படம் ஐந்து எமி(AMY) விருந்துகளுக்காக முன்மொழியப்பட்டது.[34] Cable Ace விருது வழங்கும் விழாவில் அந்தப்படம் நான்கு விருதுகளை வென்றது. தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலில் நடித்தார்.[35] The fan community met the episode with rave reviews and praise it as being among the series' best to this day.[36]

இறப்பு தொகு

விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டி பல துவண்டுபோன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் பல்வேறு நோய் மற்றும் உடல் நலக் குறைவுகளால் தமது 52 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி காலமானார்.[37][38] கிறிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளையை இவரது மனைவி டானா ரீவ் ஏற்று நடத்தினார். அவரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2006-ல் மரணமடைந்தார்.[39]

சிறப்பு தொகு

கிறிஸ்டோபர் ரீவுக்கு மரணத்துக்கு பிந்தைய கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது நியூஜெர்சியின் ரஜ்ஜஸ் பல்கலைக்கழகம். டோனிப்ரூக் பல்கலைக்கழகமும் அவருக்கு கெளரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Roberts, Gary Boyd. "#77 Royal Descents, Notable Kin, and Printed Sources: An Assortment of Famous Actors". New England Historic Genealogical Society. பார்க்கப்பட்ட நாள் 3 May 2011.
  2. Christopher Reeve dies at 52. பரணிடப்பட்டது 2004-10-13 at the வந்தவழி இயந்திரம் சிஎன்என், October 11, 2004, accessed November 3, 2006
  3. 3.0 3.1 Christopher Reeve Foundation, Quality of Life Grants பரணிடப்பட்டது 2005-12-10 at the வந்தவழி இயந்திரம், accessed October 23, 2006
  4. 4.0 4.1 Christopher Reeve Foundation, Annual Report பரணிடப்பட்டது 2006-11-02 at the வந்தவழி இயந்திரம், accessed October 23, 2006
  5. Ancestry of Christopher Reeve
  6. Reeve, Christopher (1998), pp 54–58
  7. Reeve, Christopher (1998), pp 58–68
  8. Reeve, Christopher (1501), pp 167–172
  9. Walker, Andrew. Christopher Reeve: Living in hope. BBC News, March 1, 2002, accessed November 19, 2006
  10. Reeve, Christopher (1998), pp 70–71
  11. Reeve, Christopher (1998), pp 147–150
  12. Reeve, Christopher (1998), pp 152–154
  13. Christopher Reeve (September 2002). "Religion". Nothing Is Impossible: Reflections on a New Life (Hardcover ). Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-375-50778-7. https://archive.org/details/nothingisimpossi00reev. 
  14. Staff (February 5, 2003). "Superman Christopher Reeve blasts Scientology". The Age. 
  15. Holt, Patricia. Reeve is 'Superman' For Real: Actor's memoir filled with humor and courage. San Francisco Chronicle, May 11, 1998, accessed November 20, 2006
  16. Harrington, O'Connor and Kavitsky, Superman (1978), Christopher Reeve Homepage, accessed October 10, 2006
  17. Bergan, Ronald. Christopher Reeve. தி கார்டியன், October 12, 2004, accessed November 20, 2006
  18. Reeve, Christopher (1998), p 200
  19. பாக்சு ஆபிசு மோசோ, Superman (1978), accessed October 23, 2006
  20. Cosford, Bill. After One Final Fling, Reeve Hangs Up His Cape. Miami Herald, June 19, 1983, pg 1L. Accessed November 19, 2006
  21. Romano, Lois. Riding Accident Paralyzes Actor Christopher Reeve. Washington Post, June 1, 1995, pg. A01. Accessed November 19, 2006
  22. Reeve, Christopher (1998), pp 18–25
  23. Reeve, Christopher (1998), p 37
  24. Reeve, Christopher (1998), p 32
  25. Crews, Chip. The Role He Can't Escape. Washington Post, May 3, 1998, accessed November 19, 2006
  26. Reeve boosted by Israel trip, BBC News, Published July 21, 2003.
  27. Christopher Reeve Homepage. Christopher Reeve Testimony: April 26, 2000. Accessed November 30, 2006
  28. Superhero Flies To Israel, by Larry Derfner, U.S. News & World Report, Published August 11, 2003.
  29. Christopher Reeve: Israel at Center of World Research on Paralysis பரணிடப்பட்டது 2013-01-13 at Archive.today, Israel21c, Published July 27, 2003.
  30. Brown University, Christopher Reeve to give Parents Weekend keynote lecture. Press release, October 23, 2001, accessed November 24, 2006
  31. "Time Magazine Cover". Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
  32. Man of steel. தி கார்டியன், September 17, 2002, accessed October 14, 2006
  33. Christopher Reeve Homepage, Biography, accessed October 14, 2006
  34. Superman Homepage, Christopher Reeve Biography. Accessed December 3, 2006.
  35. The Zocalo Today. ISN News, February 8, 2003, accessed November 3, 2006 "SMALLVILLE set ratings highs Tuesday, hitting all-time high for any program on the WB in the key 18–34 demographic, with a 6.1 rating/15 share. According to figures from Nielsen Media Research, SMALLVILLE attracted 8.1 million total viewers."
  36. http://www.supermanhomepage.com/tv/tv.php?topic=reviews/smallville2-ep17
  37. Christopher Reeve ABC News obituary
  38. Media Lies. பரணிடப்பட்டது 2006-11-16 at the வந்தவழி இயந்திரம் New Mobility magazine, April 2005, accessed October 14, 2006
  39. Dana Reeve dies of lung cancer at 44. சிஎன்என், March 8, 2006, accessed October 28, 2006

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டோபர்_ரீவ்&oldid=3580707" இலிருந்து மீள்விக்கப்பட்டது