கிலா அரக்கப் பல்லி

கிலா மொன்ஸ்டர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
முதுகுநாணி
வகுப்பு:
ஊர்வன
வரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
பேரினம்:

கிலா அரக்கப் பல்லி என்பது பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட ஓணான் இனமாகும். இது பொந்துகளுக்குள் பதுங்கி வாழும் தன்மையுடையது. திடீரென்று தாக்குதல்களை நடத்தி பறவைக் குஞ்சுகளை பிடித்து உண்ணும். கடினத்தன்மை கொண்ட அதன் வால்ப்பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. வேட்டையாடும் போது, இதன் வால்ப்பகுதி அதற்கு உதவி புரிகின்றது. இதனால் வேகமாக இரைகளை இறுக்கமாக பிடித்துக் கடிக்க முடியும், எனினும் மனிதனைக் கொல்ல முடியாது. இதன் பொதுவான உணவு கொறித்துண்ணும் பிராணிகள், சிறு பறைவைகள், மற்றும் முட்டைகள் போன்றவையாகும். இதனால் வாலில் உணவையும் சேகரித்துக்கொள்ள முடியும். 2005 இல் இவற்றினுடைய உமிழ் நீரில் இருந்து நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. Bond, Aaron (July 2006). "Exenatide (Byetta) as a novel treatment option for type 2 diabetes mellitus". Baylor University Medical Center Proceedings 19 (3): 281–4. பப்மெட்:17252050. 

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலா_அரக்கப்_பல்லி&oldid=3582789" இலிருந்து மீள்விக்கப்பட்டது