கிளாசு யோகன்னிசு

கிளாசு வெர்னர் யோகன்னிசு (Klaus Werner Iohannis, அல்லது Johannis, பிறப்பு:சூன் 13, 1959) உருமேனிய அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 16, 2014இல் உருமேனியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2002 முதல் 2013 வரை உருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றத்தின் தலைவராக விளங்கிய கிளாசு 2014இல் உருமேனியாவின் தேசிய லிபரல் கட்சியின் தலைவரானார்.

கிளாசு யோகன்னிசு
உருமேனியாவின் 5வது குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 திசம்பர் 2014
பிரதமர்வியோரிக்கா தான்சிலா
முன்னையவர்= டிராயன் பாசெசுகு
தேசிய லிபரல் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சூன் 2014
முன்னையவர்கிரின் அன்டனெசுகு
பின்னவர்வசில் பிளாகா
சிபியுவின் மேயர்
பதவியில்
30 சூன் 2000 – 2 டிசம்பர் 2014
முன்னையவர்டான் கொன்டுரத்
பின்னவர்அஸ்டிரிட் ஃபோடோர்
உருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றத் தலைவர்
பதவியில்
2002–2013
முன்னையவர்வொல்ப்காங் விட்சுடாக்
பின்னவர்பவுல்-யுர்கென் போர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கிளாசு வெர்னர் யோகன்னிசு

சூன் 13, 1959 (1959-06-13) (அகவை 64)
சிபியு, உருமேனியா
அரசியல் கட்சிஉருமேனிய செருமானியர்களின் சனநாயக மன்றம் (FDGR) (1990–2013)
தேசிய லிபரல் கட்சி (2013–நடப்பு)
துணைவர்கார்மென் (1989–நடப்பு)
பிள்ளைகள்இல்லை
முன்னாள் கல்லூரிபேபெசு-பொல்யாய் பல்கலைகழகம்
தொழில்இயற்பியல் ஆசிரியர்
இணையத்தளம்அலுவல்முறை வலைத்தளம்

யோகன்னிசு 2000ஆம் ஆண்டில் அரசியலில் ஈடுபட்டு தமது பிறந்த ஊரான சிபியுவின் நகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருகாலத்தில் இடாய்ச்சு மொழி பேசுவோர் பெரும்பாலாக இருந்த சிபியு நகரத்தில் அவர்களது இருப்பு படிப்படியாக குறைந்து சிறுபான்மையினர் ஆகினர். எனவே இச்சமூகத்தின் சார்பாக நிறுத்தப்பட்ட கிளாசின் வெற்றி எதிர்பார்க்கப்படவில்லை. இதே வெற்றியை 2004,2008 தேர்தல்களிலும் மீளவும் பெற்றார். தமது ஆட்சிக்காலத்தில் சிபியு நகரை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றினார். 2007ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகராக சிபியு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2013இல் யோகன்னிசு தேசிய லிபரல் கட்சியில் இணைந்தார். உடனடியாகவே அவருக்கு முதல் உதவித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2014இல் அக்கட்சியின் தலைவரானார்.

அக்டோபர் 2009இல் நாடாளுமன்றத்தின் ஐந்து அரசியல் குழுக்களில் நான்கு இவரை உருமேனியப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தன. அப்போதையக் குடியரசுத் தலைவர் டிராயன் பாசெசுகுவின் சனநாயக லிபரல் கட்சி மட்டுமே எதிர்த்தது. அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற அறிவிக்கை நிறைவேற்றப்பட்ட போதும் பாசெசுகு அவரை பிரமதராக்க மறுத்தார்.[1]

யோகன்னிசு டிரான்சில்வேனிய சாக்சன் இனத்தைச் சேர்ந்தவர். உருமேனியாவில் சிறுபான்மையராக உள்ள இவர்கள் 12வது நூற்றாண்டில் டிரான்சில்வேனியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அரசியலில் நுழைவதற்கு முன்னர் யோகன்னிசு இயற்பியல் ஆசிரியராக இருந்தார்.

மேற்சான்றுகள் தொகு

  1. "Romanian opposition demands new PM". euronews. Archived from the original on ஏப்ரல் 29, 2013. பார்க்கப்பட்ட நாள் November 16, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாசு_யோகன்னிசு&oldid=3549866" இலிருந்து மீள்விக்கப்பட்டது