குகேசு (Gukesh D) (பிறப்பு: 29 மே, 2006) தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்திய சதுரங்க கிராண்டமாஸ்டர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் 9 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆசிய சதுரங்கப் போட்டியில் வென்றார்.[1] 2018 ஆம் ஆண்டில் உலக இளையோருக்கான சதுரங்கப் போட்டியில் 12 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் வென்றார் [2]. குகேஷ் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்கப் போட்டியில் 12 வயதுக்குட்பட்டோருக்கான வெவ்வேறு பிரிவுகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார்.[3] பிரான்சில் நடைபெற்ற 34 ஆவது ஓபன் டி கேபெல்லே லா கிராண்டே சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றார்.[4]

குகேஷ் (2019)

குகேஷ் செர்கே கரியாக்கினுக்குப் பிறகு உலகின் மிக இளம் வயது கிராண்ட்மாஸ்டராகக் கூடிய வாய்ப்பை வயதில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலவளவினால் இழந்தார்[5]. ஜனவரி 15, 2019 அன்று 12 வயது, 7 மாதங்கள், 17 நாட்கள் ஆன நிலையில் புது தில்லியில் நடைபெற்ற 17 ஆவது தில்லி சர்வதேச ஓபன் சதுரங்கப் போட்டியில் சக வீரர் டி கே சர்மாவைத் தோல்வியுறச் செய்து உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனார் [6]. தற்போதைய நிலையில் இந்தியாவின் மிக இளவயது கிராண்ட்மாஸ்டராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Gukesh D: The story behind a budding talent". 2018 இம் மூலத்தில் இருந்து 2019-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190416062735/http://www.iiflwmumbaichess.com/index.php?option=com_content&view=article&id=134:gukesh%20d-the-story-behind-a-budding-talent&catid=8:news-event&Itemid=130. பார்த்த நாள்: 2018-12-09. 
  2. "Chess: India’s Gukesh, Savitha Shri bag gold medals in U-12 World Cadets Championship". 2018-11-16. https://scroll.in/field/902419/chess-indias-gukesh-savitha-shri-bag-gold-medals-in-u-12-world-cadets-championship. பார்த்த நாள்: 2018-12-09. 
  3. "Gukesh wins 5 gold medals in Asian Youth Chess Championship". 2018-03-13. https://timesofindia.indiatimes.com/sports/chess/gukesh-wins-5-gold-medals-in-asian-youth-chess-championship/articleshow/63687428.cms. பார்த்த நாள்: 2018-12-09. 
  4. "Gukesh making all the right moves". 2018-03-13. https://timesofindia.indiatimes.com/sports/chess/gukesh-making-all-the-right-moves/articleshow/63289164.cms. பார்த்த நாள்: 2018-12-09. 
  5. "Gukesh with 2 GM norms and 2490 Elo is on the verge of becoming world's youngest GM". 2018-12-09. https://www.chessbase.in/news/Gukesh-2nd-GM-norm. பார்த்த நாள்: 2018-12-09. 
  6. "Gukesh becomes second youngest GM in history". 2019-01-15. https://en.chessbase.com/post/gukesh-becomes-second-youngest-gm-in-history. பார்த்த நாள்: 2019-01-15. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குகேஷ்&oldid=3776461" இலிருந்து மீள்விக்கப்பட்டது