குடிவாடா குருநாத ராவ்

இந்திய அரசியல்வாதி

குடிவாடா குருநாத ராவ் [3] (4 மே 1955 – 22 நவம்பர் 2001) இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளருமாவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் 1998 முதல் 1999 வரை அனகாபல்லி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1989 முதல் 1994 முடிய ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[4]

குடிவாடா குருநாத ராவ்
Gudivada Gurunadha Rao
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பதவியில்
1989–1999
தொகுதிஅனகாபல்லி மக்களவைத் தொகுதி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மே, 1955
மிண்டி, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
இறப்புநவம்பர் 22, 2001(2001-11-22) (அகவை 46)
ஐதராபாத்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு[2]
துணைவர்குடிவாடா நாகராணி
பிள்ளைகள்
  • குடிவாடா ரேகா
  • குடிவாடா அமர்நாத்

வாழ்க்கையும் பின்னணியும் தொகு

ராவ் 1955 மே 4 அன்று ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரத்தின் மிண்டி கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். தனது கல்வி காலத்தில், அருகிலுள்ள பள்ளியில் இருந்து இடைநிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார், பின்னர் மேலதிக கல்விக்காக விசாகப்பட்டினத்தின் இந்துஸ்தான் ஷிப்யார்ட் டிகிரி கல்லூரிக்கு சென்றார். இவர் பள்ளி குழந்தைகளுக்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது மற்றும் நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கேற்கவும் செய்தார்.[4]

தொழில் தொகு

ராவ் ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 1989 முதல் 1994 வரை ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், 1994 முதல் 1998 முடிய தொழில்நுட்பக் கல்விக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். 1998-இல், இவர் 12ஆவது இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் வணிகத்திற்கான குழு மற்றும் கலந்தாலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் மற்றும் 1998 ஆம் ஆண்டு வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ராவ் அப்பண்ணா ராவிற்கு மகனாகப் பிறந்தார். அவர் தனது 25 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு ஆகத்து 23 ஆம் நாள் குடிவாடா நாகராணி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தனர்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Members : Lok Sabha". Parliament of India, Lok Sabha. 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  2. "Gurunadha Rao Gudivada, Anakapalli Lok Sabha Elections 1998 in India LIVE Results - Latest News, Articles & Statistics". LatestLY. 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  3. "Gudiwada Nagamani, son quit TDP - Visakhapatnam News". The Times of India. 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  4. 4.0 4.1 "References Made To The Passing Away Of Shri Gudivada Gurunadha Rao, ... on 18 December, 2001". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  5. "Rao,Shri Gudivada Gurunadha - Lok Sabha".
  6. "Shri Gudivada Gurunadha Rao MP biodata Anakapalli". ENTRANCEINDIA. 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிவாடா_குருநாத_ராவ்&oldid=3480560" இலிருந்து மீள்விக்கப்பட்டது