குர்மேகர் கவுர்

குர்மேகர் கவுர் (Gurmehar Kaur பிறப்பு: செப்டம்பர் 24, 1996) ஓர் இந்திய மாணவ ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார் . [3] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோமர்வில் கல்லூரியில் தனது முதுகலைக் கல்வியினைப் படித்தார். பாகுபாட்டை அகற்ற உதவும் இங்கிலாந்தினைச் சார்ந்த தொண்டு நிறுவனமான அமைதிக்கான போஸ்ட்கார்ட்களுக்கான தூதராகவும் உள்ளார்[4].

குர்மேகர் கவுர்
எழுத்தாளர் ஹேப்பிமோனுடன் கவுர்
பிறப்பு24 செப்டம்பர் 1996 (1996-09-24) (அகவை 27)[1][2]
ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா)
தேசியம்இந்திய மக்கள்
கல்விஇளங்கலை ஆங்கிலம் (லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள்சோமர்வில் கல்லூரி ஆக்ஸ்போர்டு

பிப்ரவரி 2017 இல் ரம்ஜாஸ் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் அகில பாரதிய வித்யார்த்தி பர்கிசத் உறுப்பினர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து நடந்த 'சேவ் டியூ பிரச்சாரத்தில்' முக்கிய பங்காற்றியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

குர்மேகர் கவுர் ,ஜலந்தரில் ராஜ்வீந்தர் கவுர் மற்றும் கேப்டன் மந்தீப் சிங் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். லூதியானாவின் ஹார்வெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். இவரது தந்தை மந்தீப் சிங், ஆகஸ்ட் 6,1999இல் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள ராஷ்டிரியா ரைபிள் முகாம் தாக்கப்பட்டதில் உயிர்த்தியாகம் செய்த 7 இரானுவ வீரர்களில் ஒருவராவார்.

செப்டம்பர் 2019 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோமர்வில் கல்லூரியில், நவீன தெற்காசிய ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றார். [5] [6]

படைப்புகள் தொகு

  • சுமால் ஆக்ட்ஸ் ஆஃப் ஃப்ரீடம் (2018), பெங்குயின் ரேண்டம் ஹவுஸ்
  • தி யங் அண்ட் த ரெஸ்ட்லெஸ் (யூத் அண்ட் பாலிடிக்ஸ் இன் இந்தியா) (2019), பெங்குயின் புக்ஸ்

சான்றுகள் தொகு

  1. mehartweets (24 September 2017). "Raising hell for peace-Writer-@TIME'Next Gen Leader'-@UniOfOxford Specialising in South Asian Studies" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 17 August 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Gurmehar Kaur on Instagram: "I don't know about you but I'm not feeling 22 🎵 Here's to turning 23 in one of the oldest most beautiful libraries in the world surrounded…"". Instagram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2020.
  3. "Who is Gurmehar Kaur?" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/who-is-gurmehar-kaur/article17410287.ece. 
  4. "Who is Gurmehar Kaur? What's the ongoing #SaveDU campaign all about? All your questions answered" (in en). The Indian Express. http://indianexpress.com/article/india/who-is-gulmehar-kaur-whats-the-ongoing-savedu-campaign-all-about-all-your-questions-answered-4547653/. 
  5. Yerasala, Ikyatha (31 July 2019). "Young, restless and bold". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  6. "Gurmehar Kaur, Author at Weidenfeld-Hoffmann Trust". Weidenfeld-Hoffmann Trust (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 9 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மேகர்_கவுர்&oldid=3550605" இலிருந்து மீள்விக்கப்பட்டது