குலாப் சிங் லோதி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

குலாப் சிங் லோதி(Gulab Singh Lodhi) இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற ஒரு புரட்சியாளர்.

குலாப் சிங் லோதி
குலாப் சிங் லோதி அஞ்சல் தலை
பிறப்பு1903
உன்னாவு, உத்தரப் பிரதேசம் India
இறப்பு23 ஆகத்து 1935 (வயது 32)
அமினாபாத், லக்னோ, India
தந்தைதாகூர் ராம் ரத்தன் சிங் லோதி
மதம்இந்து


தொழில்சுதந்திரப் போராட்ட வீரர்

குலாப் சிங் லோதி 1903 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் உன்னாவு மாவட்டம் (சண்டிகா கெரா) ஃபதேபூர் சவுராசி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு லோதி ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தாகூர் ராம் ரத்தன் சிங் லோதி விவசாயி. அவரது குழந்தைப் பருவத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. சுதந்திர இயக்கத்தின் உற்சாகம் உச்சத்தில் இருந்தபோது கொந்தளிப்பான காலகட்டத்தில் அவர் வளர்ந்தார். லோதி பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றார்.

லக்னோவில் நடந்த ஊர்வலத்தில் குலாப் சிங் லோதி பங்கேற்றார், இது ஆகஸ்ட், 1935 இல் மூன்று வண்ண தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமினாபாத் பூங்காவிற்கு அணிவகுத்தது. கொடியை ஏற்றுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தப் பூங்காவை பிரித்தானிய துருப்புக்கள் சூழ்ந்தன. குலாப் சிங் லோதி ஆயுதப்படை நிகழ்ச்சியை மீறி, மூவர்ணக் கொடியுடன் ஒரு மரத்தில் ஏறினார். அவர் மரத்தின் மேல் கொடியை ஏற்றிக்கொண்டிருந்தபோது, ஆகஸ்ட் 1935 இல் ஒரு பிரித்தானிய அதிகாரியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். [1] லக்னோவின் அமினாபாத்தில் உள்ள ஜாண்டேவாலா பூங்காவில் அவர் இறந்தார். [2]

பெருமைகள் தொகு

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி 'குலாப் சிங் லோதி' நினைவாக இந்திய அரசு ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [3]

2004 ஆம் ஆண்டில் பூங்காவில் அவரது சிலை அமைக்கப்பட்டது, ஆனால் 2009 வாக்கில் பழுதடைந்த நிலையில் இருந்தது.[4]

குறிப்புகள் தொகு

  1. [http://www.istampgallery.com/gulab-singh-lodhi/ |title=Gulab Singh Lodhi |date=13 january 2015
  2. Tripathi, Ashish (5 October 2009). "From triumph tales to unsung history". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/lucknow/From-triumph-tales-to-unsung-history/articleshow/5087894.cms. பார்த்த நாள்: 15 April 2014. 
  3. website |url=http://www.istampgallery.com/gulab-singh-lodhi/%7Ctitle=[தொடர்பிழந்த இணைப்பு] Gulab Singh Lodhi |date=13 january 2015
  4. Tripathi, Ashish (5 October 2009). "From triumph tales to unsung history". http://timesofindia.indiatimes.com/city/lucknow/From-triumph-tales-to-unsung-history/articleshow/5087894.cms. பார்த்த நாள்: 15 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாப்_சிங்_லோதி&oldid=3241013" இலிருந்து மீள்விக்கப்பட்டது