கூகுள் கோட் ஜாம்

கூகுள் கோட் ஜாம் (Google Code Jam) என்பது ஒரு பன்னாட்டு நிரலாக்கப் போட்டியாகும். இது கூகுள் நிறுவனத்தால் வழங்கவும் நிர்வகிக்கவும் படுகிறது.[2]:{{{3}}} இந்த போட்டி 2003 இல் தொடங்கப்பட்டது.[3]:{{{3}}} போட்டியானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய படிமுறைக் கேள்விகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. போட்டியாளர்கள் தங்கள் தீர்வுகளைப் பெற எந்த நிரலாக்க மொழியையும், நிரலாக்கத் தளத்தையும் பயன்படுத்தலாம். 2003 முதல் 2007 வரை, கூகுள் கோட் ஜாம் டாப்கோடரின் இயங்குதளத்தில் நடத்தப்பட்டது . 2008 ஆம் ஆண்டு முதல் போட்டிக்காக தங்களின் சொந்த பிரத்யேக உள்கட்டமைப்பை கூகுள் பயன்படுத்துகிறது .

கூகுள் கோட் ஜாம்
நிகழ்நிலைசெயலில்
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்இணையம்
நாடுஉலகம் முழுவதும்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2003-
துவக்கம்2003
வருகைப்பதிவு35,500 (2019)[1]:{{{3}}}
புரவலர்கள்கூகிள்
வலைத்தளம்
https://codingcompetitions.withgoogle.com/codejam

2015 மற்றும் 2018[4]:{{{3}}} க்கு இடையில், விநியோகிக்கப்பட்ட படி முறைகளை மையமாகக் கொண்டு, கூகிள் 'டிஸ்ட்ரிபூடட் கோட் ஜாம்'ஐ நடத்தியது. [5]:{{{3}}} இந்த போட்டி அதற்கான தனியான தகுதி மற்றும் இறுதிச் சுற்றுகளுடன் நடத்தப்பட்டது. $10,000 முதல் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் கோட் ஜாமின் 2வது சுற்றுக்கு (3000 பேர் வரை) தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

பல கூகுள் கோட் ஜாம் போட்டி கேள்விகள் கல்வி ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. [6]:{{{3}}}

கடந்த வெற்றியாளர்கள் தொகு

டிஸ்ட்ரிபூடட் கோட் ஜாம் தொகு

போட்டி இறுதிப் சுற்று நடந்த இடம் போட்டியாளர்கள் 1வது இடம் 2வது இடம் 3வது இடம்
2018 டொராண்டோ, கனடா ?   மடேயூஸ் ராடெக்கி   கெவின் அதியென்சா   டொமெக் கிசாஜ்கா
2017 டப்ளின், அயர்லாந்து 3,000   ஆண்ட்ரூ அவர்   எவ்ஜெனி கபூன்   எரிக்-ஜான் கிரிஜ்ஸ்மேன்
2016 நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா 3,000   புரூஸ் மெர்ரி   யுசௌ கு   பிலிப் ஹலாசெக்
2015 சியாட்டில், வாஷிங்டன், அமெரிக்கா 3,000   புரூஸ் மெர்ரி   மார்சின் ஸ்முலேவிச்  டிங் வெய் சென்

நாடு வாரியாக முடிவுகள் தொகு

நாடு 1வது இடம் 2வது இடம் 3வது இடம்
  பெலாரஸ் 8 1 0
  சீனா 3 3 1
  ரஷ்யா 2 2 7
  போலந்து 2 1 1
  ஜப்பான் 1 3 2
  அர்ஜென்டினா 1 0 0
  ஸ்வீடன் 1 0 0
  அமெரிக்கா 0 2 4
  நெதர்லாந்து 0 2 0
  கனடா 0 2 0
  பிலிப்பைன்ஸ் 0 1 0
  உக்ரைன் 0 1 0
  தென் ஆப்பிரிக்கா 0 0 2
  ஸ்லோவாக்கியா 0 0 1

மேற்கோள்கள் தொகு

  1. "Qualification Round 2019 Round Overview". 2019-04-07.
  2. Dyer, J.; Gregersen, H.; Christensen, C.M. (2011). The Innovator's DNA: Mastering the Five Skills of Disruptive Innovators. Harvard Business Review Press. பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4221-4271-4. https://archive.org/details/innovatorsdnamas0000dyer. பார்த்த நாள்: 30 July 2018. 
  3. Lowe, J. (2009). Google Speaks: Secrets of the World's Greatest Billionaire Entrepreneurs, Sergey Brin and Larry Page. Wiley. பக். 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-50124-5. https://archive.org/details/googlespeakssecr0000lowe. பார்த்த நாள்: 5 August 2018. 
  4. "FAQ - Code Jam". 2019-04-07. This year we won't be offering a Distributed Code Jam track, allowing us to focus our attention on evolving our coding competitions and improving the contestant experience.
  5. Ghoshal, Abhimanyu (11 மார்ச்சு 2015). "Registration for Google's Code Jam 2015 is Now Open". The Next Web. Archived from the original on 4 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2018.
  6. Dymchenko, Sergii; Mykhailova, Mariia (2015). "Declaratively solving tricky google code jam problems with prolog-based ECLiPSe CLP system". Proceedings of the 30th Annual ACM Symposium on Applied Computing: 2122–2124. doi:10.1145/2695664.2696032. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4503-3196-8. https://dl.acm.org/citation.cfm?id=2696032. பார்த்த நாள்: 4 August 2018. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_கோட்_ஜாம்&oldid=3356300" இலிருந்து மீள்விக்கப்பட்டது