கூட்டுப்பண்ணை

சோவியத் ஒன்றியத்தின் வேளாண் கூட்டுறவு அமைப்பு

கூட்டுப்பண்ணை (kolkhoz)[a] (உருசியம்: колхо́з, பஒஅ[kɐlˈxos]( கேட்க), a contraction of коллективное хозяйство, collective ownership, kollektivnoye khozaystvo) என்பது சோவியத் ஒன்றியத்தின் வேளாண் கூட்டுறவு அமைப்பாகும். இவை அரசுப் பண்ணைகளுடன் இணைந்தே இயங்கின. இவை அந்நாட்டின் அக்தோபர்ப் பரட்சிக்குப் பின் உருவாகியய சமூகமயமாகிய வேளாண்மை அமைப்புகளாகும். இவை நிலவுடைமைப் பண்ணை அடிமை முறை, நிலக்கீழார்களின் பண்ணைகள், வீட்டுப் பண்ணைகளின் வேளாண் அமைப்புகளுக்கு மாற்றாக அமைந்தனவாகும்.

பரப்புரைத் தொழிலாளரின் பெருமுயற்சியால் 1920 களில் கூட்டுப்பண்ணைகள் தன்னியல்பாக எழுச்சி கண்டன. தொடக்கத்தில் இவை உருசியாவின் மரபான வேளாண்மைக் கூட்டுறவு அமைப்புகளைப் போலவே அமைந்தாலும் பின்னர் படிமலர்ந்து கூட்டுப்பண்ணைகள் ஆகின. அக்தோபர் புரட்சியின் முதல் 15 ஆண்டுகளில் உருவாகிய படிப்படியாக உருவாகிய கூட்டுப்பண்ணைகள், 1928 இல் அரசு எதிர்ப்புரட்சியாளருடன் நடத்திய வலிவான பரப்புரை வழியாகவே உருவாகின.

பெயர் தொகு

உருசியச் சொல்லே சில மொழிகளில் மாற்றமின்றிப் பயன்பட, மற்ற சில மொழிகளில் அச்சொல் மொழிக்கேற்ற ஒலிப்பு மாற்றத்தோடு பயன்பட்டு வருகிறது. எ.கா: உக்ரைனியன்: колгосп, பெலருசிய மொழி: калгас, romanized: kalhas, இலித்வேனியன்:kolūkis, இலாத்துவா:kolhozs}}.

கூட்டுறவு அமைப்பாக கூட்டுப்பண்ணை தொகு

கூட்டுப்பண்னை பயிரீட்டில் ஒரு கூட்டுறவு அமைப்பாகவே விளங்கியது. 1930 களில் இருந்து அரசியல் அமைப்பில் அமைந்த கூட்டுப்பண்ணையின் அரசுதரப் பட்டயம், இதைக் கூட்டுறவு நெறிமுறைகண் அடிப்படையிலேயே வரையறுத்தது. இந்தப் பட்டயத்தின்படி, இது உழவர்களின் தன்னார்வக் கூட்டுறவு உழைப்பில் மலர்ந்த வேளாண் விளைச்சல் அமைப்பாகும. இது சமூக உடைமை சார்ந்த தந்மேலாண்மை நெறிகளின்படியும் மக்களாட்சி இறையாண்மையுள்ள திறந்த ஆட்சியமைப்பாகும். இதில் பண்ணை வாழ்க்கைசார் அனைத்துக் கூறுபாடுகளையும் முடிவெடுக்கும் உரிமை அனைத்து உறுப்பினர்களின் முனைப்பான பங்கெடுப்பால் அமைகிறது".[1]

பணி மேலாண்மை தொகு

செயலணி தொகு

புதிய கூட்டுப்பண்ணைகளில் அவற்றின் அகச்செயல்பாடு மிகவும் இன்றியமையாததாகும். இதற்குக் கூட்டுப்பண்ணையில் செயலணிகள் எனும் பல உழவர் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்களே நேரடியாகச் செயலில் ஈடுபடுகின்றன. 1929 ஆம் ஆண்டு சூலை மாத நிலவரப்படி, 200 முதல் 400 வீடுகள் அமைந்த பெரிய கூட்டுப்பண்ணைகள் 15 முதல் 30 வீடுகள் அமைந்த செயலணிகளாகப் பிரிந்து பணிபுரியும் நடைமுறை வழக்கில் வந்துவிட்டது.'[2] செயலணி ஒரு கள உழவரின் தலைமையில் இயங்கியது. அவர் செயலணித் தலைவர் எனப்பட்டார். இவ்வாறு கள உழவர்களே தலைவராகி, சில பெண்தலைமைகளும் உருவாகின.

1950 அளவில் கூட்டுப்பண்ணை இணைப்புகளுக்குப் பிறகு ஊரகக் கூட்டுப்பண்ணை எனும் சிக்கலான செயலணிகள் பெரிய கூட்டுப்பண்ணையின் உட்பிரிவுகளாக உருவாகின.

கூட்டுப்பண்ணை அலகு தொகு

செயலணிகள் இணைப்புகள் எனும் மேலும் சிறிய கூட்டுப்பண்ணை அலகுகளாகவும் பிரிக்கப்படலாம். இந்த அலகுகள் பண்ணையின் குறிப்பிட்ட செயலையோ அல்லது அனைத்து செயல்களையுமோ மேற்கொள்ளலாம்.

இசுட்டாலின் காலக் கூட்டுப்பண்ணைகள் தொகு

அடிப்படை புள்ளிவிவரங்கள், சோவியத் ஒன்றியம் தொகு

சோவியத் ஒன்றியக் கூட்டுப்பண்ணைகளும் அரசுப் பண்ணைகளும்: பண்ணைகளின் எண்ணிக்கை, சராசரி அளவு, வேளாண் விளைச்சலில் அவற்றின் பங்கு

ஆண்டுr கூட்டுப்பண்ணை எண்ணிக்கை அரசுப் பண்ணை எண்ணிக்கை கூட்டப்பண்ணைப அளவு, எக்டேர் அரசுப்பண்ணை அளவு, எக்டேர் கூட்டுப்பண்ணை பங்கு அரசுப் பண்ணை பங்கு வீட்டுப் பங்கு
1960 44,000 7,400 6,600 26,200 44% 18% 38%
1965 36,300 11,700 6,100 24,600 41% 24% 35%
1970 33,000 15,000 6,100 20,800 40% 28% 32%
1975 28,500 18,100 6,400 18,900 37% 31% 32%
1980 25,900 21,100 6,600 17,200 35% 36% 29%
1985 26,200 22,700 6,500 16,100 36% 36% 28%
1990 29,100 23,500 5,900 15,300 36% 38% 26%

தகவல் வாயில்: Statistical Yearbook of the USSR, various years, State Statistical Committee of the USSR, Moscow.

1991 க்குப் பின் மறைந்த கூட்டுப்பண்ணைகள் தொகு

உருசியா, உக்ரைன், மால்தோவா கூட்டுப் பண்ணைகளும் தனியார்க் கூட்டுக்குழுமப் பண்ணைகளும், 1990-2005

உருசிய உக்ரைன் மால்தோவா
ஆண்டு கூட்டுப்பண்ணை எண்ணிக்கை கூட்டுக்குழுமப்பண்ணை எண்ணிக்கை கூட்டுப்பண்ணை எண்ணிக்கை கூட்டுக்குழுமப்பண்ணை எண்ணிக்கை கூட்டுப்பண்ணை எண்ணிக்கை கூட்டுக்குழுமப்பண்ணை எண்ணிக்கை
1990 12,800 29,400 8,354 10,792 531 1,891
1995 5,522 26,874 450 10,914 490 1,232
2000 3,000 27,645 0 14,308 41 1,386
2005 2,000 22,135 0 17,671 4 1,846

தகவல் வாயில்கள்:

மேற்கோள்கள் தொகு

  1. Russian plural: kolkhozy; anglicized plural: kolkhozes.
  1. Standard Kolkhoz Charter, Agropromizdat, Moscow (1989), pp. 4,37 (Russian).
  2. R W Davies, The Soviet Collective Farm 1929–1930 (Harvard University Press, Cambridge, Massachusetts, 1980), p.59.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kolkhoz
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுப்பண்ணை&oldid=3759905" இலிருந்து மீள்விக்கப்பட்டது